தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juni 2014

இரத்மலானையில் பள்ளிவாசலைத் தீக்கிரையாக்க முயற்சி!

ஹக்கீம் வெளிநாட்டு தூதுவர்களுக்கு சொல்வதில் தவறில்லை: அமைச்சர் வாசு­

இது தொடர்­பாக சமூக ஒரு­மைப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்கையில்,
இலங்­கையில் இடம்­பெற்ற இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்­பாக விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்கு ஆணை­யாளர் நாயகம் நவ­நீ­தம்­பிள்ளை அமைத்த சர்­வ­தேச விசா­ர­ணைக்­கு­ழுவை எதிர்க்­கின்றோம். எமது பாரா­ளு­மன்­றத்­திலும் இதற்­கெ­தி­ராக பிரே­ர­ணையை நிறை­வேற்­றினோம். ஏனென்றால் இவ்­வா­றான விசா­ரணை இலங்­கையின் இறை­யாண்­மையை மீறு­வ­தாகும்.
ஆனால், தனது சமூகம் சார்ந்த பிரச்­சி­னைகள் பாது­காப்பு தொடர்­பாக அமைச்சர் ஹக்கீம் வெளி­நாட்டுத் தூது­வர்­களை சந்­தித்து தெளி­வு­ப­டுத்­து­வதில் எவ்­வி­த­மான தவறும் இல்லை.
அதற்கு அமைச்­ச­ருக்கு உரிமை உள்­ளது. உதா­ர­ண­மாக தொழி­லா­ளர்­க­ளுக்கு எதி­ராகஅர­சாங்கம் அடக்கு முறையை கடைப்­பி­டிக்­கு­மானால் அரசில் அமைச்­ச­ராக பதவி வகிக்கும் நான் அதனை தடுக்க முயற்­சி­களை மேற்­கொள்வேன்.ஆனால் அது வெற்றி பெற­வில்­லை­யானால் சர்­வ­தேச ரீதி­யாக அப்­பி­ரச்­சி­னையை கொண்டு செல்வேன்.
அது­மட்­டு­மல்­லாது உலகில் தொழி­லா­ளர்­க­ளுக்­கான அமைப்­பு­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­துவேன். அதற்கு எனக்கு உரி­மை­யுள்­ளது. அர­சிற்குள் இருந்­தாலும் பல்­வேறு விட­யங்­களில் முரண்­பா­டுகள் உள்­ளன. சட்­டக்­கல்­லூரிசட்­டக்­கல்­லூரி பரீட்­சைகள் சிங்­க­ளத்­திலும் தமி­ழிலும் நடத்­தப்­ப­டு­வது இரத்துச் செய்­யப்­பட்டு ஆங்­கி­லத்தில் மட்­டும்தான் நடத்­தப்­ப­டு­மென தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. இதனை கடு­மை­யாக எதிர்க்­கின்றேன். அர­சாங்­கத்­திற்கும் எனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளேன்.
இது கைவிடப்படா விட்டால் இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள சர்வதேச ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப் பேன் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்
கார தெரிவித்தார்
http://www.jvpnews.com/srilanka/75031.html

இரத்மலானையில் பள்ளிவாசலைத் தீக்கிரையாக்க முயற்சி

பழைய ஆடைகள் எரிந்து கதவுக்கு தீ பரவியதால் பள்ளிவாசலில் தீப்பிளம்பு கிளம்புவதையும் புகைவருவதையும் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அங்கு விரைந்து சென்று தீயை நீர் ஊற்றி அணைத்து பெரும் அனர்த்தத்தை தடுத்துவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.
இப்பள்ளிவாசல் 67 வருடமாக இருந்துவருகின்றது. எனினும் இதுகாலவரை எந்தவொரு அசம்பாவிதமும் இடம்பெறவில்லை. அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீதும், பள்ளிவாசல்கள் மீதும் தொடரான தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் இப்பள்ளி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரத்மலானை விமான நிலையம் அமைந்துள்ள உயர்பாதுகாப்பு வலயத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த வீதியால் அதிகாலை 1.30 மணியளவில் சென்றவர்கள் யார்  என்பதை அப்பகுதியிலுள்ள பாதுகாப்புக் கமராக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியுமென்பதால் இது சூத்திரதாரிகளை இலகுவாக கண்டுகொள்ள முடியுமென அசாத் சாலி தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்று வருகையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதேவேளை, இந்தப் பள்ளிவாசல் சம்பவம் குறித்து பொலிஸில் முறையிட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் மோப்பநாய்கள் சகிதம் தேடுதலையும் அப்பகுதியில் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
http://www.jvpnews.com/srilanka/75034.html

Geen opmerkingen:

Een reactie posten