[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 04:02.49 AM GMT ]
மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 6 கிலோ 533 கிராம் வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnvy.html
நிதியமைச்சுக்கும் சிவில் விமானத்துறை அமைச்சுக்கும் இடையில் முறுகல்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 04:08.11 AM GMT ]
இதனை சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன ஏற்றுக் கொண்டுள்ளார்.
நிதியமைச்சின் கீழ் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் நிர்வாகம் வருகின்ற போதும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்கனவே நட்டத்தில் இயங்கிவருகிறது.
2013-14ம் ஆண்டுகளில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 25 பில்லியன் ரூபாய்கள் வரை நட்டமடைந்தது.
இந்தநிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் தற்போது 6523 பேர் பணியாற்றுகின்றனர். எனினும் இன்னும் அங்கு வெற்றிடங்கள் உள்ளன.
மொத்தமாக கடன் தொகையாக அந்த நிறுவனம் 230 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnvz.html
புதிய பிக்கு மாணவர்களின் காவியுடையை கழற்றுமாறு ஏனைய பிக்கு மாணவர்கள் வலியுறுத்தல்!
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 04:47.45 AM GMT ]
பௌத்த மதத்தலங்களில் பௌத்த பிக்குகளுக்கு உரிய போதனைகள் வழங்கப்படுகின்றன. எனினும் பல்கலைக்கழகங்களில் பயிலும் பிக்குமாணவர்கள் மாற்று போதனைகளை பின்பற்றுகின்றனர்.
1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல்கலைக்கழகங்கள் ஜேவிபி மற்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கின. எனினும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அவர்களிடம் இருந்து பல்கலைக்கழங்களை மீட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnv1.html
அளுத்கம பிரதேச அழிவைப் புனர்நிர்மாணம் செய்யும் படையினர்- கோத்தபாய
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 05:14.53 AM GMT ]
படையினரின் இலவச ஊழிய வளத்தைப் பயன்படுத்தியே இப் பிரதேசத்தில் சேதமடைந்த கட்டடங்கள் மீள் நிர்மாணிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச மாலை தீவுக்கு புறப்பட முன்னனர் இந்தப் பணிப்புரையை விடுத்ததாகவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அளுத்கம பிரதேசத்தில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டிருப்பதாகவும், தேசத்தை நேசிக்கும் எவரும் மற்ற இனங்களை தாக்கவோ அடிமைப் படுத்தவோ மாட்டார்கள் என கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnv3.html
83 இல் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் திட்டமிட்டே நடாத்தப்பட்டது- விக்னேஸ்வரன் ஆவேசம்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 06:02.30 AM GMT ]
வடமாகாண சபையின் 11 ஆவது அமர்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றும் போது,
இந்த தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்னரே நன்கு திட்டமிட்டு எந்தெந்த இடங்களில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதெல்லாம் சேகரிக்கப்பட்டே பின்னரே மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகி 13 இராணுவத்தினர் மரணம் அடைந்ததை காரணமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதே உண்மையாகும்.
மேலும், சிறுபான்மை இனங்களான தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்று பட்டு நிற்கும் போது இவ்வாறான தாக்குதலில் இருந்து எதிர்காலத்தில் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
1958 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர்கள் தமது வாழ்க்கையையும் நல்லமுறையில் நடத்திக்கொண்டு இருந்தார்கள்.
பின்னர் தனிச்சிங்கள மசோதா கொண்டுவரப்டபட்டு தமிழ் மக்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சிலர் வெளிநாடுகளுக்கு சென்றார்கள்.இன்னும் சிலர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள்.
இது கூட தமிழ் மக்களை தென்னிலங்கையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான பின்னணியையும் சற்று சிந்திக்க வேண்டும். தற்போது நடைபெறும் கலவரங்கள் சொத்தழிப்புக்களும் கூட முஸ்லிம் மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையிலும் மற்றும் அவர்களுடைய பலத்தைக் குறைக்கும் வகையிலும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றதா என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்தகைய செயற்பாடுகளின் அடிப்படையில் தான் இந்த வன்செயல்கள் இடம்பெறுகின்றன. இல்லாவிட்டால் ஓர் இடத்தில் முடிவடைந்த பின்னர் மற்றைய இடங்களுக்கும் தொடர வேண்டிய தேவையும் அவசியமும் இல்லை. வடமாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரம் தரமாட்டோம் என்று கூறுகின்றார்கள்.
இன்று சிங்கள மக்களிடம் பொலிஸ் அதிகாரம் இருக்கையில் முஸ்லிம் மக்கள் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இந்த வகையில் தான் நாம் கேட்கின்றோம் வட மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரத்தை தரும்படி. இத்தகைய நிலையில் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ்வதன் மூலம் இது போன்ற திட்டமிட்டு சிறுபான்மை மக்களை அழிப்பதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnv4.html
Geen opmerkingen:
Een reactie posten