தமிழக லேடியை வசப்படுத்த தொண்டமானின் அள்ளக் கை லேடியை அனுப்பும் மகிந்த கம்பனி
அவ்வேளையில் அடிகடி கட்சி மாறும் திரு.s.v.செகர் மஹிந்த ராஜபஷ்சவையும் ஆறுமுகம் தொண்டமானையும் சந்தித்தார்.
அம்மாவை பற்றியும் தமிழக அரசை பற்றியும் விரிவாக மஹிந்தவிற்கும் தொண்டமானிற்கும் அறியபடுத்தினார் அத்தோடுஅம்மாவை சமாளிப்பதென்றால் ஒரு பெண் உதவி உயர்ஸ்தானிகரை சென்னையில் அமர்த்துமாறு கோரிக்கை விடுத்தார்.உடனே மஹிந்த ராஜபஷ்ச தொண்டமானிடம் ஒரு பெண் பெயரை பரிந்துரைத்து அவரை சென்னையில் அமர்த்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
திருமதி.அனுஷா சிவராஜா அவரது கணவர் பொன்னையா சிவராஜா தொண்டமான் குடும்பத்திற்கு சேவை செய்பவர்கள் திருமதி.சிவாராஜா மாகாண அமைச்சராக கடமையாற்றியவர்.தற்போது தொண்டமான் கட்சியில் உபதலைவியாக பதவி வகிக்கின்றார். இவரது கணவர் பொன்னையா சிவராஜா தொண்டமானின் மருமகனான செந்தில் தொண்டமானின் (மாகாண அமைச்சர்) பிரத்தியேக செயலாளராக கடமையாற்றுகிறார்.
கனிமொழி தலமையில் இலங்கை வந்த இந்திய தமிழ் MPகள் குழுவை தலமை தாங்கி உபசரித்து தமிழகத்தையும் தமிழர்களையும் காட்டிக்கொடுத்த தொண்டமான் குடும்பம் கருணாநிதி குடும்பத்தோடு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது உண்மையே….!
http://www.jvpnews.com/srilanka/75075.html
மலையகத்தில் முதியோர் நிதி திருட்டு
சமூக சேவை அமைச்சினால் முதியோருக்கு வழங்கப்படுகின்ற நிதியை சூறையாடிய குற்றச்சாட்டில் கைதான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரான அழகன் இராமகிருஸ்ணனுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரு தரப்பினரும் பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று முற்பகல் அழைக்கப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்படுகின்றது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியை எதிர்வரும் 7ஆம் திகதி வழங்க அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இதையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ளன. இந்த கொடுப்பனவுகள் கடந்த ஐந்து மாதங்கள் கிடைக்காத நிலையில், இந்த மாதமே குறித்த கொடுப்பனவு, நிலுவைத் தொகையுடன் கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், சமூக சேவை அமைச்சினால் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவு அத்தாட்சி பத்திரத்தை பயன்படுத்தி, பூனாகலை மக்கள் தமது நிதியை பிரதேசத்திலுள்ள உப தபால் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு நிதியை பெற்று வீடு திரும்பிய வேளையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான அழகன் இராமகிருஸ்ணன் என்ற நபரே, தமது பணத்தை சூறையாடியதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதேவேளை, இந்த சம்பவம் குறித்து ஹல்துமுல்லை பிரதேச செயலாளரும், பிரத்தியேக விசாரணையை முன்னெடுத்து வருவதாக தெரிவித்திருந்தனர்.
http://www.jvpnews.com/srilanka/75080.html
போர்க்குற்றத்தில் தப்பிக்க புதிய தந்திரத்தில் அரச உயர் மட்டம்…
அரசாங்க தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடல்களானது, அரசாங்கத்துக்கு எதிரான போர் குற்ற விசாரணைகளுக்கு எதிராக மக்களை தூண்டிவிடுவதற்காக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் யுத்த குற்ற விசாரணையை மேற்கொள்ளவதற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்து அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது குறித்த தீர்மானத்துக்கு எதிராக பொதுமக்களையும் போராட்டங்களை நடத்துவதற்காக தூண்டிவிடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இதற்காக இன்று அரசாங்கத் தரப்பு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, இதற்கான திட்டங்களை வகுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/75083.html
Geen opmerkingen:
Een reactie posten