ஓஸ்ரேலியா கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் அகதிகள் சென்ற படகொன்று தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படகில் 30 சிறுவர்கள் உட்பட 153பேர் இருப்பதாக அப்படகில் உள்ள தமிழ் பெண் ஒருவர் கூறினார் என Fairfax என்ற ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமது படகு ஜூன் 13ஆம் திகதி தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டதாக அத்தமிழ் பெண் கூறியுள்ளார். காலநிலை சீரின்மையால் படகு தத்தளிப்பதாகவும் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
இது பற்றி குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில், கடலில் உயிர்ப் பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தலாக அமையக்கூடிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையே அரசாங்கம் ஊர்ஜிதம் செய்யுமெனத் தெரிவித்தார்.

http://www.jvpnews.com/srilanka/74787.html
Geen opmerkingen:
Een reactie posten