தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juni 2014

மரணம் வாழ்க்கையின் முடிவல்ல!

மலையக சிறுவர்கள் மத்தியிலும், பெரியவர்கள் மத்தியிலும் தற்கொலை முயற்சிகள், உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக ஆக்கிரமித்து வருகின்றது.
குடும்பத்தில் சில சில முரண்பாடுகளாலும், குடும்ப அங்கத்தினர்கள் மத்தியில் பரஸ்பர உறவின்மையாலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவருகின்றது.
கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை சில சம்பவங்களை விபரிக்கலாம்.
டயகம பிரதேச பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயது யுவதி ஒருவர் கொழும்பில் தொழில் செய்த வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
அக்கரப்பத்தனை பிரதேச பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டம் ஒன்றில் தந்தையும், மகனும் வீட்டில் தூக்கிட்டு பரிதாபகரமான நிலையில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்பணை தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டமை அப்பிரதேச மக்களையும் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொகவந்தலாவை பிரதேச பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டமொன்றில் 04 பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு இறந்தமை சுட்டிக்காட்ட வேண்டிய அதே வேளை பாடசாலை மாணவி ஒருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமையும் சுட்டிக்காட்டலாம்.
இது இவ்வாறு இருக்கையில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது டயகம வைத்தியசாலைக்கு அண்மித்த தோட்ட
பகுதியில் யுவதி ஒருவர் அதிகமான பனடோல் வில்லைகளை குடித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. அக்கரப்பத்தனை வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் கடந்த மாதம் மூன்று சம்பவங்கள் இதே போன்று இடம்பெற்றுள்ளது. 13 வயதுடைய சிறுவர் ஒருவர் விசமருந்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இன்னும் இரு சிறு வயது சிறுமிகள் தூக்க வில்லைகளையும், பனடோல் வில்லைகளையும் குடித்து அனுமதிக்கப்பட்டதோடு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு இட மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுவதால் மலையக சமூகம் பாரிய அழிவை எதிர் நோக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இருந்து இவர்களை காப்பாற்றும் பொருட்டு விழிப்புணர்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்களின் மத்தியில் மாலை நேரங்களில் தொலைக்காட்சி தொடர்களை பார்வையிடுவதால் ஏற்படும் விளைவுகளின் விபரீதங்களே இதற்கு காரணமாக அமைகின்றது.
அத்தோடு குடும்பங்களில் ஏற்படும் சிறு சிறு சச்சரவுகளின் போது தகாத வார்த்தைகளை பெற்றோர்கள் உபயோகிக்கும் போது அதிகமான சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வதாவும், விசமருந்தி சாவதாகவும், தூக்கிட்டு சாவதாகவும் பகிரங்கமாக சிறுவர்கள் தங்களது கோபங்களை வெளிப்படுத்துகின்றனர். அதனை பின்பற்றுவோர்களின் அதிகமானோர் இறப்பை நாடுகின்றனர்.
எனவே எமது சமூகத்தில் இவ்வாறான சிந்தனை உள்ளவர்களை விடுவிக்கும் வகையில் உளவியல் தொடர்பான பயிற்சிகளை தொடர்சியாக வழங்க வேண்டிய நிலைமை இருப்பதால் எமது சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள் சமூகத்தின் விழிப்புக்காக செயல்படுவது காலத்தின் தேவையாகும்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கான காரணங்கள் என்ன என்பதனை சமூக சேவையாளரும், சமாதான நீதவானுமாகிய திரு ஐ.கிருஸ்ணராஜா அவர்களை வினாவிய போது:
இன்று மாணவர்கள் மத்தியில் முழுமையாக கல்வியை நோக்காக கருதுவது அவர்களின் கட்டாய தேவையாக இருக்கின்றது. பெற்றோர்களுக்கும், சிறுவர்களுக்கிடையில் நல்ல பரஸ்பர உறவோடு நண்பர்களை போல் பிள்ளைகளின் மத்தியில் பழகுவதன் ஊடாக ஒளிவு மறைவற்ற கருத்து பரிமாற்றங்கள் இடம்பெறும். இதனூடாக தற்கொலைகளை குறைப்பதற்கு ஒரு காரணமாக அமையும், சிறார்கள் மத்தியில் தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை தவிர்த்துக் கொள்வது மிக தேவையான ஒரு விடயமாகும். பெரியோர்கள், மற்றும் சமூகத்தினர் இன்று ஏதோ ஒரு வகையில் சிறுவர்களின் தீய செயல்களுக்கு காரணமாக அமைகின்றார்கள்.
பெரியோர்கள் மத்தியில் குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு சச்சரவுக்காக சாவுதான் அதற்கான தீர்வாக அமையும் என்று கருதுகின்றார்கள். ஒருவர் இறந்தால் அவரோடு முடிவதில்லை, அவருடைய பிள்ளைகள், மனைவி, உறவினர்கள் உட்பட ஒரு சமூகமே பாதிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலைக்கு சமய விழுமியங்களுடன் ஒன்றிணைந்து செயல்படாமையும் காரணமாகும். எதிர்காலத்தில் பிரச்சினைகளுக்கு மரணம் தான் தீர்வு என்று எண்ணாமல் வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்க கூடிய நபர்களாக உருவெடுப்பது ஒவ்வொரு தனி மனிதனின் சிந்தனை ரீதியாக மாற்றம் பெற வேண்டும்.  என இவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblq0.html

Geen opmerkingen:

Een reactie posten