தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

பொதுபல சேனாவினால் ஆரம்பிக்கப்படும் பயிற்சி எதற்காக?

மகிந்தவிற்கு அரேபிய நாடுகள் எச்சரிக்கை!

அளுத்கம தர்கா நகர் பேருவளை தாக்குதல்கள் நடைபெற்றதை சுட்டிக் காட்டியும் கோட்டா அதன் பின்னணில் இருப்பதாலும் மகிந்தவை சந்தித்த அரபு நாடுகளின் தலைவர்கள் தம்பியை (கோட்டா) கவனிக்கவும் என்று எச்சரித்துள்ளார்கள்.
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரணை செய்ய ஐ.நா இலங்கைக்குள் வருவதை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக அரபு நாடுகள் வாக்களித்திருந்தன. அது மட்டுமல்ல இலங்கையில் நிறைய அபிவிருத்தி வேலைகள் செய்வதிலும் அரபு நாடுகள் கூடுதலான நிதி உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளன.இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கணிசமானோர் தொழில் புரிகின்றனர்.
மகிந்த இந்த நாடுகளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியவில்லையாயின் ஒரு புறம் ஐ.நா விசாரணைக்கு அரபு நாடுகள் கூடிய ஆதரவை வழங்கலாம், நாட்டில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்,அரபு நாடுகளில் வேலை செய்யும் பல இலட்சக்கணக்கான இலங்கையர்கள் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படலாம். இதனால் இலங்கையில் வறுமை தாண்டவமாடும்.
இவற்றை எல்லாம் சரிசெய்ய மகிந்தவிற்கு இப்போது இருப்பது ஒரே வழிதான் சாஸ்த்திரம் பார்ப்பதோ மாலைதீவு சியஸ் தீவுகளுக்கு ஓடுவதோ அல்ல, முதலில் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க வேண்டும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் அழிவுகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் நாட்டில் மீண்டும் வன்முறை வராமல் தடுக்க வேண்டும்.


இவற்றை விட்டு விட்டு அவரின் வழமையான விளையாட்டை தொடர்ந்து காட்டுவாரானால் நிலைமை கடும் மோசமாக இருக்கும்.என்று தெரிவிக்கப்படுகின்றது.Makintha-Muslims
http://www.jvpnews.com/srilanka/74877.html

இணையத்தள சிறுவர் துஷ்பிரயோகத்தில் 6 பேர் கைது

இணையத்தளங்களின் வாயிலாக சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களில் இதுவரை 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் அரசாங்க உத்தியோகத்தர்களும் சில நிபுணர்களும் உள்ளடங்கவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அநோமா திஸாநாயக்க தலைமையின் கீழ் இயங்கும் மேற்படி அமைப்பின் புலனாய்வு பிரிவினரே இவ்வாறு 6 பேரை கைதுசெய்துள்ளனர். இது தொடர்பில் அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘இதுவரை 2000 பேர், இணையத்தளங்களின் மூலமாக சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சித்துள்ளனர். இந்நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அறியவரும்போது 24 மணி நேரமும் செயற்பாட்டில் இருக்கும் இவ்வமைப்பின் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்க முடியும்.
இச்சம்பவங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக ஆசிரியர்களும் பெற்றோர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேணடும்.
இணையத்தளங்களின் வாயிலாக சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் தந்திரமிக்கவர்களாக காணப்படுவதால் சிறுவர்களும் இதுகுறித்து நிதானத்துடன் செயற்பட வேண்டும்’ என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/74870.html

நடுக்கடலில் தத்தளிக்கும் படகு! மறுக்கிறது அவுஸ்திரேலியா

கடந்த 13ஆம் திகதி, தமிழகத்தின் புதுச்சேரியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் 32 பெண்கள், 37 குழந்தைகள் உட்பட 152 பயணித்துள்ளனர்.
இவர்கள் பயணித்த படகு எண்ணெயக் கசிவுக் காரணமாக அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து சுமார் 250 கீ.மி தொலைவில் நடுக்கடலில் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையிலேயே இச்செய்தினை ஸ்கொட் மொரிஸன் மறுத்துள்ளார்.

‘நடுக்கடலில் படகு சிக்கித்தவிபதாக தகவல்கள் இல்லை, அவ்வாறு படகு ஏதும் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் கிடைத்தால் அதனை மீட்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/74867.html

பொதுபல சேனாவினால் ஆரம்பிக்கப்படும் பயிற்சி எதற்காக?

இலங்கையில் பொது பல சேனா தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளது. தலைமைத்துவப் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பிற்கு அழைப்பும் விடுத்துள்ளது.அரசாங்கம் தனது உப குழுக்கள் ஊடாகவும் செயற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.
பொதுபலசேனா இயக்கத்துக்கு இலங்கையின் ஒவ்வொரு பிரதேசத்திலும் உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (29.06.2014), கொழும்பு- 07 இல் உள்ள பொது நூலகத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பகிரங்கமாக நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/74880.html

Geen opmerkingen:

Een reactie posten