தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

கடுஞ்சொல் பிரயோகத்துக்கு எதிரான சட்ட மூலம் சிங்கள அடிப்படைவாதிகளுக்கு சாதகமாக மாறும்!- ஆங்கில ஊடகம்!



நரேந்திர மோடியின் பெயரை நரேந்திர மோதி என்று உச்சரிக்கும் சிங்கள ஊடகங்கள்!
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:34.25 PM GMT ]
பெயரை மாற்றி அமைப்பதில் கைத்தேர்ந்த இலங்கையின் சிங்கள ஊடகங்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரையும் மாற்றியுள்ளன.
தமிழ் பிரதேசங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களின் பெயர்களை சிங்கள ஊடகங்கள் தங்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்தே ஒலிபரப்பியும், பிரசுரித்தும் வருகின்றன.
இதன்படி தமிழ் பெயர்களின் அடிப்படையே மாற்றப்பட்டு வருகிறது.
அத்துடன் தமிழ் உள்ளிட்ட வேற்றுமொழி சொற்களுடன்,  வகரம் மற்றும் யகரம் ஆகியவற்றை சொற்களின் இறுதியில் சேர்த்து,  சிங்கள சொற்களாக அவற்றை மாற்றியும் கொண்டு வந்தன.
இந்த நிலையில் தற்போது நரேந்திர மோடியின் பெயரை,  நரேந்திர மோதி என்று மாற்றியுள்ளன.
மோடி என்றால் சிங்களத்தில் முட்டாள் என்று அர்த்தப்படுவதால்,  இதனை மோதி என்று சிங்கள ஊடகங்கள் உச்சரிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmo5.html
விடுதலைப் புலிகளுக்கு எதிராக வேண்டுமென்றே அரசாங்கம் குற்றச்சாட்டுகளை தயாரிக்கிறது: த.தே.கூ
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:39.26 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் போலியாக குற்றச்சாட்டுகளை தயார் செய்து வருவதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
சில முஸ்லிம்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் உள்ளதாக கூறப்படும் மனித புதைக்குழியை தோண்ட இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகள் தொடர்பில் முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும், அவை குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் குருக்கள்மடத்துக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியிருப்பதானது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக திட்டமிட்டே அரசாங்கம் குற்றச்சாட்டுகளை தயாரித்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmo6.html
கடுஞ்சொல் பிரயோகத்துக்கு எதிரான சட்ட மூலம் சிங்கள அடிப்படைவாதிகளுக்கு சாதகமாக மாறும்!- ஆங்கில ஊடகம்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:39.31 PM GMT ]
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் கொண்டு வரப்படவுள்ள கடுஞ்சொல் பிரயோகத்துக்கு எதிரான சட்ட மூலம்ää அடிப்படைவாதிகளுக்கு சாதகமானமாக மாறும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 
மேடைப் பேச்சுகளிலும்,  ஊடக நிகழ்சிகளிலும், கடுஞ்சொல் பிரயோகத்தை தடுக்கும் வகையிலான சட்டம் ஒன்றை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தயாரித்துள்ளார்.
இந்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால்,  அது சிங்கள மற்றும் பௌத்த அடிப்படைவாதிகளுக்கு சாதகமாக மாற்றப்படும்.
இதன் மூலம் சிங்கள மற்றும் பௌத்த அடிப்படைவாதிகளை விமர்சிக்கின்ற குழுக்கள் தடை செய்யப்படும் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது..
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmo7.html

Geen opmerkingen:

Een reactie posten