தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 juni 2014

சர்வதேச விசாரணை குழு இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை!!

அடிப்படைவாத பயங்கரவாதத்தை வேருடன் அழிக்க வேண்டும்: சஜித் பிரேமதாச
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 11:48.42 AM GMT ]
பல்வேறு அடிப்படைவாத அமைப்புகள் நாட்டை அழிக்க முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
எந்த அடிப்படைவாதிகளாக இருந்தாலும் பேதமின்றி சகலரையும் சட்டத்திற்கு முன் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முப்பது வருடங்களாக நாட்டில் இருந்து வந்த பயங்கரவாதத்தை தோற்கடித்த அரசாங்கம் நாட்டில் ஆட்சியில் உள்ளது.
இதனால் தற்போது நாட்டில் செயற்பட்டு வரும் அடிப்படைவாத பயங்கரவாதத்தை அழித்தொழிக்கவும் அவற்றுடன் தொடர்புடையவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வரவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கம் என்ற வகையில் இது நாட்டுக்காக செய்ய வேண்டிய கடமை. அதனை செய்ய தவறினால் நாடு எரிமலையாக மாறிவிடும்.
நாட்டில் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை உருவாக இடமளிக்கக் கூடாது. நாட்டை வலுவானதாக்கி, இன, குல, மத பேதங்களை புறக்கணிக்கும், சகலருமு் சகோதரத்துவமாக வாழும் நாடு இலங்கை என்பதை உலகத்திற்கு காண்பிக்க வேண்டும்.
நாட்டில் வாழும் சகல அடிப்படைவாதிகளும் நாட்டிக்கு துரோகம் செய்து வருகின்றனர். இது நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய பயங்கரவாதமாகும். இதனால் இந்த பயங்கரவாதத்தை வேருடன் அழிக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagu0.html
அனைத்துப் பல்கலைக் கழக ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ கைது
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 11:39.13 AM GMT ]
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை அச்சுறுத்தி அவர்கள் மீது தாக்குதலை நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர் சங்கத்தின் தலைவரையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLaguz.html
சர்வதேச விசாரணை குழு இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 04:09.39 AM GMT ]
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை, அதற்கான ஆலோசனை மற்றும் ஆதரவு நிபுணர்களை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
பேரவையின் பேச்சாளர் ரூபட் கொல்வில்லி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ள அவர், இந்த நிபுணர் குழு இறுதிப்படுத்தப்பட்டவுடன் அது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்படும் என்று ரூபர்ட் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விசாரணைக்கென உரிய வழிகாட்டிகள் மற்றும் சுயாதீனமான உறுதிப்படுத்துதல் மற்றும் விசாரணையின் இறைமை போன்ற விடயங்கள் கருத்திற் கொள்ளப்படவுள்ளதாகவும் ரூபர்ட் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த குழு 12 பேரை உள்ளடக்கியிருக்கும். இந்தக் குழுவின் இணைப்பாளராக சான்ட்ரா பெய்டாஸ் என்ற 20 வருட அனுபவம் கொண்ட மனித உரிமைகள் நிபுணர் கடமையாற்றுவார்.
இந்தக்குழு 2014 ஜூன் நடுப்பகுதி முதல் 2015 ஏப்ரல் நடுப்பகுதி வரையில் தமது விசாரணை வரையறையை கொண்டிருக்கும் என்றும் ரூபர்ட் குறிப்பிட்டார்.
இதேவேளை குழுவின் இறுதியறிக்கை 2015 ஆம் ஆண்டு மார்ச்சில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் வெளியிடப்படும் என்றும் ரூபர்ட் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagq3.html

Geen opmerkingen:

Een reactie posten