தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

மாகாண சபை உறுப்பினர்கள் பாதுகாப்பு தேவையென்றால் விண்ணப்பிக்கலாம்!- பொலிஸ் திணைக்களம்

வெறுப்புணர்வை தூண்டியதாக அமைச்சர் சம்பிக்க மீது குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 04:54.24 PM GMT ]
முஸ்லிம் மற்றும் சிவில் சமூகம் பற்றி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறிய தவறான கருத்துகள் அதிர்ச்சியும் கலக்கத்தையும் உண்டாக்குவதாக இலங்கை முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் கவுன்சில் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை இன்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளது. அக்கடிதத்திலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 15ம் திகிதி அளுத்கம பிரதேசத்தில் சிங்களத்தினருக்கு எதிராக 3000 முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடந்த தயாராக இருந்தாக அமைச்சர் கூறிய குற்றசாட்டை முஸ்லிம் கவுன்சில் நிராகரித்துள்ளது.
மேலும் அமைச்சர் வெளியிட்ட கருத்துகள் வன்முறையை துண்டுவதாக அமைந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் அமைச்சரே இவ்வாறு நடந்து கொண்டமை நாட்டு மக்கள் அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் முன்னணி அரசியல்வாதி இவ்வாறு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆதரவாக பேசுவது ஒத்து கொள்ளமுடியது என குறிப்பிட்டுள்ளது.
அமைச்சர் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எதிராக வெளியிட்டுள்ள கருத்துகள் ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் எனவும் முஸ்லிம் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmp1.html
ஜப்பானிய பிரதமர் இலங்கைக்கு விஜயம்?
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 04:59.06 PM GMT ]
ஜப்பானின் பிரதமர் சின்ஸோ அபே (Shinzo Abe )இலங்கை மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் விஜயம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானிய அரசாங்க தரப்பு இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜப்பானிய பிரதமர் மேற்கொள்ளும் சந்திப்புக்கள் குறித்து தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
எனினும் பங்களாதேஸின் பிரதமர் ஏற்கனவே கடந்த மே மாதம் ஜப்பானில் வைத்து உறுதியளித்தப்படி, ஜப்பானுக்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பு நாட்டுக்கான போட்டியில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிடுவார் அபேயின் விஜயத்தின் போது வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பங்களாதேஸ் பிரதமர் ஹசீனா, ஜப்பானுக்கு சென்றிருந்தபோது அபே தமது நாட்டுக்கு விஜயம் செய்யும் போது இதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாகாண சபை உறுப்பினர்கள் பாதுகாப்பு தேவையென்றால் விண்ணப்பிக்கலாம்!- பொலிஸ் திணைக்களம்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 11:57.16 PM GMT ]
அனந்தி சசிதரன் உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு தேவையென்றால் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் அனந்தி உள்ளிட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட போது அது தற்காலிகமானது என்று அறிவுறுத்தப்பட்டிருந்த்து. அவர்களும் தமக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு தேவை என்று விண்ணப்பிக்கவில்லை என்றும் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் எழுத்து மூலமாக விண்ணப்பிக்காத காரணத்தினால் தற்காலிக பாதுகாப்பை இதற்கு மேல் நீடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் கருதினால், அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக விண்ணப்பித்து பொலிஸ் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அனுமதியளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்க பொலிஸ் திணைக்களம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அனந்தி சசிதரன் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி தேவை என்று கோரிக்கை வைத்திருப்பதை தவறான கண்ணோட்டத்தில் சித்தரித்து, ஊடக பிரச்சாரமொன்றையும் அரச தரப்பு ஆரம்பித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmp6.html
புலனாய்வு அதிகாரிகளின் அரசியல் செயற்பாடுகள்! சர்வதேசத்திடம் முறையிட ஐ.தே.க. தீர்மானம்
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 12:09.47 AM GMT ]
புலனாய்வு அதிகாரிகளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அரசின் செயற்பாடு குறித்து சர்வதேச நாடுகளின் நாடாளுமன்ற கூட்டமைப்பிடம் முறையிட ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, நாட்டின் புலனாய்வுத்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுள்ளார். அத்துடன் தனது சகோதரன் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்குச் சார்பான அரசியல் செயற்பாடுகளுக்கும் புலனாய்வு அதிகாரிகளை அவர் பயன்படுத்தி வருகின்றார்.
இது தொடர்பில் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அண்மையில் தகவல்களை வெளியிட்டிருந்தார். அவர் இராணுவ இரகசியங்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டிய அரசாங்கம், மங்கள சமரவீரவின் குற்றச்சாட்டுகளை இதுவரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மங்கள சமரவீரவை தேசத்துரோகியாக சித்தரிக்கும் ஊடக பிரச்சாரங்களையும் முன்னெடுத்துள்ளது. அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரச தரப்பில் இருந்து செய்திகள் கசிய விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் புலனாய்வு அதிகாரிகளை அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது ஜனநாயகத்தை மீறும் செயல் என்று விமர்சித்துள்ள ஐ.தே.க. , இது தொடர்பில் சர்வதேச நாடுகளின் நாடாளுமன்ற கூட்டமைப்பிடம் முறையிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmp7.html

Geen opmerkingen:

Een reactie posten