[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 06:47.10 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு துறைகள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக 38 ஆலோசகர்களை நியமித்துள்ளார். அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு, அலுவலகம், வாகனம் உள்ளிட்ட இதர தேவைகளுக்கு வருடமொன்று நான்கரை கோடி ரூபா செலவிடப்படுகின்றது.
எனினும் அரசாங்கம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் முக்கிய பிரச்சினைகளின் போது இந்த ஆலோசகர்களின் பங்களிப்பு போதுமானதாக இருப்பதில்லை. அவர்கள் தங்கள் பாட்டில் இருந்து விடுவது வழக்கம். இது குறித்து தற்போது ஜனாதிபதி கடும் அதிருப்தியடைந்துள்ளார்.
எனினும் அரசாங்கம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் முக்கிய பிரச்சினைகளின் போது இந்த ஆலோசகர்களின் பங்களிப்பு போதுமானதாக இருப்பதில்லை. அவர்கள் தங்கள் பாட்டில் இருந்து விடுவது வழக்கம். இது குறித்து தற்போது ஜனாதிபதி கடும் அதிருப்தியடைந்துள்ளார்.
தனது மனக்கொதிப்பை ஒரு சில ஆலோசகர்களிடமும் கடுமையான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு குறைவான ஆலோசகர்களே இருந்த போதிலும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்தளவுக்கு அவர் நெருக்கடிகளை எதிர்கொண்டதில்லை.
இது தொடர்பாக ஜனாதிபதி சுட்டிக் காட்டியபோது ஒரு ஆலோசகர், சந்திரிக்கா காலத்தில் ஜனாதிபதி மாளிகைக்குள் இனவாதிகளை போஷிக்கவில்லை என்று பதிலளித்துள்ளார். இது ஜனாதிபதிக்கு சினமூட்டியதில் கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார்.
இந்நிலையில் சீஷெல்ஸ் இல் இருந்து ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் தமிழ், முஸ்லிம் முன்னாள் அரசியல்வாதிகளில் சிலர் அவருக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmsy.html
மகிந்தவின் அரசியலுக்கு சவக்குழியை தோண்டுகிறார் கோத்தபாய
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 07:06.16 AM GMT ]
கோத்தபாயவின் இராணுவ நிழலானது வடக்கு கிழக்கு மக்கள் மீது மாத்திரமல்லாது முழு நாட்டிலும் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தனது அன்புக்குரிய தம்பி விரும்பியதைச் செய்வதற்கு இடமளித்துள்ள கொள்கையானது முழு நாட்டிலும் பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் சில அடிப்படைவாத சக்திகளை பாலூட்டி வளர்த்து விட்டதுடன் நின்று விடாமல், அவற்றிற்குப் பாதுகாப்பும் வழங்கியுள்ளார். இதற்கு பொதுபல சேனா சிறந்த உதராணமாகும்.
பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரின் செயற்பாடுகள் இயற்கைக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சின் பலத்தில் மேற்கொண்டு வரும் ஒன்றாக இருக்கின்றது. அவரது பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு அமைதியாக வேடிக்கை பார்த்தது.
பாதுகாப்புச் செயலாளருடன் ஞானசார தேரருக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பு பற்றி அனைவரும் அறிந்திருந்ததே இதற்கு காரணமாகும்.
நாட்டை இராணுவமயமாக்கலுக்கு தள்ளுவதே கோத்தபாய ராஜபக்ஷ நாட்டுக்கு மேற்கொண்டு வரும் மிகவும் கெடுதியான நடவடிக்கையாகும்.
சிவில் அதிகாரிகள் வகிக்க வேண்டிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தல், இராணுவ அதிகாரிகளை தூதுவர் பதவிகளுக்கு நியமித்தல், கல்வித்துறையை இராணுவமயப்படுத்தியமை ஆகியவற்றுக்கு கோத்தபாயவே பொறுப்புக் கூறவேண்டும்.
இந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டை இராணுவமயத்திற்குள் தள்ளியுள்ளதுடன் சிவில் அரசியல் நிறுவனங்களை அழித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷவே வழக்கு விசாரணைகளை நடத்தாது குற்றவாளிகளை கொலை செய்யும் கொடூரமான சம்பிரதாயத்தை நாடடுக்கு அறிமுகப்படுத்தினார்.
இது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக அடிப்படைகளுக்கு முரணான பாசிசவாத செயல் எனவும் விக்டர் ஜவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbms0.html
Geen opmerkingen:
Een reactie posten