தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

அரச புல­னாய்வு அமைப்­புகள் ஆட்டம் காண்­கின்­ற­னவா?

எல்லாளன் மண்ணில் துட்டகைமுனுக்கள்! அநுராதபுரத்தில் பொதுபல சேனா அடாவடி
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 08:45.19 AM GMT ]
தமிழ் மன்னன் எல்லாளன் நீதி வழுவாது ஆண்ட அநுராதபுர மண்ணிலும் பொதுபல சேனா துட்டகைமுனுக்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அநுராதபுரம் மாவட்டத்தின் பளளுவெவ என்ற பாரம்பரிய முஸ்லிம் கிராமத்தில் இந்த அடாவடித்தனம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வான் ஒன்றில் வந்த பொதுபல சேனா பிக்குமார் பளளுவெவ முஸ்லிம் வர்த்தக நிலையமொன்றுக்குள் புகுந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தகாத வார்த்தைகளால் அர்ச்சித்தும், மத நிந்தனை செய்தும் உள்ளனர்.
நிலைமை கட்டுப்பாட்டை மீறிச்செல்வதைக் கண்டு வாலிபர்கள் ஒன்றுதிரண்ட நேரத்தில், தாங்கள் மீண்டும் காடையர்களுடன் வரப் போவதாக அச்சுறுத்தி விட்டு பிக்குமார் தப்பியோடியுள்ளனர்.
இவர்கள் பின்னர் கலாவெவ பிரதேசத்தை அண்மித்த கடவர தேவாலய எனுமிடத்தில் நின்று கொண்டிருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவல் காரணமாக நேற்றைய தினம் பளளுவெவ பிரதேசத்தில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இப்பகுதியில் நெல்லியகம, திக்கந்தியாவ, நேகம, கலாவெவ என்று முஸ்லிம் குடியிருப்புகள் இருந்த போதிலும், கலாவெவ மற்றும் நேகம தவிர்ந்த ஏனைய குடியிருப்புகள் சிறியளவான கிராமங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று மாலை தொடக்கம் நள்ளிரவு வரை மடவளை பகுதியில் வெள்ளை வான் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியுள்ளது.
வானுக்குள் சந்தேகப்படும்படியான இளைஞர்கள் சிலரும் இருந்துள்ளனர். இச்சம்பவம் மடவளைப் பகுதியிலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
புனித ரமழான் மாதம் ஆரம்பித்து முஸ்லிம்கள் நோன்பு உண்ணாவிரதத்தை தொடங்கிய நிலையில் பொதுபல சேனாவினரின் இவ்வாறான காடைத்தனங்கள் காரணமாக பல பகுதிகளில் பதற்ற நிலை ஏற்படத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmxy.html
அரச புல­னாய்வு அமைப்­புகள் ஆட்டம் காண்­கின்­ற­னவா?
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 10:25.33 AM GMT ]
அளுத்­கம வன்­மு­றை­க­ளுக்கு வெளி­நாட்டுச் சதியே காரணம் என்று நாட்டு மக்­களை நம்ப வைக்கும் தீவிர முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்த அர­சாங்­கத்­துக்கு, இது அர­சாங்கப் புல­னாய்வுப் பிரி­வு­களின் சதியே என்று ஐ.தே.க. நாடா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர வெளி­யிட்­டுள்ள குற்­றச்­சாட்டு பெரும் சிக்­கலை ஏற்­ப­டுத்தி விட்­டது.
பொது­ப­ல­சே­னா­வுக்கு பாது­காப்பு அமைச்சின் ஊடாக நிதி உதவி அளிக்­கப்­ப­டு­வ­தா­கவும், அளுத்­கம வன்­மு­றை­களின் பின்னால், புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரி­களே இருப்­ப­தா­கவும், மங்­கள சம­ர­வீர தெரி­வித்த குற்­றச்­சாட்டை அர­சாங்கம் நிரா­க­ரித்­துள்­ளது.
இந்த வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டைய இரா­ணுவப் புல­னாய்வு அதி­கா­ரி­களின் விப­ரங்­களை வெளி­யிடப் போவ­தாக மங்­கள சம­ர­வீர அறி­வித்­தது, அர­சாங்­கத்­துக்கு- குறிப்­பாக பாது­காப்பு அமைச்­சுக்குப் பெரும் குழப்­பத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.
அவர் சொன்­னது போலவே, கடந்­த­வாரம், செய்­தி­யாளர் சந்­திப்பில் அந்தப் பெயர்­களை வெளி­யிட்­டி­ருந்தார். உட­ன­டி­யா­கவே அர­சாங்கம் மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு எதி­ராக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.
அரச புல­னாய்வு அதி­கா­ரி­களைக் காட்டிக் கொடுத்து விட்­ட­தாக முன்னாள் விமா­னப்­படை அதி­காரி ஒருவர், மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு எதி­ராக முறைப்­பாடு செய்­ததை அடுத்து இந்த விசா­ர­ணைகள் சூடு பிடித்­துள்­ளன.
ஏனென்றால், அரச புல­னாய்­வுத்­து­றை­யினர் பற்­றிய விப­ரங்கள் வெளி­யா­னது அர­சாங்க உயர் மட்­டத்­துக்கு கடும் சீற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
அதுவும், பாது­காப்புச் செயலர் அர­சி­யலில் இறங்­கு­வ­தற்­கான முன்­னா­யத்­தங்­களில் ஈடு­பட்­டுள்ள சூழலில், இப்­ப­டி­யான குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பதை அர­ச­த­ரப்பு கடும் விச­னத்­துடன் பார்க்­கி­றது.
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்தால், தாம் அர­சி­யலில் நுழையத் தயார் என்று சில வாரங்­க­ளுக்கு முன்­னரே, பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ பேட்­டி­யொன்றில் கூறி­யி­ருந்தார்.
தான் அம்­பாந்­தோட்­டையில் இருந்து அர­சி­யலில் நுழைய மாட்டேன் என்றும் கொழும்பில் இருந்தே கள­மி­றங்­குவேன் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.
கொழும்பு மாவட்­டத்தில், தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தனால், முஸ்­லிம்­களின் வாக்­குகள் முக்­கி­ய­மா­னவை.
கொழும்பில் கணி­ச­மான முஸ்­லிம்கள் வசிக்­கின்ற நிலையில், அவர்­களின் நம்­பிக்­கையை கோத்­தா­பய ராஜபக் ஷ பெற்றுக் கொள்­வ­தற்கு, மங்­கள சம­ர­வீ­ரவின் குற்­றச்­சாட்டு பெருந்­த­டை­யாக மாறி­யுள்­ளது.
ஏற்­க­னவே, பொது பல சேனா­வுக்கும் பாது­காப்புச் செய­ல­ருக்கும் தொடர்­புகள் இருப்­ப­தாக செய்­திகள் அவ்­வப்­போது வெளி­யாகி வந்­தன.
இந்த நிலையில் தான், பாது­காப்பு அமைச்­சினால், பொது­பல சேனா­வுக்கு நிதி உதவி அளிக்­கப்­ப­டு­வ­தா­கவும், பாது­காப்பு அமைச்சின் வழி­காட்­டலில், புல­னாய்வு அதி­கா­ரி­க­ளா­லேயே அளுத்­கம வன்­மு­றைகள் தூண்­டி­வி­டப்­பட்­ட­தா­கவும், மங்­கள சம­ர­வீர கூறி­யி­ருந்தார்.
பாது­காப்பு அமைச்சின் பேச்­சா­ள­ரான பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய இதனை அடி­யோடு நிரா­க­ரித்தார்.
அது­மட்­டு­மன்றி, நாடா­ளு­மன்ற சிறப்­பு­ரி­மையைப் பயன்­ப­டுத்தி புல­னாய்வு அதி­கா­ரிகள் காட்டிக் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இது இரா­ணுவப் புல­னாய்வுத் துறையை அழிப்­ப­தற்­கான மிகப்­பெ­ரிய சதி என்றும் அவர் குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.
2001ஆம் ஆண்டு ஐ.தே.க ஆட்­சிக்கு வந்த பின்னர், அத்­து­ரு­கி­ரிய, மிலே­னியம், சிற்­றியில் இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவின் மறை­விடம் ஒன்று சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டது.
அந்த இர­க­சிய மறை­விடம் வெளிச்­சத்­துக்கு வந்­ததன் விளை­வாக, இரா­ணுவப் புல­னாய்­வுத்­து­றையை சேர்ந்த 21 பேரை இழந்து போன­தா­கவும், அது­போன்­ற­தொரு காட்­டிக்­கொ­டுப்பே இது என்றும் பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய குறிப்­பிட்­டி­ருந்தார்.
மிலே­னியம் சிற்றி சுற்­றி­வ­ளைப்பின் போது, தான், முதல் முறை­யாக இரா­ணுவப் புல­னாய்­வுத்­து­றையின் வழி­காட்­டலில், புலி­களின் கட்­டுப்­பாட்டுப் பகு­தி­களில் ஊடு­ருவித் தாக்­குதல் நட­வ­டிக்­கை­க­ளுக்­கான, ஆழ ஊடு­ருவும் அணி­யொன்று இர­க­சி­ய­மாக இயக்கி வரு­கி­றது என்ற உண்மை வெளிச்­சத்­துக்கு வந்­தி­ருந்­தது.
அதற்கு முன்­னரே, புலி­களின் முக்­கிய தள­ப­தி­களை இலக்கு வைத்து சில கிளைமோர் தாக்­கு­தல்கள், வன்­னி­யிலும், கிழக்­கிலும் நடத்­தப்­பட்­டி­ருந்­தன.
ஆனால், அதைச் செய்­தது யார்-? - அதனை இயக்­கு­வது யார்? என்ற விபரம் மட்டும் அறி­யப்­ப­டாமல் இருந்­தது.
மிலே­னியம் சிற்றி சம்­ப­வத்தை அடுத்து, அத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்­களின் விப­ரங்கள் வெளி­யா­கின.
அதனை வைத்து, ஆழ ஊடு­ருவும் அணி­யுடன் இணைந்து செயற்­பட்ட பல இரா­ணுவப் புல­னாய்வு அதி­கா­ரி­க­ளையும், உத­வி­யா­ளர்­க­ளையும் புலிகள் சுட்டுக் கொன்­றி­ருந்­தனர்.
அது ஐ.தே.க. அர­சாங்­கத்தின் மிகப்­பெ­ரிய துரோ­க­மாக கூறப்­பட்டு வந்­தது.
எனினும் ஐ.தே.க. அர­சாங்கம் அதனை திட்­ட­மிட்டு வெளிச்­சத்­துக்கு கொண்டு வந்­தி­ருக்­க­வில்லை.
இப்­போது, அதனை நினை­வு­ப­டுத்தி, புல­னாய்வுப் பிரி­வு­களை அழிக்க சதி செய்­யப்­ப­டு­வ­தாக பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.
பிரி­கே­டியர் ருவான் வணி­க­சூ­ரிய குற்­றம்­சாட்­டு­வது போன்று இலங்­கையின் புல­னாய்வுப் பிரி­வு­களை அழிப்­பது ஒன்றும் சுல­ப­மான காரி­ய­மில்லை.
அது மிகப் பெரி­யதும், நன்கு கட்­டி­ய­மைக்­கப்­பட்­ட­து­மான ஒரு புல­னாய்வுக் கட்­ட­மைப்­பாக வலைப்­பின்­ன­லாக மாறி­விட்­டது.
இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவு, தேசிய புல­னாய்வுப் பிரிவு, அரச புல­னாய்வுச் சேவை என்று ஒரு பரந்­து­பட்ட, பல்­வேறு நிர்­வாகக் கட்­ட­மைப்­பு­களின் கீழ் இது வியா­பித்­தி­ருக்­கி­றது.
அண்­மையில், இரா­ணுவத் தள­பதி லெப். ஜெனரல் தயாரத்­நா­யக்க, நாட்டின் எல்லாப் பகு­தி­க­ளிலும் இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்கள் நிலை கொண்­டுள்­ளனர் என்றும், எவ­ரேனும், மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்­சியில் ஈடு­பட அவர்கள் அனு­ம­திக்க மாட்­டார்கள் என்றும் சவால் விட்­டி­ருந்தார்.
இரா­ணுவப் புல­னாய்­வுத்­துறை அந்­த­ள­வுக்கு வலி­மை­யாக கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்ள நிலையில், மங்­கள சம­ர­வீர வெளி­யிட்ட ஒரு சிலரின் பெயர்­களால், ஒட்­டு­மொத்த அரச புல­னாய்வுப் பிரி­வு­களும் அழிக்­கப்­பட்டு விடும் என்று காண்­பிக்­கப்­படும் விம்பம் மிகை­யா­னது.
ஆனால் அர­சாங்கம் அத்­த­கை­ய­தொரு விம்­பத்தை, சிங்­கள மக்­க­ளுக்குக் காட்ட முனைந்­தி­ருக்­கி­றது.
எப்­போ­துமே ஒரு பொருளை மறைப்­ப­தற்கு, இன்­னொரு பெரிய பொருளை அத­ன­ருகே வைப்­பது வழக்கம்,
அது­போலத் தான், மங்­கள சம­ர­வீ­ரவின் குற்­றச்­சாட்­டு­களை மறைக்க, அதனைப் பெரிய தேசத்­து­ரோ­க­மாக காட்டிக் கொடுப்­பாக காண்­பிக்க முனைந்­தி­ருக்­கி­றது அர­சாங்கம்.
மங்­கள சம­ர­வீ­ரவின் குற்­றச்­சாட்டு, கோத்­தா­பய ராஜபக்சவின் அர­சியல் பிர­வே­சத்­துக்கு சவாலை ஏற்­ப­டுத்தக் கூடி­யது என்­பதால், அவரை முஸ்­லிம்கள் நிரா­க­ரிக்கும் நிலை ஏற்­படும் ஆபத்து உள்­ளதால், அவ­ச­ர­மாக அர­சாங்கம் மாற்று வியூ­கங்­களை அமைத்­தி­ருக்­கி­றது.
அளுத்­கம வன்­மு­றை­களின் போது, இரா­ணு­வத்­தினர், விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் முன்­பா­கவே தாம் தாக்­கப்­பட்­ட­தாக, தமது உடை­மைகள் அழிக்­கப்­பட்­ட­தாக, பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் பலரும் தெரி­வித்­தி­ருந்­தனர்.
இப்­போது, வன்­மு­றையில் சேத­முற்ற கட்­ட­டங்­களைப் புன­ர­மைக்கும் பணியை பாது­காப்பு அமைச்சே மேற்­கொள்­ள­வுள்­ளது. அதுவும், படை­யி­னரே புன­ர­மைப்பு வேலை­களை மேற்­கொள்­ள­வுள்­ளனர்.
வடக்கில், போரை நடத்­திய படை­யி­னரைக் கொண்டே, சில புன­ர­மைப்பு வேலை­களை மேற்­கொண்டு, தமிழ் மக்­களின் நம்­பிக்­கையைப் பெற அர­சாங்கம் முயன்­றது. அதே உத்­தியை முஸ்­லிம்­களின் நம்­பிக்­கையைப் பெறு­வ­தற்கும் பயன்­ப­டுத்­து­கி­றது அர­சாங்கம்.
இங்கு புன­ர­மைப்பு வேலை­களை மேற்­கொள்­வதால், இரா­ணு­வத்தின் மதிப்பு உயரப் போவ­தில்லை, அப்­படி உயர்ந்­தாலும் அதனால் இரா­ணு­வத்­துக்கு எந்த நன்­மையும் கிட்­டாது.
ஆனால், பாது­காப்புச் செயலர் கோத்­தபாய ராஜபக்சவின் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் கழுவப்பட்டு விடும்.
அதேவேளை, வடக்கில் புனரமைப்பு வேலைகளைக் காரணம் காட்டி, இராணுவம் நிலை நிறுத்தப்பட்டது போலவே, தெற்கிலும், அதே காரணத்தைக் கூறி, முஸ்லிம் பிரதேசங்களில் படையினர் நிறுத்தப்படவுள்ளனர்.
அளுத்கம வன்முறைகளும், அதற்குப் பிந்திய சூழலும், அரசியல் ஆதாயத்துக்கு தாராளமாகவே பயன்படுத்தப்படுகின்றன என்பது தெளிவான உண்மை.
அதேவேளை, அரசியல் நலன்களுக்காக அரச புலனாய்வுச் சேவைகள் பயன்படுத்தப்படுவதான குற்றச்சாட்டுகள் ஒன்றும் ஆச்சரியமளிக்கத்தக்கவை அல்ல.
ஏனென்றால், அரச புலனாய்வுத்துறை கள் எப்போதுமே அரசாங்கத்தின் நல னுக்காகவே செயற்படுபவை. அதனைப் பாதுகாப்பதற்கே உயர் முன்னுரிமை கொடுப்பவை ஏனென்றால் அவற்றை இயக்குவது அரசாங்கம் தான். அதன் விருப்பு வெறுப்புக்கேற்பவே அரச புலனாய்வுச் சேவைகள் செயற்படும்.
அளுத்கம விவகாரத்திலும், அரச புலனாய்வுச் சேவைகள் அவ்வாறே செயற்பட்டிருந்தாலும் கூட, அது ஆச்சரியமான விடயமல்ல.
- சுபத்ரா
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmxz.html

Geen opmerkingen:

Een reactie posten