தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

அகதிப்படகு விடயத்தில் மொரிசனின் கொள்கை குறித்த வாதப்பிரதிவாதங்கள்!!

விபூசிக்காவின் வழக்கு ஒத்திவைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 10:36.27 AM GMT ]
விபூசிக்கா மற்றும் ஜெயகுமாரி சார்பில் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு  மீதான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும், அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றுக்கு வராததால் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 13ம் திகதி பா.ஜெயகுமாரியும் அவரது மகளான விபூசிக்காவும் கிளிநொச்சியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயற்சியில் ஈடுப்பட்டார் என்று குற்றம்சாற்றப்பட்ட கஜீபன் என்பவருக்கு அவர்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டிலேயே இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன் பின்னர், விபூசிக்கா கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டார்.  தாயார் ஜெயக்குமாரி பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்;.
கைதுசெய்யப்படும் போது 13 வயதான விபூசிக்கா பூப்பெய்தி இரு வாரங்களே ஆகியிருந்தன. இவர்கள் சார்பில் உயர்நீதிமன்றம் கடந்த மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 6ம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நேற்று முன்தினம் இவ்வழக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றுக்கு வரவில்லை .இதனையடுத்து வழக்கு அடுத்த மாதம் 18ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmx1.html
அகதிப்படகு விடயத்தில் மொரிசனின் கொள்கை குறித்த வாதப்பிரதிவாதங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 10:36.06 AM GMT ]
கிறிஸ்மஸ் தீவிற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் தத்தளிப்பதாகக் கூறப்படும் படகு பற்றி உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுசரிக்கும் நிலைப்பாடு குறித்த வாதப் பிரதிவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களுடன் கடந்த 12ம் திகதி இந்தியாவில் இருந்து புறப்பட்டதாகக் கூறப்படும் படகொன்று கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் தத்தளிப்பதாக பெயார்பெக்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
இது பற்றி அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனிடம் வினவிய போது, அவர் ஒப்பரேஷன் சவரீன் போர்டஸ் என்ற எல்லைப் பாதுகாப்பு திட்டத்தைக் காரணம் காட்டி, படகு பற்றி எதுவும் கூற முடியாதெனத் தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு அறிவிக்கக்கூடிய அளவிற்கு கடலில் குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவும் நிகழவில்லையென அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
நடுக்கடலில் பலர் உயிராபத்துக்களை எதிர்கொண்டுள்ள வேளையில், திரு.மொரிசன் அனுசரிக்கும் அசட்டையான போக்கு மிகவும் கவலை அளிக்கிறதென அகதிகளுக்காக போராடும் Refugee Action Coalition என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
இது பற்றி சமூக வலைப்பின்னல்களும் தீவிர வாதப்பிரதிவாதங்கள் தலைதூக்கியிருக்கின்றன.
எல்லைப் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் அரசாங்கம் உண்மையை மறைக்கிறதென ஒருவர் கூறியிருக்கிறார்.
இது நடக்கும் விடக்கும் விடயங்களை பகிரங்கமாக அறிவிக்கும் வெளிப்படையான அரசாங்கமா என்று இன்னொருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மொரிசனின் மௌனம் குறித்து எனக்கு அக்கறையில்லை. அவசர நிலையை எதிர்கொள்பவர்களுக்கு உதவுவதற்கு என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியமானது. உடனடியாக மீட்புக் குழுவொன்றை அனுப்பி வைக்க வேண்டும்,’ என்பது AlexJBF இன் கருத்தாக இருக்கிறது.
அவுஸ்திரேலியா செய்வது சரிதான். படகில் வந்தவர்களுக்கு கொஞ்சம் மண்ணெண்ணெய் கொடுத்தால் அவர்கள் வந்த வழியே திரும்பி சென்று விடுவார்கள்,’ என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொருவர், Refugee Action Coalition இன் பேச்சாளரை பிரதான ஆட்கடத்தல் வலைப்பின்னலுடன் சம்பந்தப்பட்டவர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிலர் அகதிகளை மிகவும் கேவலமான முறையில் விமர்சித்து வெளியிட்டக் கருத்துக்களை கார்டியன் முதலான ஊடகங்கள் தணிக்கை செய்திருக்கின்றன.
இவை எவ்வறாயினும் தற்ப்போது நடுக்கடலில் தத்தளிப்பவர்களின் நிலை பற்றி யாராலும் உண்மையை கண்டறிய முடியாமல் இருக்கின்றது. இவர்களின் உயிர்கள் அனைத்தும் கடலில் சங்கமம் ஆன பின்பாவது மொரிசன் உண்மையை சொல்வார் என பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இலங்கை அகதிகளுக்கு எவ்வளவோ தரம் பல பத்திரிகைகள் இணையங்களில் இங்கு அகதிகளுக்கு நடக்கும் பிரச்சனைகளை பற்றி தெளிவுபடுத்தியும் இன்னும் இந்த கடல் பயணம்களை நம்பி வருபவர்களின் நிலை மிகவும் பாதுகாப்பு அற்றதாகத் தான் இருக்கும்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmx0.html

Geen opmerkingen:

Een reactie posten