தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

3 கப்பலை வன்னிக்கு கடத்திவந்த புலிகள் உறுப்பினர் ஒருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை !

ஒவ்வொரு நாளும் கடற்கரையிலும் காடுகளிலும் தமிழர்களின் சடலங்கள் ஒதுங்குகின்றன !

[ Jun 25, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 17270 ]
யாழ்.தும்பளை கிழக்கு (மூர்க்கம்) கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். தும்பளையினைச் சேர்ந்த முருகேசுப்பிள்ளை நிமல்ராஜ் (28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை வேளையில் தொழிலுக்குச் சென்றவர்கள் கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியிருப்பதாக தகவல் தெரிவித்தமையினையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் கூறினார்கள்.
http://www.athirvu.com/newsdetail/256.html

3 கப்பலை வன்னிக்கு கடத்திவந்த புலிகள் உறுப்பினர் ஒருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை !

[ Jun 26, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 11255 ]
விடுதலைப் புலிகள் வன்னியை ஆண்டவேளை 3 ஆயுதக்கப்பலை கடத்திவந்த புலிகள் உறுப்பினர் ஒருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கனகராஜா ரவிசங்கர் என்னும் புலிகள் உறுப்பினர் வன்னிக்கு குறைந்தது , 3 ஆயுதக் கப்பலை கடத்திவந்துள்ளார் என்று, பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்கள். பல மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன் தினம் வழங்கப்பட்டது. வவுனியா மேல் நீதிமன்றம் இவருக்கு 30 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்பழித்துள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
இலங்கையில் யுத்தம் நடைபெற்றவேளை, விடுதலைப் புலிகள் பல ஆயுதக் கப்பல்களை முல்லைத்தீவு கடல் பகுதிக்கு கொண்டுவந்தார்கள். அவற்றில் இருந்தே ஆயுதங்கள் இறக்கப்படுவது வழக்கம். இதில் பணியாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டே மேற்படி கனகராஜா ரவிசங்கருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது. 
குறித்த இந்த நபர் இலங்கையில் இல்லை என்பது தான் அனைவரையும் அதிரவைத்துள்ள விடையம். இவர் கனடாவில் வாழ்ந்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/265.html

Geen opmerkingen:

Een reactie posten