[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 05:19.44 AM GMT ]
இது குறித்துப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், மொரீசியஸின் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமன் தெரிவிக்கையில்,
சுமார் 60 நாடுகளில் பரந்து விரிந்து வாழும், தமிழர்களைப் பண்பாடு, கலாசாரத்தால் இணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
இதையொட்டி இந்த மாநாடு மொரீசியஸின் மோகா நகரில் மகாத்மா காந்தி கல்வி நிறுவன வளாகத்தில், ஜூலை 23 முதல் 27 வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நவின் ரம்கூலம் ஆரம்பித்து வைக்கிறார்.
3 நாள்களும் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், கருத்தரங்கம் உள்ளிட்டவை நடக்கின்றன. 60 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் இதற்கு வர விரும்பி பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து மாநாட்டில் பங்கேற்போர் சென்னை சோழிங்க நல்லூரில் செயல்படும் ஆசியவியல் நிறுவன அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்.
தமிழர்கள் மொழியாலும், பண்பாட்டாலும், கலாசாரத்தாலும் ஒன்றுபட வேண்டுமென்ற நோக்கத்தில், தமிழ்க் கலாசாரப் பாதுகாப்பு மற்றும் அடையாளப்படுத்துதல் என்ற வகையில் மாநாடு நடைபெறுகிறது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmr1.html
விமல் வீரவன்ஸவின் மற்றுமொரு உறுப்பினர் சுதந்திரக் கட்சியில் இணைகிறார்
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 05:49.35 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் எனினும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அச்சல ஜாகொட, 2011 ஆம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து விலகி, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அடுத்த சில வாரங்களில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது தொடர்பாக உறுதியான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmr4.html
சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டாம்: கடுமையான தொனியில் கோத்தபாய
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 05:24.33 AM GMT ]
நேற்று வெள்ளிக் கிழமை முஸ்லிம் பிரதி நிதிகளைச் சந்தித்து கோத்தபாய ராஜபக்ச கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். இந்தக் கலந்துரையாடலின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இறுதி முடிவொன்று எட்டப்படும் வரை சந்திப்பு தொடர்பாக எதனையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என கடுமையான உத்தரவொன்றை கோத்தபாய விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmr2.html
Geen opmerkingen:
Een reactie posten