தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் மற்றும் புலனாய்வு சேவை பணிப்பாளர் இடையில் வாக்குவாதம்!

இலங்கை மருத்துவர் கொலை தொடர்பில் அவுஸ்திரேலியாவில் மனைவி கைது
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:46.57 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் மருத்துவர் ஒருவர் கொலையுண்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவியான இலங்கை பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தினேந்திர அத்துகோரள என்ற மருத்துவர் கொலை தொடர்பிலேயே இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 ஆம் திகதின்று 34 வயதான குறித்த மருத்துவர் காயங்களுடன் சென்டன் வீதியில் இறந்துகிடந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இந்தநிலையில் 34வயதான அவரது மனைவியின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் இன்று காலை நீதிவான் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnu7.html
பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் மற்றும் புலனாய்வு சேவை பணிப்பாளர் இடையில் வாக்குவாதம்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 09:10.23 AM GMT ]
அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் சம்பவங்களுக்கு பொலிஸாரின் வினைத்திறன் இன்மையே காரணம் என அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் சந்திர வாகிஸ்ட தெரிவித்துள்ளார்.
வாகிஸ்டவின் இந்த கருத்தால் கடும் ஆத்திரமடைந்துள்ள பொலிஸ் மா அதிபர், புலனாய்வுப் பிரிவினர் உரிய நேரத்தில் புலனாய்வு அறிக்கையை வழங்காததே இவற்றுக்கொல்லாம் காரணம் எனக் கூறியுள்ளார்.
பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நள்ளிரவில் அனுப்பு எந்த அறிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதிகாலையில் இருந்து மதியம் இரண்டு மணி வரை அடிப்படைவாத பௌத்த பிக்குகளுக்கு பின்னால் திரியும் வாகிஸ்ட, இரண்டு மணிக்கு பின்னர் அலுவலகத்திற்கு வந்து பின்னிரவு 2 மணிவரை அலுவலக பணிகளை செய்து விட்டு, அறிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவது வழமை.
அரச புலனாய்வு சேவை பணிப்பாளரின் அலுவலகம் பௌத்த விவகார திணைக்களத்தை விட பௌத்த பிக்குகள் கூடும் இடமாக தற்போது மாறியுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தில் பேசப்பட்டு வருகிறது.
அரச புலனாய்வு சேவை பணிப்பாளரின் அலுவலகத்திற்கு வரும் பிக்குகளில் பெரும்பாலானோர், பொதுபல சேனா, சிங்கள ராவய, இராவணா பலய ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
60 வயதாகும் நிமல் சந்திர வாகிஸ்ட, பணியில் இருந்த ஓய்வுபெற வேண்டும் என்ற போதிலும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த அடிப்படைவாதிகளுடன் நெருக்கமான உறவுகளை பேணி பணி நீடிப்பை பெறும் நோக்கத்தில் செயற்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவித்தன.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnxz.html

Geen opmerkingen:

Een reactie posten