தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

மங்கள வாயை பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்!- கோத்தபாய!!

நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ள சிறில் ரமபோசா யூலை 7ம் திகதி இலங்கை விஜயம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 10:49.48 AM GMT ]
தென் ஆபிரிக்காவின் உதவி ஜனாதிபதியாக தற்போது பதவி வகிக்கும் சிறில்  ரமபோசா அந்த நாட்டின் இலங்கைக்கான நல்லிணக்க முயற்சிகளை தொடர்வதற்காக யூலை 7ம் திகதி இலங்கைக்கு வியயம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜாக்கப் சூமா இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவுவது குறித்த தனது ஆர்வத்தை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னர் அவர் ரமபோசாவை இந்த பணிகளுக்காக நியமித்திருந்தார்.   ரமபோசாவுடன் இலங்கை வரவுள்ள உயர்மட்ட தூதுக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை வரும் ரமபோசா அரச உயர் மட்டத்தினரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடவுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmx2.html
மங்கள வாயை பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்!- கோத்தபாய
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 05:18.57 AM GMT ]
மங்கள சமரவீர வாயைப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் தேவைகளுக்காக நாட்டின் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்களை மங்கள சமரவீர வெளிப்படுத்தி வருகின்றார்.
வாய்க்கு பிரேக் இன்றி இவ்வாறான கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தால், மக்கள் மங்களவிற்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.
மங்கள சமரவீர இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
இதனால் முஸ்லிம் மக்கள் இராணுவத்தின் மீது நம்பிக்கையை இழக்கக் கூடும்
இவ்வாறு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரச இரகசிய சட்டங்களின் அடிப்படையில் மங்களவின் கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmwy.html

Geen opmerkingen:

Een reactie posten