[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 06:15.53 AM GMT ]
அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்புக்கு உட்பட்ட நிர்வாக உள்ளூராட்சி சட்ட நிர்வாக நிறைவேற்று அமைப்பான கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் தாங்களும் தங்கள் நிர்வகிப்புக்கு கீழான நிர்வாக அமைப்புக்களும் தொடர்ந்தும் மேற்கொள்வதாகவே அறிகின்றோம்.
இது பிரதேசசபை சட்டத்திற்கு முரணானது என்பதுடன் வடமாகாணசபை உள்ளூராட்சி அமைச்சின் சட்ட நிர்வாக ஒழுங்கமைப்புக்கு நேர் எதிர் நிலைச் செயற்பாடு என்பதையும் மீளவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எனவே பிரதேச சபையின் நிர்வகிப்புக்களான வீதிகள், சனசமுக நிலையங்கள், பாலங்கள், பூங்காக்கள், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கட்டுமாணங்களை அரச திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், கிராமிய நிறுவனங்கள் பிரதேசசபையின் நிர்வகிப்புக்கு உட்படுத்தியே திட்டமிடப்பட்டு நிறைவேற்றும் வரையறைந்த முறைமைகளை மேற்கொள்ளும் ஒழுங்கமைந்த கடப்பாட்டை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnv5.html
மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இராணுவ அதிகாரி கைது
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 06:25.07 AM GMT ]
புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 7வது மைல் கல் அருகில் வைத்து கருவலகஸ்வெவ பொலிஸார் அவரை நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி சாலியவெவ இராணுவ முகாமில் பணியாற்றி வந்துள்ளார். 30 வயதான அவர், தம்போவ தெவநுவர பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnv6.html
தற்கொலை முயற்சி வழக்கு: கைதான நிலையிலும் தொடரும் செந்தூரனின் உண்ணாநிலை
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 06:30.29 AM GMT ]
தமிழக முகாமில் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட செந்தூரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு முகாமெனும் பெயரில் உருவாக்கப்பட்ட வதைமுகாமில் அடைபட்டு அவதியுறும் ஈழ உறவுகளின் நலனுக்கா கடந்த மூன்று நாட்களாக உண்ணா நிலையில் இருந்து வந்த நமது ஈழத்து உறவான செந்தூரன் நேற்று(26) மாலை நான்கு மணியளவில் காவல்துறையினரின் வற்புறுத்தலால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை முடிந்தவுடன் தற்கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைதான நிலையிலும் தனது உண்ணாநிலையை தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட செந்தூரன் எந்த சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் என்பது அறியப்படவில்லை. அநேகமாக வேலூரில் அடைக்கபட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.
அவரின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாமல் வலுக்கட்டாயமாக கைது செய்வது என்பது அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை கலைக்கும் வண்ணம் உள்ளது.
அரசானது இதனை ஒரு தனிமனித கோரிக்கையென பாராமல் வதை முகாம்களில் அல்லலுறும் ஒட்டு மொத்த ஈழத்து உறவுகளின் குரலாக கருத்தில் கொண்டு அவர்கள் வாழ்வாதாரம் பெற்று குடும்பத்துடன் வாழ வழி செய்ய வேண்டுமென்று ஒட்டு மொத்த தமிழினமும் வேண்டி நிற்கிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnv7.html
Geen opmerkingen:
Een reactie posten