தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

வன்முறை சேதங்களை புனரமைக்க 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு!

நிகழ்வு ஒன்றில் ஆளும் கட்சி முக்கியஸ்தர்களுக்கு இடையில் மோதல்!
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 03:59.22 PM GMT ]
ஆளும் கட்சியின் முதலமைச்சர் ஒருவருக்கும், பிரதி அமைச்சர் ஒருவருக்கும் இடையில் பகிரங்க வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் மற்றும் கல்விச் சேவை பிரதியமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
எப்பாவெல சித்தார்த்த பாடசாலையில் மஹிந்தோதய கட்டிடமொன்றை அமைக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற போது இந்த மோதல் வெடித்துள்ளது.
எஸ்.எம். ரஞ்சித்:  ஜனாதிபதி இதனை எனக்கே ஒப்படைத்துள்ளார்
துமிந்த திஸாநாயக்க:   உங்களுக்கு என்ன ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.  பாடசாலையில் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இருந்தால் அவரே நிகழ்வின் பிரதம அதிதியாகும். உங்களுக்குத் தெரிந்த விடயத்தை பேசுங்கள்.
எஸ்.எம். ரஞ்சித்:   நீங்கள்தான் இதனை மாற்றியமைக்கின்றீர்கள்.
துமிந்த திஸாநாயக்க: நாங்கள் எங்கு மாற்றினோம். பிழைகளை திருத்திக் கொள்ளுமாறே உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றோம்.
எஸ்.எம். ரஞ்சித்:  மக்களின் முன்னிலையில் நீயெல்லாம் தான் பிழை செய்தாய்.
துமிந்த திஸாநாயக்க:  பேசப் பழகிக் கொள்ளுங்கள். நீ எனச் சொல்ல நான் என்ன வண்டியோட்டியா? என கடுமையாக வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnt0.html

நாமல் ராஜபக்ச சர்வமத மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார்
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 03:47.04 PM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சர்வமத மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார்.
அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இன்று இந்த மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
மல்வத்து பீட மாநாயக்கர்கள், ஏனைய மதத் தலைவர்கள் உள்ளிட்ட 1500 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
பல்வேறு இன சமூகங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவ மாணவியரும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
நம்பிக்கை தொடர்பில் மதத் தலைவர்கள் இங்கு சொற்பொழிவாற்றியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbntz.html


ரஜரட்டை பல்கலைக்கழகத்துக்கு கலகம் அடக்கும் பொலிஸார் அனுப்பி வைப்பு
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 04:04.50 PM GMT ]
வடமத்திய மாகாணத்தின் ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் தற்போது பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் ரஞ்சித் ஸ்ரீவர்த்தன மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள் நிர்வாக கட்டிடத்துக்குள் மாணவர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் இருந்து 28 மாணவர்கள் விரிவுரை தடைக்கு உட்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இவர்களுக்கான தடையை பல்கலைக்கழகம் விதித்துள்ளது.
இந்தநிலையில் இந்த தடையை நீக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை முதல் நிர்வாகத்துக்கும் மாணவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது.
எனினும் பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாமையை அடுத்தே துணைவேந்தர் உட்பட்டவர்களை மாணவர்கள் தடுத்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து பல்கலைக்கழகத்துக்கு கலகம் அடக்கும் பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnt1.html
வன்முறை சேதங்களை புனரமைக்க 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு!
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 04:12.28 PM GMT ]
அளுத்கமை மற்றும் தர்கா நகர்களில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சேதங்களை புனர்அமைக்க 200 மில்லியன் ரூபாய்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்க அமைச்சர் குணரத்ன வீரக்கோன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 
களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வன்முறைகளின் போது பேருவளை, களுத்துறை, பெந்தோட்டை அளுத்கம போன்ற இடங்களில் கட்டிடங்களுக்கு சேதங்கள் விளைவிக்கப்பட்டன.
இதனை படையினர் திருத்தியமைப்பார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnt2.html

Geen opmerkingen:

Een reactie posten