தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

உயர் அழுத்த மின் கம்பங்கள் முறிந்ததில் இருளில் மூழ்கியது தீவுப்பகுதி!

கிரான்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு 2 பேர் பலி! இருவர் காயம்!!

மற்றும் இருவர் காயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீதியில் நின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நால்வர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூடுநடத்தியவர்கள் தாம் வந்த மோட்டார் சைக்கிளையும் போட்டுவிட்டு ஓட்டோவில் தப்பிச் சென்றனர்.
வீதியில் துப்பாக்கிச் சன்னங்கள் சிதறிக்கிடந்தன. போதை வர்த்தகத்தில் ஈடுபடும் இரு குழுக்களுக்கிடையோன மோதலே இந்தச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/74974.html

உயர் அழுத்த மின் கம்பங்கள் முறிந்ததில் இருளில் மூழ்கியது தீவுப்பகுதி!

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் வீசிய கடும் காற்றினால் காரைநகர் – பொன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த உயர் அழுத்த மின்கம்பங்கள் மூன்று முறிந்து வீழ்ந்து மின்சாரக் கம்பிகளும் அறுந்தன.
இதனால் காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை, புங்டுதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்டைதீவு போன்ற பகுதியில் இருளில் மூழ்கியுள்ளன.
யாழ். – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுவரும் இந்த வேளையில் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் வீதியால் பயணம் செய்தோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
தடைப்பட்டுள்ள மின்சாரத்தை மீள வழங்குவதற்கான துரித நடவடிக்யைில் இலங்கை மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

post_damage
http://www.jvpnews.com/srilanka/74971.html

Geen opmerkingen:

Een reactie posten