[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 11:33.16 PM GMT ]
சிங்களப் பத்திரிகையான மௌபிம பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நாட்டில் 30 வருடங்களாக நீண்டுகொண்டிருந்த யுத்தத்தை வெற்றிகரமான முறையில் முடிவுக்குக் கொண்டு வந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சதான். அதுமட்டுமன்றி இந்நாட்டின் சிங்கள பௌத்தர்களுக்கு உரிய தலைமைத்துவம் வழங்கியதும் அவர்தான்.
சிங்கள மக்களின் தலைமைத்துவத்திற்கு தகுதியானவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான். அவரை விடத் தகுதியானவர் யாரும் தற்போதைக்கு நாட்டில் இல்லை.
இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் அவர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயற்பட்டு வருகின்றனர். அரசியல் ரீதியாக அவரைத் தோற்கடிப்பதற்கு சதிமுயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
அளுத்கம சம்பவம் போன்ற கலவரங்களை உருவாக்கி தமது இலக்குகளை அடைந்து கொள்ள முயற்சிக்கின்றனர். அதற்கு பொது பல சேனா ஒருபோதும் இடமளிக்காது என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் சூளுரைத்துள்ளார்.
இதுவரை காலமும் அரசாங்கத்துக்கும் பொது பல சேனாவுக்கும் யாதொரு தொடர்புமில்லை என்று இரு தரப்பும் கூறிவரும் நிலையில், ஞானசார தேரரின் இந்தக் கருத்து மூலம் அவர்களுக்கிடையிலான இரகசிய தொடர்பு அம்பலப்பட்டுள்ளது.
சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட அமைப்பே பொது பல சேனா என்பதும் மீண்டுமொரு தடவை நிரூபிக்கப்பட்டிருப்பதாக சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmp3.html
பாப்பரசரின் இலங்கை விஜயம் தடுக்கப்படக்கூடாது!- எரிக் சொல்ஹய்ம்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 11:39.45 PM GMT ]
இலங்கையில் இனக்குரோத நடவடிக்கைகள் தொடரும் அதே வேளை, அண்மையில் அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
இதனைக் கருத்திற் கொண்டு பாப்பரசர் இலங்கைக்கான விஜயத்தை கைவிட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் சுரேன் சுரேந்திரன் வலியுறுத்தியிருந்தார். அதன் மூலம் இலங்கை அரசுக்கு பாப்பரசர் தனது எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் ருவிட்டர் பதிவொன்றையும் வெளியிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாப்பரசரின் விஜயம் தடுக்கப்படலாகாது என்று நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹய்ம் வலியுறுத்தியுள்ளார். அதற்குப் பதிலாக இல்ஙகை விஜயத்தின் போது நேரில் காணும் அனுபவங்களைப் பொறுத்து அவர் தன் கருத்தை வெளியிடலாம் என்றும் எரிக் சொல்ஹய்ம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரூனின் முன்னுதாரணத்தைப் பின்பற்றும்படியும் சொல்ஹய்ம் ருவிட்டர் ஊடாக பாப்பரசரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது இலங்கைக்கு விஜயம் செய்த டேவிட் கமரூன், தமிழ்ப் பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே எதிர்வரும் ஜனவரி 13, 14ம் திகதிகளில் பாப்பரசரின் இலங்கை விஜயம் நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmp4.html
இனக்கலவரம் சிறிய விடயம்! பொலிஸ் மாஅதிபர் பதவி விலகத் தேவையில்லை!– மேர்வின் சில்வா
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 11:48.09 PM GMT ]
அளுத்கமவில் நடைபெற்ற இன வன்முறைகளின் போது பொலிசார் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்று ஐ.தே. க நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பொறுப்பேற்று பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும் என்றும், இல்லையேல் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா,
இது முட்டாள்தனமான கருத்து என்று விமர்சித்துள்ளார். உலகில் பல நாடுகளில் பாரிய இனக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதற்குப் பொறுப்பேற்று அந்நாடுகளின் பொலிஸ் மா அதிபர்களை யாரும் பதவி விலகச் சொல்லி வற்புறுத்தவில்லை.
அந்த சம்பவங்களுடன் ஒப்பிடும் போது அளுத்கமவில் நடைபெற்றது ஒரு சிறு சம்பவம் மட்டுமே. இதற்காக பொலிஸ் மா அதிபரை குற்றம் சாட்டுவது தவறு. அவர் நேர்மையானவர் மட்டுமன்றி திறமையானவரும் கூட. அவரைக் குற்றம் சாட்டுகின்றவர்கள் ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இன வன்முறைகளையும் மறந்துவிடக் கூடாது.
அவற்றுக்குப் பொறுப்பேற்று எந்தவொரு பொலிஸ் மா அதிபரும் பதவியைத் துறந்த முன்னுதாரணங்கள் இல்லை என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmp5.html
Geen opmerkingen:
Een reactie posten