தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

ஈராக்கில் நடக்கும் முள்ளிவாய்க்கால்: அமெரிக்காவின் சட்டலைட் படம் எடுத்துள்ளதாக தகவல் !

ஈராக் நாட்டில் சதாம் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், அன் நாடு மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போர் தொடுத்தார்கள். அன் நாட்டை கைப்பற்றிய அமெரிக்கா தேவையான அளவு எண்ணெய் வளத்தை சுரண்டியது. அப்படி என்றால் ஒன்றுக்கும் உதவாத அக்பானிஸ்தனை ஏன் அமெரிக்கா கைப்பற்றியது என்று நீங்கள் கேட்க்கலாம். தென்னாபிரிக்கா மற்றும் இந்தியாவில் கூட கிடைக்காத அரிய வகையான வைரக் கற்கள் அங்கே தான் கிடைக்கிறது. இதற்காகவே அமெரிக்கா அக்பானிஸ்தானை பிடித்தது என்கிறார்கள் சிலர். அமெரிக்காவில் உள்ள நகைக் கடைகளில் எல்லாம் தற்போது அக்பானிஸ்தான் வைரக் கற்கள் தான் விற்பனையில் உள்ளது. இன் நிலையில், ஈராக் நாட்டில் இருந்து அமெரிக்க துருப்புகள் வாபஸ் பெற்றது. இதனையடுத்து அங்கே தோன்றிய கிளர்சி இயக்கமான ஐ.எஸ். ஐ.எஸ், தற்போது ஈராக்கில் உள்ள ஏராளமான நகரங்களை கைப்பற்றியுள்ளது.
இதனை அமெரிக்கா சற்றும் எதிர்பார்க்கவில்லை. முஸ்லீம்களில் சுன்னி முஸ்லீம் ஷியா முஸ்லீம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளது. சுன்னி முஸ்லீம்களே தற்போது ஐ.எஸ் ஐ.எஸ் இயக்கத்தை நடாத்தி வருகிறார்கள். இவர்கள் தமது கண்ணில் அகப்படும் ஷியா முஸ்லீம்களையும் அமெரிக்க ஆதரவாளர்களையும் போட்டு தள்ளுகிறார்கள். கடந்த சில மணி நேரத்தில் மட்டும் சுமார் 190 பேரை இவர்கள் படுகவைத்து சுட்டுகொலைசெய்துள்ளார்கள். ஈராக் அடுத்த முள்ளிவாய்க்கால் போல ஆகியுள்ளது. முள்ளிவாய்க்காலில் கொலைகள் இடம்பெற்றவேளை அதனை எவ்வாறு சட்டலைட் மூலம் அமெரிக்கா அவதானித்ததோ அதுபோலவே தற்போது ஈராக்கில் நடக்கும் கொலைகளையும் அமெரிக்கா அவதானித்து வருகிறது. அது ஈராக்கில் படுகொலை நடக்கும் இடங்களை அப்படியே துல்லியமாக வெளியிட்டு வருகிறது.
இதனை அவர்கள் முள்ளிவாய்க்காலிலும் செய்தார்கள். ஆனால் சரியான தகவலை தான் அவர்கள் வெளியிட வில்லை. அதை தான் நாம் துரோகம் என்கிறோம்.
http://www.athirvu.com/newsdetail/294.html

Geen opmerkingen:

Een reactie posten