தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

அளுத்கம சம்பவங்களுடன் தொடர்புடைய 8 முக்கிய நபர்கள் கைது! தங்க நகைகள் மீட்பு

அளுத்கம சம்பவம் குறித்து முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கு சம்பிக்க விளக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 12:15.38 AM GMT ]
அளுத்கம சம்பவம் குறித்து முஸ்லிம் நாடுகளுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க விளக்கமளிக்க உள்ளார். முஸ்லிம் நாடுகளின் தூதரகங்கள் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு சென்று விளக்கமளிக்க உள்ளார்.
அளுத்கம, பேருவளை ஆகிய பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இ;ந்த சம்பவம் குறித்து ஏற்கனவே ஈரான் மற்றும் பாகிஸ்தான் தூதரகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
நாட்டில் இயங்கி வரும் சகல தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கும் சென்று சம்பவம் குறித்து பூரண விளக்கமளிக்க சம்பிக்க ரணவக்க திட்டமிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு முஸ்லிம் நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmvy.html
அளுத்கம சம்பவங்களுடன் தொடர்புடைய 8 முக்கிய நபர்கள் கைது! தங்க நகைகள் மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 02:54.32 AM GMT ]
அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பிரதான சந்தேகநபர்கள் 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக ஏஎவ்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 15ம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரங்கள், தாக்குதல்கள் சம்பவங்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் இவர்களிடமிருந்து கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட இரத்தினக்கற்கள் மற்றும் தங்கநகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை முஸ்லிம்களின் றம்ழான் நோன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் வன்செயல்கள் இடம்பெறலாம் என்றும் முஸ்லிம் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அளுத்கம பகுதியில் இடம்பெற்ற வன்செயல்களின் போது கடைகளில் பொருட்கள் மற்றும் தங்கநகைகள் என்பனவற்றை கொள்ளையிட்டவர்கள், தீயிட்டவர்கள் என நம்பப்படுவோரை அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் அவர்கள் கொள்ளையிட்ட பொருட்கள் சகிதம் பொலிஸார் கைது செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அளுத்கம பகுதியில் ஆரம்பித்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் பின்னர் பேருவளை, பெந்தோட்டை பிரதேசங்களுக்கும் பரவியதை தொடர்ந்து அங்கு பல கடைகள் எரிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் உள்ளன.
மேலும் பெந்தோட்டை பகுதியிலுள்ள இரண்டு ஆபரண விற்பனை நிலையங்கள் கலகக்காரர்களினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே 48 முஸ்லிம் அமைப்புக்களைக் கொண்ட அமைப்பான இலங்கை முஸ்லிம் கவுன்சில் புனித றம்ழான் மாதத்தில் மேலும் முஸலிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டு பொலிஸ் மாஅதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான அடிப்படைக் காரணம் சரியாகக் கண்டறியப்பட்டு நீதியை நிலைநாட்ட பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென சுட்டிக்காட்டியதுடன், இதுவே தங்கள் அச்சத்துக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmv0.html

Geen opmerkingen:

Een reactie posten