[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 08:00.49 AM GMT ]
கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட அமைதியான சூழலின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக இலங்கைக்கு அதிகளவில் அந்நியச் செலாவணி கிடைத்தது.
இந்நிலையில் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரச அடக்குமுறை தொடர்வது பற்றிய கண்டனங்கள் காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அவப் பெயர் ஏற்பட்டது. அன்று தொடக்கம் சுற்றுலாத்துறை வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கியது.
இவ்வாறான நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான ஹலால் பிரச்சினையை அடுத்து முஸ்லிம் நாடுகளின் சுற்றுலாப் பயணிகளும் இலங்கை வருவதை தவிர்க்கத் தொடங்கினர்.
எனினும் நிலைமையை புரிந்து கொள்ளாத அரசாங்கம் பொது பல சேனாவினரை கட்டுப்படுத்த தவறியது. இதன் காரணமாக அண்மையில் அளுத்கமவில் பாரிய இனக்கலவரம் வெடித்தது.
இதனையடுத்து தற்போது அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் முற்றாக இலங்கையை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்போது அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் முற்றாக இலங்கையை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி இழப்பு இலங்கைப் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnxy.html
புலனாய்வுப் பிரிவில் முஸ்லிம்கள் வேண்டாம்! பொதுபல சேனா
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 12:10.45 AM GMT ]
இது தொடர்பாக பொது பல சேனாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான திலான் விஜேசிங்க, இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சார செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் விசேட புலனாய்வுப் பிரிவின் ஊடாகவே பொது பல சேனாவின் நடவடிக்கைகளுக்கான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பரபரப்பான தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இதற்கு முன்னதாக ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் நாட்டில் இல்லாத சமயத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப் போவதாக ஒரு குறுஞ்செய்தி தகவல் வெளியாகியிருந்தது.
பொது பல சேனாவின் உறுப்பினர்களிடையே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பகிரப்பட்ட அந்த தகவலை புலனாய்வுத்துறையில் உள்ள ஒரு சிங்கள அதிகாரியே வெளியில் கசிய விட்டிருந்தார்.
எனினும் இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் புலனாய்வுத்துறையில் உள்ள முஸ்லிம் அதிகாரிகளே இருப்பதாக பொதுபல சேனா நம்புகின்றது.
அதன் காரணமாக எதிர்காலத்தில் எந்தவித இரகசிய செயற்திட்டங்களையும் வகுக்க முடியாத நிலையை பொது பல சேனா எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையை தவிர்ப்பதாயின் புலனாய்வுத்துறையில் உள்ள முஸ்லிம் அதிகாரிகளை நீக்கினால் மட்டுமே சாத்தியப்படும் என்றும் பொது பல சேனா முக்கியஸ்தர்கள் நம்புகின்றனர்.
எனவே சிங்கள மக்கள் மத்தியில் தற்போது அதற்கான பிரச்சாரம் முன்னெடுக்கப்படத் தொடங்கியுள்ளது. இதற்காக அவர்கள் வித்தியாசமான பிரச்சார அணுகுமுறையொன்றை கையாண்டுள்ளனர்.
அதாவது முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பயிற்றுவிக்கப்பட்ட சில முஸ்லிம் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் சிங்கள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தனது பிரச்சாரம் ஊடாக பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பான தகுந்த ஆதாரங்கள் எதனையும் பொதுபல சேனா குறிப்பிடவில்லை என்ற நிலையிலும் கூட இந்தப் பிரச்சாரத்திற்கு சிங்கள மக்களிடையே பரவலான ஆதரவு கிடைத்து வருவதாக தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnuy.html
Geen opmerkingen:
Een reactie posten