தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

இலங்கை இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை

இலங்கையின் ஆட்சி மாற்றத்துக்கு முயற்சிக்கும் மேற்கத்தைய நாடுகள்! தடுக்கும் முயற்சியில் அரசாங்கம்!
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 02:01.22 AM GMT ]
இலங்கையின் அரசியலில் மேற்கத்தைய நாடுகளின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா என்பன இந்த செல்வாக்கை செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
கடந்த வாரத்தில் அளுத்கமையில் இடம்பெற்ற முஸ்லிம்;களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னரே இந்த செல்வாக்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கா தூதுவர் மிச்செய்ல் சிசன், இதில் மிக முக்கிய பாத்திரத்தை கொண்டிருக்கிறார்.
அளுத்கம சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவரும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரங்கீனும் ஒன்றாக சேர்ந்து ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
அதேநேரம் அமைச்சர் ரவூப் ஹக்கீமை அமெரிக்க தூதுவர் சந்தித்தார்.
இதேவேளை நேற்று அளுத்கம சம்பவத்தின் போது பொதுபலசேனாவின் தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரபெருமவை தூதுவர் சந்தித்துள்ளார்.
இதேவேளை மிக முக்கியமாக ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜீத் பிரேமதாஸவுக்கும் இடையிலான வேறுப்பாடுகளை அமெரிக்கா தற்போது தீர்த்து வைத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கப்பால், நீண்டகாலமாக இலங்கையின் அரசியலில் முக்கிய ஊடகமாக கருதப்படும் சிரச தொலைக்காட்சி ரணில் விக்ரமசிங்கவின் பேட்டியை ஒலிபரப்பு செய்யவுள்ளது.
இலங்கையின் பலமிக்க எதிர்க்கட்சி ஒன்றை அமைக்கும் முயற்சியின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிரச ஊடகம் அறிவித்துள்ளது.
இவையாவும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கான அடிப்படைகளாக அமைந்துள்ளன.
எனினும் தமது பரம்பரைக்கான ஆட்சியதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கும் ஜனாதிபதியும், அவரின் சகோதரர்களும் ஆட்சி மாற்றத்தை தடுக்க தன்னாலான அனைத்தையும் செய்வர் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனவே இலங்கையின் அரசியலில் எதிர்காலத்தில் பாரிய மாற்றங்களை, குழப்பநிலைகளை எதிர்ப்பார்க்க முடியும் என்று அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnu1.html
கட்சிக்குள் மாற்றங்களை கொண்டு வர ரணில் முயற்சி - அரசாங்கம் சர்வதேச சமூகத்தை எதிரியாக்கிக் கொண்டுள்ளது!– சஜித் பிரேமதாச
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 02:08.41 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாப்பரசர் இலங்கை வருகிறார். இந்தநிலையில் தமது கட்சிக்குள் மாற்றங்களை கொண்டு வர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கட்சிக்குள் இருக்கும் தீவிர போக்குடையவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போரில் மாற்றத்தை கொண்டு வரவே அவர் முயற்சிப்பதாக கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன் அமரதுங்கவை அந்த பதவியில் இருந்து அகற்றி அந்த இடத்துக்கு கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்லையை நியமிக்க அவர் முயற்சிக்கிறார்.
பல தடவைகளாக அமைச்சு பதவி உறுதியளிக்கப்பட்டு அரசாங்கத்துக்கு அழைக்கப்பட்ட போதும் அவர் அதனை மறுத்து தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருப்பதை கருத்திற்கொண்டே ரணில் இந்த முயற்சிகயை மேற்கொண்டுள்ளார். எனினும் அவர் அதனை ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கம் சர்வதேச சமூகத்தை எதிரியாக்கிக் கொண்டுள்ளது – சஜித் பிரேமதாச
அரசாங்கம் சர்வதேச சமூகத்தை எதிரியாக்கிக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தை எதிரியாக்கிக் கொண்டதன் மூலம் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.
ஆளும் கட்சி அமைச்சர்கள் மேடைகளில் வீராவேசமாக பேசும் பேச்சுக்களுக்கு தொடர்ந்தும் கரகோசம் எழுப்பி உற்சாகமளிக்க மக்கள் தயாரில்லை.
அமைச்சாகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடும்போக்குவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், சர்வதேச சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டுமெனவும மேடைகளில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு விசாரணைகளை நடத்தவுள்ளது.  விசாரணைக்குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், விசாரணைக் குழுவின் விசாரணைகளை நிறுத்த முடியாது.
அரசாங்கம் அமைச்சர்களை தர்ம தூதர்களாக்கி நாடு முழுவதிலும் அனுப்பி வைத்துள்ளது.
அண்மைய வன்முறைகளில் உயிர், உடமை மற்றும் உள ரீதியான பாதிப்புக்களை எதிர்நோக்கியவர்களுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது.
பாரிய சேதம் விளைவிக்கப்பட்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு ஆற்றுப்படுத்துவது.
ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள அரசாங்கம் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.
மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்து அரசாங்கம் செய்வதறியாது செயற்பட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை கொஹலகங்கல என்னும் இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnu2.html
இலங்கை இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 02:37.06 AM GMT ]
இலங்கை இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என இந்திய ஊடகமான தி ஹிந்து ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர், தெற்கின் சுற்றுலா நகரங்களான பேருளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் பாரியளவில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் உருவாக்கப்பட்ட பௌத்த மத அமைப்பு ஒன்றே இந்த சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத காரணத்தினால் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
1980களில் இடம்பெற்ற ஜே.வி.பி வன்முறைகளை நினைவூட்டும் வகையில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றது.
கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கு எதிராக இதற்கு முன்னரும் இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அமைப்பின் நடவடிக்கைகளை அரசாங்கம் வேறு வார்த்தைகளினால் கண்டிக்கப்பட்டாலும், அந்த அமைப்பின் முக்கிய நிகழ்வுகளில் ஜனாதிபதியும் அவரது பலம்பொருந்திய சகோதரர்களும் பங்கேற்றுள்ளனர்.
நடுநிலையாக சிந்திக்கும் அனைத்து மக்களும் இந்த வன்முறைகளை கண்டிக்கின்றனர்.
ஏற்கனவே தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாத நிலையில் முஸ்லிம் பிரச்சினைகளை தூண்டுவது ஆரோக்கியமானதல்ல.
பிரச்சினைகளை சரியாக புரிந்து கொண்டு அதற்கு தீர்வு வழங்காது அரசாங்கம் கடந்த காலத்திற்கு செல்லவே முயற்சித்து வருவதாக தி ஹிந்து குற்றம் சுமத்தியுள்ளது.
யாரும் உயிர்களுக்கோ சொத்துக்களுக்கோ சேதம் விளைவிக்க முடியாது. அதற்கு அனுமதியில்லை என்பதனை அரசாங்கம் எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் வெளிப்படுத்த வேண்டும்.
அரசாங்கம் வரலாற்றில் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதே இவ்வாறான சம்பவங்களின் மூலம் தெளிவாகின்றது. கௌதம புத்தர் இதனை கற்பித்தார்? என பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnu4.html

Geen opmerkingen:

Een reactie posten