தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

கிரான்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு 2 பேர் பலி!

பௌத்த பிக்குவை தாக்கிய பெண்கள் உள்ளிட்ட 28 பேர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 04:14.18 PM GMT ]
பௌத்த பிக்குவை தாக்கிய பெண்கள் உள்ளிட்ட 28 பேரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
பன்வில ஹாதலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முனசிங்காராம விஹாரையின் விஹாராதிபதியை பிரதேச மக்கள் இணைந்து தாக்கியுள்ளனர்.
பிரதேச மக்களுக்கும் விஹாராதிபதிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பௌத்த பிக்குவைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் 14 பெண்களும், 13 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் 17 வயது இளைஞன் ஒருவரையும் பொலிஸார் கைது செய்து, சிறுவர் காப்பகமொன்றில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 3ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான விஹாராதிபதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLblo3.html
கிரான்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு 2 பேர் பலி!
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 09:04.40 PM GMT ]
கொழும்பு கிரான்ட்பாஸ் மாவத்த வீதியில் இன்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மற்றும் இருவர் காயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீதியில் நின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நால்வர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடுநடத்தியவர்கள் தாம் வந்த மோட்டார் சைக்கிளையும் போட்டுவிட்டு ஓட்டோவில் தப்பிச் சென்றனர்.
வீதியில் துப்பாக்கிச் சன்னங்கள் சிதறிக்கிடந்தன. போதை வர்த்தகத்தில் ஈடுபடும் இரு குழுக்களுக்கிடையோன மோதலே இந்தச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
2ம் இணைப்பு
கொழும்பில் துப்பாக்கிச் சூடு! இரண்டு பேர் பலி
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண, பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதை உறுதிப்படுத்தினார். மேலதிக விபரங்கள் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இன்னும் இரண்டு பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் குழுக்கள் இரண்டிற்கு இடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தற்போதைக்குத் தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLblo4.html

Geen opmerkingen:

Een reactie posten