[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 11:34.53 PM GMT ]
ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இந்த ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
பேருவளையில் இரண்டு நாட்களுக்கு முன்னா் எரியூட்டப்பட்ட முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான புத்தக நிலையத்தை அதன் உரிமையாளரே எரித்து இருப்பதாக பொலிஸ் மோப்ப நாய் கண்டு பிடித்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனையடுத்து முஸ்லிம்களின் இழப்புகள் எல்லாம் அவா்களே செய்து கொண்டவைதான் என்ற தொனியில் பொலிஸ் ஊடக பேச்சாளரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளன.
பொலிசாரின் ஆதரவுடன் சிங்களவர்களே கொலை, கொள்ளை தீவைப்பில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும போன்றோர் குற்றம்சாட்டி வரும் நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் முழுப் பூசினிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டுள்ளார்.
அத்துடன் அளுத்கம இனக்கலவரத்தின் அடுத்த நாளே சிரச நிறுவனத்தில் பணியாற்றும் சாலிய டி. ரணவக்க போன்ற பொதுபல சேனா முக்கியஸ்தர்கள் இதே கருத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பத் தொடங்கியிருந்தனர்.
இந்நிலையில் பொலிஸ் திணைக்களமும் அதே கருத்தை தற்போது வெளியிட்டிருப்பது, பொது பல சேனா எழுதிக் கொடுப்பதை வாசிப்பதுதான் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் பணியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnt5.html
காதலிக்காக ஒரு சண்டை! இனக்கலவரமாக்கும் பொது பல சேனா முயற்சி தோல்வி!
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 11:44.24 PM GMT ]
இந்தச் சம்வம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பதுளையில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அங்கு வந்து சென்ற அழகான சிங்கள யுவதியொருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனை அறிந்த அந்த யுவதி பணியாற்றும் நிறுவனத்தின் மேலதிகாரியொருவர், இன்று காலையில் பதுளை நகரில் வைத்து அந்த யுவதியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இந்த வாலிபர் பொதுபல சேனாவின் தீவிர ஆதரவாளர் என்பதுடன், பதுளையில் இனக்கலவரமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் முன்னின்று செயற்பட்டு வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான தகவலறிந்து வந்த யுவதியின் முஸ்லிம் காதலனுக்கும், சிங்கள வாலிபர் ஒருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் முற்றி, அடிதடி நடைபெற்றுள்ளது. இதில் காயமடைந்த சிங்கள வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இச்சம்பவத்தை ஊதிப் பெருப்பிக்க முயன்ற பொது பல சேனா தீவிரவாதிகள், பதுளையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் ஒன்றுக்கு நேற்று வியாழக்கிழமை மாலை வரை தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் பொலிசாரின் சமயோசித முயற்சி காரணமாக அவை முறியடிக்கப்பட்டது.
மேலும் பதுளையில் எதுவித பொதுக் கூட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் விதித்துள்ள தடையுத்தரவும் பொது பல சேனாவினருக்கு எதிராக அமைந்துவிட்டது.
இதற்கிடையே பதுளையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கான தகவல் கிடைத்தவுடன், அப்பகுதி சிங்கள, தமிழ் பிரமுகர்கள் சிலர் பொது பல சேனாவிற்கு தகுந்த பாடமொன்றை புகட்ட நேற்று நள்ளிரவு வரை தயாராக இருந்துள்ளனர்.
இது பற்றிய தகவல் வெளியில் கசிந்த நிலையில், இனக்கலவரத்தை எதிர்பார்த்து வெளி இடங்களில் இருந்து பதுளைக்கு வந்திருந்த பொது பல சேனா ஆதரவாளர்கள் நள்ளிரவு தாண்டிய நிலையில் மெதுவாக பிரதேசத்தை விட்டு நழுவிக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே குருநாகலில் பஸ் வண்டியில் பயணித்த முஸ்லிம் ஒருவர் மீது அருகில் அமர்ந்திருந்த பெண் மீது பாலியல் சேஷ்டை புரிந்ததாக குற்றம்சாட்டி, பஸ்ஸிலிருந்த பலர் அவரைத் தாக்கியுள்ளனர். இது தவிர வேறு சில இடங்களில் முஸ்லிம் பெண்களின் பர்தாவைக் கழற்றவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.
மேலும் இனிவரும் காலங்களில் நகர்ப்புறங்களுக்குத் தனியாக வரும் முஸ்லிம் பெண்களின் பர்தாவைக் கழற்றி வம்புக்கிழுத்து இனக்கலவரத்துக்கான சூழலை உருவாக்கவும் பொது பல சேனா திட்டமிட்டிருப்பதை அதன் முக்கியஸ்தர் டிலந்த விதானகே தனது பேஸ்புக் பக்கத்தில் சாடைமாடையாக பதிந்திருந்தார். இந்நிலையில் அவரது பேஸ்புக் பக்கம் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnt6.html
Geen opmerkingen:
Een reactie posten