தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 juni 2014

நினைக்கும்போதே நெஞ்செல்லாம் புல்லரிக்கும் நினைத்து பார்க்கவே முடியாத உண்மைச்சம்வம் !

விதையாக தொலைந்த குழந்தை இன்று விருட்சமாக தன தாயின் முன்னால் வந்து நிற்கின்றான். நினைக்கும்போதே நெஞ்செல்லாம் புல்லரிக்கும் நினைத்து பார்க்கவே முடியாத உண்மைச்சம்வம்.
சரூ எனும் சிறுவன் 25 வருடங்களுக்கும் முன்னர் தவறுதலாக தொடரூந்து ஒன்றில் ஏறிவிட்டான். பாவம் சரூ தொடரூந்து புறப்பட்டு நின்ற இடம் 1000 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் எங்கோ ஒரு இடம். புதிய இடத்தில் தெரியாத மொழி தெரியாத மனிதர்களுக்கு மத்தியில் சரூ தனது நாளாந்த சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்க ஆரம்பித்திருந்தான். அந்த பகுதியில் அனாதையாகி விட்ட யாரோ சரூவை அனாதைகள் இல்லத்தில் சேர்த்து விட்டனர். அனாதைகள் இல்லத்தில் இருந்தவனை யாரோ ஒரு ஒஸ்ரேலியாவைச் சேர்ந்த புண்ணியவான் தத்து எடுத்துக்கொண்டு ஒஸ்ரேலியா சென்று விட்டார். 
சரூ தற்போது ஒரு ஒஸ்ரேலிய பிரஜை. தனது புதிய நாட்டில் வாழப்பழகி விட்டான். ஆயினும் சரூவின் உள்ளத்தில் இருந்தவை எல்லாம் பசுமரத்து ஆணி போல தனது சிறுவயது நாடும் இடமும் ஆகும். ஆயினும் மனதில் உள்ள உறுதி காரணமாக தனது தாயகத்தை தேட ஆரம்பித்திருந்தான். ஆந்த வகையில் பல மணிநேரம் சூகுளில் தேடியதன் விளைவாக தான் இந்தியன் என்றும் தனது தாயாரை தேடிச்செல்லும் புனித பயணத்தையும் ஆரம்பித்தான். 
இந்த புனிதமான மீள் இணைப்பு 2012 ஆம் ஆண்டு இடம்பெற்றது பல பத்திரிகை மற்றும் ஏனைய ஊடகங்களிலும் வந்து போய்விட்டது. ஆனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் சிறு சிறு விடயங்கள் விடுபட்டு போய்விட்டன. அவற்றையெல்லாம் தொகுத்து தற்போது எ லோங் வே ஹோம் எனும் தலையங்கத்துடன் புத்தகமாக கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ளது. 
பெரும்பாலான இந்திய குழந்தைகள் போன்று சரூவும் ஒரு ஏழைச்சிறுவன்தான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உண்பதற்கு போதியளவு உணவு கிடைப்பது இல்லை. அச்சந்தர்ப்பங்களில் சரூ தனது சகோதரனுடன் தொடரூந்துகளில் ஏறி பிச்சை எடுத்து கிடைக்கும் பணத்தை வீட்டுக்கு கொண்டு சென்ற ஏதோ உண்டு வந்தான். இந்த நிலையில் தான் ஒரு நாள் அவனுக்கு கரிநாளாக அமைந்தது. தொடருந்தில் ஏறியவன் இறங்கவில்லை. மறந்துவிட்டான் ஆதலால் அவன் ஒரு பெட்டியின் மூலையில் அப்படியே இருந்துவிட்டான். பின்னர் தான் தெரிந்தது தொடரூந்து எங்கேயோ வந்து விட்டது. சரூ உடனடியாகவே இறங்கி விட்டான். கண்விழித்து பார்த்தபோது அண்ணணை காணவில்லை !! ஆனால் அண்ணன் தொடரூந்தில் ஏறியதனைக்கண்டேன். என்னால் அதனை அந்த சந்தர்ப்பத்தில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் அதனை அக்கணத்தில் தவிர்க்கவும் முடியவில்லை. 
சரூ தனது பயணத்தை ஆரம்பித்த இடம் மத்திய பிரதேசத்தில் கண்டவா எனும் இடம். வந்து சேர்ந்தது 1000 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள கொல்கத்தா. முதல் ஒரு மாதம் சரூ மீளவும் தாயிடம் சென்றுவிடவே முயற்சித்துள்ளான். இந்த நிலையில் சரூவை அடிமையாக விற்றுவிடும் முயற்சியில் யாரோ ஒருவர் சரூவை கடத்தியுள்ளார். இந்த நிலையில் தான் சரூ மீட்கப்பட்டு சிறுவர்கள் இல்லத்தில் சேர்த்துவிட்டனர். தான் எந்த இடத்தை சேர்ந்தவன் என்பது கூட சொல்லமுடியாத நிலையில் இருந்தான் சரூ. 
பின்னர் சரூ ஒரு ஒஸ்ரேலிய குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டிருந்தான். ஒஸ்ரேலியாவில் நன்றாக படித்து தனது பட்டப்படிப்புக்களையும் சரூ முடித்துவிட்டான். ஆயினும் தனது முயற்சியில் இருந்து மனம் தளராத சரூ தனது தாயை உறவுகளை மற்றும் தனக்கு தெரிந்த முகங்களை தேட ஆரம்பித்திருந்தான். அந்த வகையில் சரூ இறுதியாக தேடுதலில் வந்து சேர்ந்த இடம் தான் கூகுள் வரை பட தொகுப்பு. 
சிறுவயதில் தான் பயணம் செய்த நேரம் 14 மணித்தியாலம் என்றும் தான் இறுதியில் வந்து சேர்ந்த கொல்கத்தாவை மையமாக கொண்டு தனது தேடுதலை ஆரம்பித்துவிட்டான் சரூ. 50 கிலோ மிற்றர் வேகத்தில் பயணித்தால் எந்த இடத்திலிருந்து அந்த தொடரூந்து பயணம் ஆரம்பித்திருக்கவேண்டும் என்று சில இடங்களை தெரிவு செய்து இருந்தான். அதனை தொடர்ந்து எனது வீடும் வீட்டை சுற்றியுள்ள புவியியல் அமைப்புக்களான தான் வழமையில் விளையாடும் ஆறு நீர்வீழ்ச்சி மற்றும் குறிப்பிட்டு செல்லும் இடங்களையும் தெரிவு செய்து தேட ஆரம்பித்தான். 
இந்த வகையில் நான் முதலில் தேடி கண்டுபிடித்த இடம் எனது வீட்டுக்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சி என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார் சரூ. 25 வருடங்களுக்கு பின்னர் போகின்றேனே எனது நகரம் மிகவும் மக்கள் தொகையுடன் அபிவிருத்தி அடைந்திருக்கும் என்று எண்ணி சென்ற சரூவுக்கு கிடைத்தது ஏமாற்றமே- 
காரணம் அவரது கிராமம் வெறிச்சோடிபோயிருந்தது. இந்த நிலையை கண்டதும் சரூவின் உள்ளத்தில் ஓடிய சிந்தனை எனது குடும்பத்தில் ஒருவரும் உயிருடன் இருக்கப்போவதில்லை என்பதாகும். ஆனால் சரூ கிராமத்தினுள் காலடி எடுத்து வைத்ததும் ஒரு கூட்டம் சரூ பற்றி ஆர்வமாக என்ன வேண்டும் என்று கேட்க அரம்பித்து விட்டது. இதுவே சரூவிற்கு ஒரு வகையில் உதவியாகவும் அமைந்து விட்டது. பின்னர் அவர்களுக்கு நான எனது விபரங்களை கூறி எனது சகோதரர் மற்றும் உறவினர்களின் விபரங்களை கூறினேன். 
பின்னர் ஒருவர் என்னை ஒரு நிமிடம் பெர்றுத்திருக்கும் படி கூறிவிட்டு அப்பால் சென்று விட்டார். அந்த ஒரு கணப்பொழுது எனக்கு ஒரு யுகமாக இருந்தது என்று சொன்னார் சரூ. பின்னர் என்னை மீளவும் கூட்டிச்சென்றவர் ஒகே நான் இப்பொழுது உங்களை உங்கள் அம்மாவிடம் அழைத்து செல்லப்போகின்றேன் என்று கூறினார். எனக்கு அந்த ஒரு சொல்லே மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது என்றார் சரூ. பின்னர் சில மீட்டர் தூரம் சென்றது அங்கே அந்த மூலைக்கு அப்பால் 3 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் எனது அம்மா பாத்திமா ஆவார். எப்போதும் அம்மாவை பற்றியே எண்ணிக்கொண்டிருக்கும் எனக்கு அம்மாவை அடையாளம் காணுவது கடினமான செயலே அல்ல என்று மெய்சிலிர்க்கின்றார் சரூ. 
அம்மாவை நான் உடலாலும் உள்ளத்தாலும் உணர்ந்த அந்த கணப்பொழுது ஒரு அணுகுண்டு என்னுள் வெடித்தது போல் இருந்தது என்று கண்ணீர் மல்கினார் சரூ இவ்வாறான மிகவும் சுவாரசியமான தகவல்களை கொண்ட இந்த புத்தகம் ஒஸ்ரேலியா பென்குய்ன் பதிப்பகத்தினரால் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.
 
http://www.athirvu.com/newsdetail/273.html

Geen opmerkingen:

Een reactie posten