தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

மட்டக்களப்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுவரொட்டிகள்!

ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பின் கூட்டத்திற்கு மீண்டும் இடையூறு
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 07:23.11 AM GMT ]
ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பின் செயற்பாடுகளுக்கு மீண்டும் ஒரு முறை தடையேற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் பொதுச் சபைக் கூட்டம் வெள்ளவத்தை குளோபல் டவர் ஹொட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கூட்டத்தை நடத்த விடவேண்டாம் ஹொட்டலுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதன் காரணமாக அவசரமாக கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பின் இலங்கை கிளையின் பணிப்பாளர் சுதத் ரனுக்கே தெரிவித்தார்.
ஹொட்டலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால், தமது அமைப்புக்கு அங்கு கூட்டத்தை நடத்த முடியாது போனமை குறித்து வெள்ளவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும் கூட்டத்தை ஹொட்டலில் நடத்த விட வேண்டாம் என தாம் அழுத்தங்களை கொடுக்கவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
ஊழல் எதிர்ப்பு, நல்லாட்சியை ஏற்படுத்துவது சம்பந்தமாக செயலாற்றி வருவதால், மேல் மட்டத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் அல்லது வேறு காரணங்களுக்காக குறித்த ஹொட்டலில் தமது கூட்டத்தை நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என கூறும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பு, திட்டமிட்டு இதனை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் பல முறை இந்த அமைப்பின் கூட்டங்களுக்கு தடையேற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbms1.html

மட்டக்களப்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுவரொட்டிகள்
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 06:54.18 AM GMT ]
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுவரொட்டிகள் மட்டக்களப்பு நகரெங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.
இணைந்த சுகாதாரப் போராட்டத்தை வெற்றி கொண்டுள்ளோம்,  இலவச கல்வியையும் சுதந்திர சுகாதார சேவையையும் வெற்றி கொள்ளத் தொடர்ந்து போராடுவோம் என்ற வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் என்று சுவரொட்டியில் உரிமை கோரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmsz.html

Geen opmerkingen:

Een reactie posten