தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

“1983″ இல் நாம் தவறுவிட்டோம் “2014″ இல் மகிந்த தவறுவிட்டார் ஒப்புக்கொண்டார் ரணில்

தொடங்கி விட்டது ஐ.நா விசாரணை என்கிறது கொழும்பு…

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா நிபுணர் குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும், இதுபோன்ற ஏனைய சந்தர்ப்பங்களில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது போல, நன்கு பரீட்சிக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும், மூன்று பேர் கொண்ட வெளியக நிபுணர்கள் பற்றிய அறிவிப்பை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/74733.html

“1983″ இல் நாம் தவறுவிட்டோம் “2014″ இல் மகிந்த தவறுவிட்டார் ஒப்புக்கொண்டார் ரணில்

“1983ம் ஜூலை இனக்கலவரத்தைத் தடுக்க எமது ஐதேக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. அது தவறு மீளவும் நடக்கக் கூடாது. இப்போதைய ஆட்சியாளர்கள் அந்த தவறை செய்யக் கூடாது. அளுத்கம, பேருவளை கலவரங்கள் முடிவுக்கு வந்துள்ள போதிலும், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு இடையிலான பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை. அரசாங்கம் அதனைக் கவனத்தில் கொண்டு தீர்க்க முனைய வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74736.html

Geen opmerkingen:

Een reactie posten