தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juni 2014

ராஜபக்சேவின் வஞ்சக வலைவில் விழுவாரா மோடி

பாரதப் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்யப்படுவது தடுக்கப்படும் என்றும், இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படும் என்று தமிழகமும் உலக தமிழ் சமூகமும் நம்பி வந்தது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், நரேந்திர மோடி பிரதமரானவுடன் டெல்லி சென்று தமிழக மீனவர்களை கைது செய்யப்படுவதை தடுக்குமாறும், இலங்கை தமிழர்கள் விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
இவை ஒரு புறமிருக்க, கடந்த மே மாதம் 1ஆம் தேதியன்று சென்னை ரயிலில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சென்னை மண்ணடியில் இலங்கையை சேர்ந்த ஜாகீர் உசேன் என்ற பாகிஸ்தான் உளவாளியை பிடித்தனர். இலங்கையில் உள்ள கண்டியைச் சேர்ந்த அவனை அங்குள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தமிழகத்துக்கு உளவு பார்க்க அனுப்பி வைத்தது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் ஜாகீர் உசேன் மட்டுமல்ல மேலும் சில தீவிரவாதிகள் இலங்கையை தளமாக கொண்டு இந்தியாவை தாக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்த ராஜபக்சேவிடம் இது பற்றியும், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்தும், இலங்கை தமிழர் விவகாரம் குறித்தும் இந்தியா தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது ராஜபக்சேவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் திருந்தவில்லை. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல் தமிழக மீனவர்கள் நேற்று முன்தினம் வரை தொடர்ந்து தாக்கப்படுவதுடன் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
தமிழர்கள் மீனவர்கள் கைது விஷயத்திலும், இலங்கை தமிழர் விவகாரத்திலும் மோடி தலையிடாமல் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்த ராஜபக்சே, ஜாகீர் உசேன் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்தால் மோடியின் கவனத்தை திருப்பலாம் என முடிவெடுத்தார்.
இதனால் மட்டுமே தமிழ் சமூகத்தின் எண்ணங்களை தவிடுபொடியாக்க முடியும் என்று அவர் நம்புகிறார். இதையடுத்தே அந்நாட்டில் இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு அரசின் திட்டமிட்ட சதிச்செயல் இது என்றும், கருதப்படுகிறது. மேலும் அங்குள்ள பாகிஸ்தான் அகதிகள் அனைவரையும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி இனி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தானியர்கள் முன்கூட்டியே விசா அனுமதி பெறவேண்டும் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.
இவ்வாறு இஸ்லாமியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மோடி மகிழ்ச்சி கொள்வார். அதன் பின் தங்களுக்கு சாதமாக நடந்துகொள்வார் என நம்பி ராஜபக்சே தனது வஞ்சக வலையை விரித்துள்ளார். ஆனால் மோடி எதையும் ஆராய்ந்து பார்த்து செயல்படுபவர் என்பதும், அவரை எளிதில் யாரும் ஏமாற்ற முடியாது என்பதும் ராஜபக்சேவிற்கு இன்னும் தெரியவில்லை போலும்.
எனினும் ராஜபக்சேவின் இந்த வஞ்சக வலை அறுத்தெறிய வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ராஜபக்சேயின் இந்த சூழ்ச்சியை மோடிக்கு உணர்த்த தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
நன்றி
மாலைமலர்
http://www.jvpnews.com/srilanka/75041.html

Geen opmerkingen:

Een reactie posten