தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

முஸ்லிம் அமைப்புகள், பௌத்தர்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தியுள்ளன: சம்பிக்க ரணவக்க



இன்றைய சபை அமர்வில் செங்கோலை வெளியே கொண்டுசெல்ல விடாமல் சிவாஜிலிங்கம் போராட்டம்
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 03:12.17 PM GMT ]
சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் வடமாகாணசபை சபா மண்டபத்தில் நிலத்தில் உட்கார்ந்து செங்கோலை வெளியே கொண்டு செல்ல விடாமல் எதிர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் 11வது அமர்வில் நிறைவேற்றப்படுவதற்காக சிவாஜிலிங்கம் 3தீர்மானங்களை கடந்த 12ம் திகதி பேரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைத்திருந்துள் ளதுடன், பேரவை தலைவருக்கும் அனுப்பியுள்ளார். ஆனால் இன்றைய அமர்வில் அவருடைய பிரேரணைகள் சபைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் தன்னுடைய பிரேரணைகள் எதற்காக எடுத்துக் கொள்ளப்படவில்லை என கேள்வி எழுப்பிய சிவாஜிலிங்கம், கூட்டம் நிறைவடைந்ததும், செங்கோலை வெளியே கொண்டுசெல்ல விடாமல் சபா மண்டபத்தின் பிரதான வாயிலில் நிலத்தில் உட்கார்ந்து தன்னுடைய சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்.
இதன் பின்னர் சிவாஜிலிங்கம் பிரேரணையாக கொண்டுவந்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக் குழு தொடர்பான விடயங்கள் தேசிய அரசியலில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையாளப்படுகின்றது.
மேலும் இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் கூட்டமைப்பின் தலைமை 8பேர் கொண்ட குழுவினை நியமித்துள்ளது.
எனவே அவர்களுடைய முடிவுகள் கூறப்படும் வரையில் தீர்மானம் மாகாணசபையில் நிறைவேற்ற முடியாது,
ஒரு கட்சி என்ற வகையில் கட்சியின் தலைமைக்கு மதிப்பளிக்கவேண்டும், அவர்களுடைய தீர்மானத்திறகு கட்டுப்படவேண்டும்.
மேலும் தேசிய அரசியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜதந்திர ரீதியாக கையாளும் விடயங்களை, குறிப்பாக சர்வதேச விடயங்களை மாகாணசபையில் தீர்மானமாக நிறைவேற்றுவது அவர்களுடைய அந்த தேசியப் பணிக்கு இடையூறாக இருப்பதாக சபையில் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து தன்னுடைய எதிர்ப்பு போராட்டத்தைக் கைவிட்ட சிவாஜிலிங்கம் எழுந்து ஆசனத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டார். அதன் பின்னர் எவ்விதமான குழப்பங்களும் உண்டாகியிருக்கவில் லை.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnty.html
கோத்தபாய செயலாளர் அல்ல! பாதுகாப்பு அமைச்சராகவே செயற்படுகின்றார்!- விக்ரமபாகு
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 02:51.58 PM GMT ]
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தற்போது நாடு பூராகவும் அரசியல் செய்து வருகின்றார். ஒரு அரச ஊழியர் இவ்வாறு செயற்பட முடியாது. அவர் பாதுகாப்பு செயலாளர் அன்றி பாதுகாப்பு அமைச்சராகவே செயற்படுகின்றார் என்று நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போது நாட்டில் பெளத்த சாசனமும் சட்ட ஒழுங்கும் குப்பைக் கூடைக்குள் போடப்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார்.
கொழும்பில் நவசமசமாஜ கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது அரச ஊழியராக பணியாற்றி வரும் பாதுகாப்பு செயலாளர் நாடு பூராகவும் அரசியல் செய்து வருகின்றார். அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோருகின்றார். இவ்வாறு ஒரு அரச ஊழியரினால் கூற முடியாது.
ஆகவே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தற்போது பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டு வருகின்றார். அதேபோன்று இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவும் இவ்வாறே செயற்படுகின்றார்.
எனவே, அரச ஊழியர்களுக்கு அரசியல் செய்ய முடியுமாயின் ஏன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது?
நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நாட்டின் உயர்மட்டத்தில் உள்ளவர்களே சதித்திட்டம் தீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பௌத்த சட்ட ஒழுங்கும் குப்பை கூடத்திற்குள் போடப்பட்டுள்ளது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbns7.html
முஸ்லிம் அமைப்புகள், பௌத்தர்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தியுள்ளன: சம்பிக்க ரணவக்க
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 02:33.33 PM GMT ]
வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்படும் பல்வேறு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளில் குழுக்கள், பௌத்தர்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தியிருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் இடதுசாரி எனக் கூறிக்கொள்ளும் நபர்கள் இலங்கையில் பௌத்த பயங்கரவாதம் இருப்பதாக கூறுகின்றனர்.
தப்லிக் ஜமாத் அமைப்பு இலங்கைக்கு சமூகத்திற்குள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.
இதற்கு சிறந்த உதாரணத்தை அண்மையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைத்த தகவல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 800 புதிய முஸ்லிம் மாணவர்களை அந்நிய மதத்தினர் மற்றும் இனத்தவருடன் பழக இந்த அமைப்பினர் தடைவிதித்து உத்தரவிட்டதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
அத்துடன் தவ்ஹித் ஜமாத் அமைப்பு பௌத்த நம்பிக்கை மற்றும் புத்த பகவானுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbns6.html

Geen opmerkingen:

Een reactie posten