தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

ஐ.நா விசாரணை தொடர்பில் சம்பந்தன் MP நழுவல்!

UN மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் முன் முஸ்லிம்கள் போராட்டம்

ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் என்ற அமைப்பினால் அந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கூடிய நூற்றுக்கணக்கான இலங்கையின் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள், வன்செயலுக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.UN-Muislim
BBC
http://www.jvpnews.com/srilanka/74889.html

UN விசாரணைக் குழு இன்னமும் அனுமதி கோரவில்லை GL பல்டி

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழு, சிறிலங்கா வருவதற்கு இன்னமும் நுழைவிசைவு கோரவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த விசாரணையை எதிர்க்கும் முடிவில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் பின்வாங்கவில்லை என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. கடந்தவாரம், இந்த விசாரணைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மூன்று ஆலோசனை நிபுணர்களை நியமித்திருந்தார்.
அத்துடன், ஐ.நா விசாரணைக் குழு தமது விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேட் கொல்வில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/74894.html

ஐ.நா விசாரணை தொடர்பில் சம்பந்தன் MP நழுவல்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நியமித்துள்ள விசாரணைக் குழு முன்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாட்சியமளிக்குமா என்பது குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.
2009ம் ஆண்டு சிறிலங்கா வந்திருந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம், பொறுப்புக் கூறும் செயல்முறைக்கு இணங்கியிருந்தது. அதை அவர்கள் பின்பற்றவில்லை. நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்கவில்லை. உண்மைகள் வெளிக் கொண்டுவரப்படும் வரை, உண்மையான நல்லிணக்கம் சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74897.html

Geen opmerkingen:

Een reactie posten