தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

நகர அபிவிருத்தி அதிகாரசபையை கடனாளியாக்கிய பாதுகாப்புச் செயலாளர்!

சர்வதேச சவால்களை எதிர்கொள்ள வலுவான எதிர்க்கட்சி அவசியம்: ரோஹித்த அபேகுணவர்தன
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 08:29.17 AM GMT ]
சர்வதேசத்தில் இருந்து வரும் சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு வலுவான எதிர்க்கட்சி ஒன்று அவசியம் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியில் இருக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளால் வலுவான எதிர்க்கட்சியை உருவாக்குவதில் தடையேற்பட்டுள்ளது.
முக்கியமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விரட்டப்பட்டவர்கள் எதிர்க்கட்சியில் இருப்பதால், அவர்கள் வலுவான எதிர்க்கட்சி உருவாகுவதற்கு தடையாக இருந்து வருகின்றனர் எனவும் அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbms3.html
நகர அபிவிருத்தி அதிகாரசபையை கடனாளியாக்கிய பாதுகாப்புச் செயலாளர்!
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 08:46.56 AM GMT ]
நகர அபிவிருத்தி அதிகாரசபை 22 ஆயிரத்து 680 மில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வருவதுடன் அதன் அனைத்து திட்டங்களும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வழிக்காட்டலில் மேற்கொள்ளப்படுவதால், அந்த நிறுவனம் பாரிய கடன் சுமையை எதிர்நோக்கியுள்ளது.
அத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பலவேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் இராணுவத்தினர் உட்பட முப்படையினரை பயன்படுத்தி வருகிறார்.
தொழிலாளர்கள், தச்சு வேலை, திட்டப் பணிகள் உட்பட சகல பணிகளிலும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், ஆளணிக்கு வழங்கப்படும் கூலி மீதமாகியுள்ளது.
இந்த நிலையிலும் 22 ஆயிரத்து 680 மில்லியன் கடன் சுமையை அதிகாரசபை எதிர்நோக்குவது பாரதூரமான நிலைமை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன வழங்கிய பதிலில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbms4.html

Geen opmerkingen:

Een reactie posten