[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 01:37.43 PM GMT ]
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடந்த காலம் முழுதுவம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்த இந்த துரதிஷ்டவசமான இனவாத நிலைமைகள் இறுதியில் அண்மையில் இனவாத வன்முறையாக வெடித்தன.
லண்டனில் நேற்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்களும், தமிழர்களும் ,சிங்களவர்களும் கலந்து கொண்டனர்.
சகல இனங்களுக்கு சொந்தமான இலங்கையில் அனைவரும் ஒன்றிணைந்து இன மற்றும் மத ரீதியான அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்க பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பம் மகந்தான சந்தர்ப்பம் என சம உரிமை இயக்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் இனவாத வன்முறைகளை தூண்டும் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது, அவற்றை மறைமுகமாக ஆதரிப்பதாகவும் எனவும் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagu4.html
சிறுபான்மையினரை பொருளாதார உயிர்ப் பலியில் நசுக்கும் சிங்களப் பெரும்பான்மை
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 12:15.11 PM GMT ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி ஆகிய கட்சிகள் இணைந்து முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் அரச ஆதரவு இனவாத அமைப்புகள் தமிழர்கள் மீது சொத்து அழிப்பு, இன அழிப்பு என பல்வேறு இடங்களை சுமார் ஆறு தசாப்தகாலமாக அரங்கேற்றியுள்ளனர்.
இவற்றுக்கு மகுடம் சுட்டினதுபோல 1983ம் ஆண்டு தமிழர்கள் மீதான இனக் கலவரம் தமிழர் இனக் கொலை வெறியாட்டத்திற்கும் பொருளாதார சொத்தழிற்பிற்கும் வழிவகுத்தது.
அதே கைங்காரியங்களில் வெற்றிபெற்ற இனவாதிகள் இன்று சசோதர முஸ்லிம் மக்களின் பொருளாதாரத்தை சீரழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை இல்லாதொழித்தது இனவாதிகளின் சதித்திட்டத்தின் ஒரு அங்கமே அளுத்கம, பேருவளை, தர்க்கா நகர் தாக்குதல்.
இந்த தாக்குதல் மூலம் முஸ்லிம் மக்களின் பொருளாதாரத்தில் சுமார் 500 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்ததாக்குதல் இனவாதிகளினால் நடத்தும் பொழுது பாதுகாப்பு அரச இயந்திரம் பாரமுகமாக இருந்துள்ளது.
சிறுபான்மையினராகிய தமிழர்களின் சொத்து, தமிழர்களின் வாழ்வாதார இருப்பையே அழித்து உயிரைக் கொன்று, கொன்றுகொண்டு இருக்கின்ற இனவாத அரச இயந்திரம் இன்று முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் வெற்றிகண்டுள்ளது.
இந்த இடத்தில் ஒன்றைதெட்டத் தெளிவாக சொல்ல வேண்டும். முஸ்லிம்கள் மீதான இந்ததாக்குதலை உலக நாடுகள், சர்வதேச அமைப்புகள் உடன் கண்டித்துள்ளது என்றால்,
சிறுபான்மை தமிழர்கள் மீதான தாக்குதல், கொலைகள், சொத்தழிப்புகளை கண்டித்து தமிழர் தமது உரிமைக்காக நடாத்திய போராட்டங்களால் உலக நாடுகளின் கவனம் தமிழர்பால் திரும்பியது.
இவ்வேளை இன்னொரு சிறுபான்மை இன மக்கள் மீதான தாக்குதலால்தான் உலகநாடுகள் பொது அமைப்புகளின் கவனம் உடன் திரும்பியது.
இது சிந்திக்க வேண்டிய காலமிது வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மலையகம் என தமிழர்கள் செறிந்து வாழும் பிராந்திய நாலு மாகாணங்களாகும். இன்று இந்த 3 பிராந்தியம் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மகிந்த அரசை எதிர்க்கும் கட்சிகளிடம் உள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் மேற்கில் எமது ஜனநாயக மக்கள் முன்ணணியிடமும் தமிழ் மக்களின் தலைமை கட்சிகளாக தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதை இன்று அடக்குமுறைக்குள்ளாகிய முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் சொல்கின்றேன் என்றால் இந்தநாட்டில் அனைத்து முஸ்லீம் கட்சிகளும் இன்று மகிந்த ராஜபக்ச அரசுடன் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
மேலும் இனவாதிகளுக்கு சார்பாக நடப்பதும் மனவேதனையை தருகின்றது. அண்மையில்கூட யுத்தக் குற்றவிசாரணை பற்றி கருத்து தெரிவித்த நீதிக்கு பொறுப்பான அமைச்சர் இது 5 வருடத்திற்கு முற்பட்ட நிகழ்வு என்று தட்டிக்கழிக்கும் வேளையில், ஊடகவியலாளர் ஒருவர் 5 நாட்களுக்குமுன் நடைபெற்ற முஸ்லிம் மக்கள்மீதான இந்ததாக்குதலையும் சுட்டிக் காட்டியபோது அது பழைய நிகழ்வு, இது புதிய நிகழ்வு என்று அமைச்சர் கூறிய கருத்தானது ஏற்புடையதல்ல என்றார்.
மேலும் கொலைக் குற்றவாளி 10 வருடம் சென்றபின் பொலிசாரிடம் பிடிபடும் பொழுது இது பழைய நிகழ்வு என்று பொலிசார் விடுவார்களா? அல்லது பழைய குற்றத்திற்கு நீதியில் தாண்டணை வழங்காமல் இருப்பதற்கு இடம் உண்டா? என கேள்வி எழுப்பினார் பாஸ்க்கரா.
கிழக்கு மாகாணத்திலே நடைபெற்ற தேர்தலின் பின் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு தவற விடாதிருக்குமானால் இன்று முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் பிரச்சினை சர்வதேச கவனத்தை மேலும் அடைந்திருக்கும்.
ஆகவே தமிழ்க் கட்சிகளின் வழிமுறையைப் பின்பற்றி முஸ்லிம் காங்கிரஸ் உட்பட முஸ்லீம் கட்சிகளும் மலையககட்சிகளும் ஒற்றுமையாக கருத்து வேற்றுமைகள் இன்றி முடிவெடுக்க வேண்டியகாலம் வந்துவிட்டது என்றார் பாஸ்க்கரா.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagu2.html
இலங்கை கடற்படையினர் மீது தமிழகப் பொலிஸார் வழக்குப் பதிவு
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 12:12.39 PM GMT ]
அவர்களின் தாக்குதலில் இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகள் சேதமடைந்தன.
படகுகள் உடைந்து கடலில் மூழ்கியதால் அதில் இருந்த மீனவர்கள் சீரிஸ், பாஸ்டன், ஜான்பால், கீதன், சென்ரின் ஆகியோர் கடலில் குதித்து தத்தளித்தனர். அவர்களை மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.
இலங்கை கடற்படையினர் தாக்குதலில் உடைந்த படகின் உரிமையாளராக பவியான், சம்பவம் குறித்து மீன்பிடித்துறை அதிகாரிகளிடமும், மண்டபம் கடற்படை பொலிஸிலும் முறைப்பாடு செய்தார்.
இதன் அடிப்படையில் இலங்கை கடற்படையினர் மீது மண்டபம் மரைன் பொலிஸார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக மீனவர்களின் சொத்துக்களை சேதப்படுத்தியது, ஆயுதங்களை காட்டி மிரட்டியது, மீனவர்களை கொலை செய்ய முயற்சித்தது போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagu1.html
Geen opmerkingen:
Een reactie posten