[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 02:57.07 PM GMT ]
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மேற்படி விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பொலிஸ்மா அதிபருக்கு நாம் எழுதிய கடிதங்களின் நிழற்பிரதியினையும் இத்துடன் முன்னிலைப்படுத்துகின்றேன்.
வடமாகாண சபையின் 38 உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தேன். குறித்த கடிதத்தின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு வழங்குதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
உறுப்பினர்களான அனந்தி சசிதரன், பாலச்சந்திரன் கஜதீபன், மற்றும் சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோரின் வேண்டுகோள்களிற்கிணங்க பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாண சபை அமர்வின் போது, மேற்படி உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு திடீரென மீளப் பெற்றப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தனக்கு வழங்கப்பட்டிருந்த (எம்.எஸ்.டி) பாதுகாப்புச் சேவையும் மீளப் பெற்றப்பட்டுள்ளதாக முறையீடு செய்துள்ளார்.
இம்முறைப்பாடுகளைக் கருத்திற் கொண்டு அதிமேன்மை தங்கிய தங்களுக்கு இவ்விடயத்தினை முன்னிலைப்படுத்துவதுடன், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளாருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் இதனைச் சமர்ப்பித்து குறிப்பிட்ட உறுப்பினர்கள் நால்வருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வசதிகளை மீளப் பெற்றுக்கொடுக்கக் கோருவதெனவும், ஏனைய உறுப்பினர்களினால் கோரிக்கைகள் விடுக்கப்படும் பட்சத்தில் அவர்கள் எல்லோருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கக் கோருவதெனவும் வடமாகாண சபை தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGQULbls7.html
இலங்கையின் சமூக நலத்திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா உதவி
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 03:25.01 PM GMT ]
இந்த திட்டங்களுக்காக 27 மில்லியன் ரூபாய்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
இவை இலங்கையில் உள்ள 12 தொண்டு நிறுவனங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
குறிப்பாக வடக்கு கிழக்கு மலையகம் உட்பட்ட பிரதேசங்களிலும் கல்வி வளர்ச்சி, பெண்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி, போரின் பின்னர் இயல்பு வாழ்க்கைக்கான முயற்சிகளுக்கே இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblty.html
மலையக மக்களிடம் இருந்து அரசியல் தூர விலகிச் செல்கிறது?
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 03:50.34 PM GMT ]
எனினும் வழமையாக அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி பணிகளும் வேலைவாய்ப்பு திட்டங்களுமே இந்த பிரசாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கால்நடைகள் உட்பட்ட உதவிகளை வழங்கி வருகிறது. உறுதிமொழிகள் அள்ளி வீசப்படுகின்றன.
நாளுக்கு நாள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஒரு விடயத்தை தாமே செய்ததாக பிரசாரம் செய்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரை, பெருந்தோட்ட தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்ற கட்சியாக இருந்து வருகிறது.
எனினும் அதன் உரிய செயற்பாடுகள் இன்மையே அந்தக்கட்சியால் பெருந்தோட்ட தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வாக்குகளை பெறமுடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு புறம்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மலையகத்தில் அரசியல் அறிவு என்ற விடயத்துக்கு அப்பால் அபிவிருத்தி என்பதை மாத்திரமே காட்டி வாக்குகளை பெறமுயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு காலத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இலங்கை அரசியலில் முக்கிய இடத்தை பெற்றிருந்தது.
இலங்கை இந்திய படைகளுக்கு இடையில் போர் வெடிக்கலாம் என்ற கருதப்பட்ட 1989 ஆம் பிரேமதாஸ ஜனாதிபதி காலத்தின் பொது அமைச்சர் தொண்டமானே இரண்டு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு அந்த முறுகலை தீர்க்க உதவினார்.
ஆனால் இன்று அந்தக்கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களுக்கு அபிவிருத்தி மாத்திரம் என்ற கொள்கையை புகட்டி வருகிறது.
இதன்காரணமாக மலையக தமிழ் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தை யாரும் கண்டுகொள்வதில்லை.
முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் இருந்த காலத்தில் மலையக அரசியல் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருந்தமையை யாரும் மறுக்கவியலாது.
ஆனால் இன்று அந்தக்கட்சியும் அரசியலை தொலைத்துவிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாணியில் அபிவிருத்தியின் பின்னால் சென்று கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனவே இந்த மாயையில் இருந்து மலையக தமிழ் மக்கள் குறிப்பாக ஊவா மாகாண மக்கள் வெளிவரவேண்டுமானால் அவர்கள் மத்தியில் மூன்றாம் சக்தி ஒன்று அரசியலை புகட்டவேண்டும். அவர்களின் உரிமைகள் குறித்து பேசவேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblt0.html
Geen opmerkingen:
Een reactie posten