தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

வெளிநாட்டு புலிகளை கைதுசெய்ய இலங்கை அரசின் புது யுக்தி !

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் முன் நாள் புலிகள் உறுப்பினர்களை கைதுசெய்து, அவர்களை இலங்கைக்கு கொண்டுவரும் நடவடிக்கை ஒன்றில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு என்று கூறப்படுகிறது. இலங்கையில் மகிந்தரின் செல்வாக்கு சற்று குறைந்து வருகிறது. இன் நிலையில் இதுபோன்ற அதிரடிக் கைதுகளை மேற்கொண்டு, மீண்டும் சிங்களவர் மத்தியில் மகிந்த குடும்பத்தின் செல்வாக்கை உயர்த்துதல். மற்றைய விடையம் கோட்டபாய குறித்தது ஆகும். இவருக்கு சமீப காலமாக அரசியலில் குதிக்க ஆசை. இந்த இரண்டு காரணங்களால் தான், இப்படியான கைதுகளை மேற்கொள்ள கோட்டபாய திட்டமிட்டு வருகிறார். இது இவ்வாறு இருக்க இவர் கையாளும் உக்தி என்ன என்று பார்போம் !
கடந்த சில தினங்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடத்தினார் என்று ஒரு நபருக்கும் 30 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இந்த வழக்கு தொடரப்பட்ட நாள் முதல் தீர்வு வழங்கும் நாள் வரை, சந்தேக நபர் நீதிமற்றம் வரவே இல்லை. ஆம அவர் கனடாவில் வசித்து வருகிறார். ஆனால் அவர் இலங்கையில் இல்லாத பட்சத்திலேயே இலங்கையில் வழக்கை நடத்தி முடித்திருக்கிறார்கள். இதனூடாக அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தண்டனைய காட்டி, அவருக்கு இன்ரர் போல்(சர்வதேச பொலிசாரின்) பிடியாணையை பிறப்பிக்க நடவடிக்கை அனைத்தையும் மேற்கொண்டுள்ளது இலங்கை புலனாய்வுத்துறை.
இதுமட்டும் அல்ல. ஒருவர் மீது தீவிரவாதி என்று வழக்கு தொடுப்பதும், பின்னர் அந்த வழக்கில் தமக்கு தேவையான ஆட்களை சந்தேக நபர்களாக இணைப்பதையும் நாம் அவதானிக்க முடியும். இதனூடாக இப்படி சந்தேக நபர் என்று இணைத்துக்கொள்ளப்பட்ட நபர்கள் வெளிநாட்டில் இருந்தால் அவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்க, இலங்கை சர்வதேச பொலிசாரை நாடுகிறது. இலங்கை அரசானது பல வருடங்களான சர்வதேச பொலிசாரை தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். இது பல தடவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எவரும் துணிந்து இதற்கு எதிராக ஒரு வழக்கை போடவில்லை. இன் நிலை நீடித்தால் இலங்கை அரசு கணிசமான வெற்றிகளைப் பெறும். சர்வதேச பொலிசாரை இலங்கை அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்ற விடையம், போர்குற்றம் மற்றும் இன அழிப்பு எவ்வாறு சர்வதேசத்திற்கு எட்டியதோ அதுபோல வெளியிடப்படவேண்டிய விடையம் ஆகும். இதனை புலம்பெயர் தமிழ அமைபுகளே செய்யவல்லவை.
இதனை நாம் இன்று தடுக்காவிட்டால், நாளை புலம்பெயர் நாட்டில் உள்ள பல தமிழர்கள் மீது இவ்வாறு பொய்யான வழக்குகளைப் போட்டு, அவர்கள் மீதும் இன்ரர் போல் வாரண்டை இலங்கை அரசு போடும் என்பதனை நாம் முதலில் உணரவேண்டும். 
http://www.athirvu.com/newsdetail/283.html

Geen opmerkingen:

Een reactie posten