தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

புகலிடக் கோரிக்கையாளர்களை தயாராகுமாறு கிறிஸ்மஸ் தீவிற்கு பணிப்புரை ( படங்கள், வீடியோ இணைப்பு)

அலுத்கமவில் உயிரிழந்தவர்களுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்
அலுத்கம சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய முறையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஏற்கனவே நல்லடக்கம் செய்பய்பட்டுள்ளது. இந்த சடலங்களை தோண்டி எடுத்து உரிய முறையில் பிரதேப் பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளது.

இலங்கை மருத்துவ பேரவை மற்றும் அரசாங்க வைத்தியர்கள் சங்கம் ஆகியவற்றிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. அலுத்கம மோதல் சம்பவத்தில் மொஹமட் சிராஸ் மற்றும் மொஹமட் ஸஹாரன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த இருவரும் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது பற்றிய சரியான தகவல்களை வெளிப்படுத்த பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். நீதிமன்றில் கோரிக்கை விடுப்பதன் மூலம் உத்தரவு ஒன்றைப் பெற்றுக்கொண்டு பிரேதப் பரிசோதனை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
29 Jun 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1404032038&archive=&start_from=&ucat=1&
புகலிடக் கோரிக்கையாளர்களை தயாராகுமாறு கிறிஸ்மஸ் தீவிற்கு பணிப்புரை ( படங்கள், வீடியோ இணைப்பு)
புகலிடக் கோரிக்கையாளர்கள் வரும் பட்சத்தில், அவர்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு கிறிஸ்மஸ் தீவு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலர்னா மெக்-டியர்னான் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இரவு புகலிடக் கோரிக்கையாளர்களுடன் கூடிய படகொன்று அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் தமது படகில் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்கள்.

இந்தப் படகு தென்னிந்தியாவில் இருந்து வந்ததெனவும், அதில் 37 சிறுவர்கள் அடங்கலாக 152 பேர் இருப்பதாகவும் தெரிவதாக ஏபிசி செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இரு படகுகளில் இருந்த புகலிடக் கோரிக்கைகளை சனிக்கிழமை இரவு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றிருப்பதாக மெக் டியர்னன் தெரிவித்தார்.

எந்தவிதமான படகுகளும் வந்ததாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று குடிவரவு அமைச்சர் கூறி இருந்த போதும் நேற்று இரண்டு படகுகளை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


இவர்களை உடனடியாக நவ்ரு முகாமுக்கு அனுப்பிவைக்கப் படவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

29 Jun 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1404032228&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten