[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 06:45.50 AM GMT ]
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இப்பிரசாரத்தை முன்னின்று நடத்துகின்றார்.
அவரது ஊடக நண்பரான சீ.ஏ. சந்திரபிரேம என்பவரே இது தொடர்பான ஊடகப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்.
இவர் கோத்தபாயவின் யுத்தம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுடனான இறுதிப்போரின் வெற்றி முழுக்க கோத்தபாயவின் பங்களிப்பில் வந்தது என்பதாக நூலொன்றை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சந்திரபிரேமவின் கட்டுரையொன்றை பிரசுரித்துள்ள ஆசியன் மிரர் இணையத்தளம், அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் மீது இயல்பாகவே வஞ்சம் உள்ளது.
பொதுபல சேனாவைப் பயன்படுத்தி அவர்கள் இலங்கை முஸ்லிம்களிடம் அதனைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள் என்பதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் இவ்வாறான நோக்கினை முன்வைத்தே பொதுபல சேனா முக்கியஸ்தர்களுக்கு அமெரிக்காவுக்கான சுற்றுப் பயண ஏற்பாடும், வீசாவும் வழங்கப்பட்டிருந்தாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை போன்று சிங்கள இணையத்தளங்களிலும் சில கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவை அனைத்திலும் அளுத்கம இனவாதத் தாக்குதலின் பின்னணியில் பொதுபல சேனா இல்லை என்பதாகவே நிரூபிக்க முயன்றுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnwz.html
நீதிமன்றத்துக்கே அல்வா கொடுத்த பொலிஸார்! பொது பல சேனாவினரைத் தெரியவில்லையாம்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 06:54.28 AM GMT ]
ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரெக்க விஜித தேரரை தேடி அமைச்சர் ரிசாதின் அமைச்சு அலுவலகத்திற்குள் அண்மையில் பொதுபல சேனாவினர் அத்துமீறி நுழைந்திருந்தனர்.
விஜித தேரர் மறைந்து இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து அங்கு இருக்கும் ஒவ்வொரு அறையையும் சோதனையிட்டனர் .
இந்த அத்துமீறல் தொடர்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொது பல சேனாவினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது .
இதன்போது நீதிபதி ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஆதாரங்களை பெற்று நீதி மன்றுக்கு பொலிஸார் அறிக்கை ஒன்றை கையளிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார் .
இதற்கு அமைய ஆறு ஊடக நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட வீடியோ பதிவுகள் பொலிஸாரினால் ஆராயப் பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது நீதிமன்றில் ஆஜராகிய பொலிஸார் தம்மால் அந்த வீடியோ பதிவுகளில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக கிராண்ட்பாஸ் மஸ்ஜித் மீது கடும்போக்கு வாதிகள் தாக்குதல் நடாத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகளை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தார்.
இந்தச் சம்பவத்தின் போதும் வீடியோவில் இருப்பவர்களை தம்மால் அடையாளம் காணமுடியவில்லை என்று மழுப்பலான பதிலையே பொலிஸார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnw0.html
Geen opmerkingen:
Een reactie posten