தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juni 2014

தமிழக மீனவர்கள் 28 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்- 11 பேர் விடுதலை

பிரபாகரன் என்னைக் கொல்ல முயன்றார்: அமைச்சர் ராஜித
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 07:47.35 AM GMT ]
பிரபாகரன் தன்னைக் கொலை செய்வதற்கு முயன்றதாகவும் அதனால் தனது உடம்பின் ஒரு பகுதியில் இரும்புத் துகள்கள் உள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தங்காலை, கலமெட்டி மீனவர் துறைமுகத்திற்கு இன்று அடிக்கல்லை நாட்டிவைத்ததன் பின்னர் அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று காவியுடையணிந்து கொண்டு சண்டியர்கள் வருகின்றனர். சேறுபூசி சண்டித்தனம் காட்டுவோர். சண்டியர்கள் இல்லை.
சண்டியன் யார் என்பதை நான் நன்கறிவேன். எனக்கு தெரிந்த வகையில் எமது நாட்டில் இரண்டே இரண்டு சண்டியர்களே இருந்தனர்.
அதிலொருவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். மற்றொருவர் ரோஹண விஜேவீர. அதற்கு அப்பால் சண்டியன்கள் இந்த நாட்டில் இல்லை.
பிரபாகரன் சண்டியன். அவர் என்னை கொல்வதற்கு முயன்றார். எனது உடலில் ஒரு பக்கத்தில் இரும்பு துகள்கள் இருக்கின்றன.
விஜயவீர என்ற சண்டியனும் என்னை கொல்வதற்கு முயன்றார். அதனால் எனது உடலின் மற்றொரு பக்கத்தில் இரும்பு துகள்கள் இருக்கின்றன. சண்டியன் இறந்துவிட்டான். நான் உயிரோடு இருக்கின்றேன் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblq6.html

வவுனியா நகரசபை ஊழியர்கள் 12 கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம்
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 06:50.28 AM GMT ]
வவுனியா நகரசபை ஊழியர்கள் 12 கோரிக்கைகளை முன்வைத்து இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஆதரவுடன் நகர சுத்திகரிப்பு தொழிலாளிகள் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1. வவுனியா நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதார தொழிலாளர்களில் 7 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்.
2. வட மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆளணி அதிகரிக்கப்பட வேண்டும்.
3. வவுனியா நகரசபையால் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காவல் கடமை பதவிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
4. உள்ளக வெற்றிடங்கள் உள்ளக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
5. 30 வருடங்களாக பணியாற்றுபவர்களுக்கு இது வரை தர உயர்வு வழங்கப்படாமையினால் அரச சுற்று நிருபம் 01- 2001 இற்கு அமைவாக தரமுயர்த்தல் வழங்கப்பட வேண்டும்.
6. வேறு திணைக்களங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும்.
7. தொழிலாளர்களுக்கு சாப்பாட்டறை கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கான மலசலகூடம் புனரமைப்பு செய்து தரப்பட வேண்டும்.
9. அந்தந்த இடங்களில் பணிபுரிபவர்கள் அங்கேயே பணி புரிவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
10. சுகாதார பகுதி நலன்புரிச் சங்கத்திற்கு நகரசபையால் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்,
11. உமா எனப்படும் சுகாதார தொழிலாளியை தொழிலாளிகளுடன் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்,
12. வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் சுகாதார தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்பட வேண்டும்.
என்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்திருந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன். ஆர். இந்திரராஜா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சம்பவம் தொடர்பாக கலந்துரையாடினர்.
இப்போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன்,
வவுனியா நகரசபையில் பணியாற்றி வந்த தற்காலிக ஊழியர்கள் 52 பேரில், 45 பேருக்கு வட மாகாண முதலமைச்சரினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய 7 பேருக்கு ஆளணி அங்கீகாரம் இல்லை என்ற காரணத்தை காட்டி, வவுனியா நகரசபையின் செயலாளரினால் 2014 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் முதலாம் திகதி பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை வட மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் உள்ள ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் ஏனைய விடயங்களையும் வலியுறுத்தி வருகின்றோம். எனவே இப் போராட்டத்தை வட மாகாணத்திற்கு விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தார்.
இதுதொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் சி. சத்தியசீலன் தெரிவிக்கையில்,
7 பேர் ஏற்கனவே இந்த சபையில் நியமித்த அடிப்படையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள். இவர்களுடைய சேவைக் காலத்தை ஒவ்வொரு வருடமும் நாம் புதுப்பித்துக் கொள்வோம்.
இந்தவகையில் இந்த 7 பேரையும் ஏற்கனவே எமது நிரந்தர நியமனத்திற்கு உள்வாங்குவதற்கான நடவடிக்கையை நாம் ஆளணிக்கு அமைவாக எடுத்திருந்தபோதிலும், எனினும் அவர்கள் அந்த தகுதிகளை அதாவது புள்ளிகளை பெறாமையினால் தெரிவு செய்யப்படவில்லை என எண்ணுகின்றேன்.
அத்துடன் ஆளணியும் முழுமையாக நிரப்பப்பட்டு விட்டது. எனினும் இவர்களது போராட்டம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளேன் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblq4.html

தமிழக மீனவர்கள் 28 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்- 11 பேர் விடுதலை
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 06:38.13 AM GMT ]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில்,
நான் தங்களுக்கு 19.6.2014 அன்று ஏற்கனவே கடிதம் அனுப்பி இருந்தேன். அதன் அடிப்படையில் 18.6.2014 அன்று இலங்கை இராணுவத்தினரால் பிடித்து செல்லப்பட்ட 46 தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர். அதற்காக தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல 24.6.2014 அன்று எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 7 மீனவர்களும், அவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட்டன. அதே நேரத்தில் கடந்த 23ம் திகதி இலங்கை படையினரால் பிடிக்கப்பட்ட 11 மீனவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.
ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட மீனவர்களுடன் படகுகளும் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த 29ம் திகதி அதிகாலை இராமேஸ்வரத்தில் இருந்து சென்ற 17 மீனவர்களையும் அவர்களுடைய 3 விசைப்படகுகளையும் இலங்கை இராணுவம் சிறைபிடித்து சென்றுள்ளது. அவர்கள் தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதை உங்களுடைய கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது, கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது மீனவர்கள் மத்தியில் அசாதாரண நிலையை உருவாக்கி ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு மீன்பிடி தொழில் அதிகரித்து வரும் ஆபத்தான தொழிலாகவும் மாறி இருக்கிறது.
நான் ஏற்கனவே அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நீங்கள் இது சம்மந்தமாக உரிய நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என கருதுகிறேன். பாக் ஜலசந்தி தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் வரலாற்று ரீதியான இடமாகும். அந்த இடத்தை சர்வதேச கடல் எல்லையாக இந்திய அரசு கருதக்கூடாது. கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அது இலங்கைக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
நமது மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வாழ்க்கை நடத்தி வரும் இடத்தில் அவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை ராணுவம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே எனது அரசு மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.
ஆனாலும் பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறைபடுத்தப்படுவதும், கடத்தப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இதுசம்மந்தமாக தாங்கள் ராஜ்ய ரீதியாக உடனடி நடவடிக்கை எடுத்து ஏற்கனவே இலங்கையில் உள்ள 11 மீனவர்கள், 38 படகுகள் உள்ளிட்ட 28 மீனவர்களையும், 41 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை
தமிழகம் புதுக்கோட்டையைச் சேர்ந்த 11 மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்று இன்று விடுதலை செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் 3 படகுகளில் நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 23 ஆம் திகதி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் கடந்த 24ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிப்புக்கமைய இவர்கள் 11 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblq3.html

Geen opmerkingen:

Een reactie posten