[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:09.35 AM GMT ]
மங்கள எம்.பி. வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பித்துள்ள நிலையில் இது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் குழப்பகரமான சூழலுக்கு இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று முஸ்லிம் தமிழ் இனத்தவர் மிக கொடூரமாக தாக்கப்படுகின்றமைக்கும் சிங்கள மக்களின் மத்தியில் இனவாதத்தினை பரப்பி நாட்டில் அமைதியை சீரழிக்கின்றமைக்கும் அரசாங்கமே காரணம்.
இன்று அரசாங்கத்தின் தனிப்பட்ட தேவைகளுக்காக புலனாய்வு பிரிவினை பயன்படுத்தி பல அட்டூழியங்களை செய்து கொண்டிருக்கின்றனர். நான் வெளியிட்ட கருத்துக்கள் அனைத்தும் உண்மைகளேயாகும்.
அதேபோல் நான் குறிப்பிட்ட கருத்துக்கள் பாதுகாப்பு பிரிவின் இரகசியங்களோ அல்லது இந்த நாட்டை பாதிக்கும் இரகசிய தகவல்களோ அல்ல. இவை இந்த நாட்டில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அட்டூழியங்களும் அதற்கு துணை போகும் நபர்களின் பெயர்களுமேயாகும்.
இதை வெளியிடுவது இந்த நாட்டை நேசிப்பவன் என்ற வகையில் எனது கடமையாகும். எனது கடமையினையே நான் செய்துள்ளேன்.
கேள்வி: நீங்கள் வெளியிட்ட கருத்தினால் இப்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதே?
பதில்: எனது கருத்துக்கள் நான் ஊடகங்களின் முன்னிலையில் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை. புலனாய்வு பிரிவின் தகவல்களை வெளியிட்டதனாலோ அல்லது பாதுகாப்பு செயலாளர் செய்யும் தவறுகளை வெளியிட்டதனாலோ இவர்கள் என்னை விசாரிக்க போவதில்லை. அவர்கள் தொடர்பான உண்மைகளை வெளியிட்டதே இப்போது இவர்களின் பிரச்சினையாக உள்ளது. எனது கருத்துக்கள் தொடர்பில் என்மீது எந்தவொரு விசாரணையினை மேற்கொண்டாலும் அதற்கு முகம்கொடுக்க நான் தயாராகவே உள்ளேன். நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை.
கேள்வி: புலனாய்வு பிரிவு தொடர்பில் நீங்கள் வெளியிட்ட செய்திகளுக்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா..?
பதில்: இந்த அரசாங்கம் செய்யும் கடந்த காலங்களில் செய்த குற்றங்கள் தொடர்பில் சகல ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. புலனாய்வு பிரிவினை பயன்படுத்தி இந்த அரசாங்கம் பெரிய குற்றங்களை செய்து கொண்டிருக்கின்றது.
அளுத்கம இனக்கலவரம் மட்டுமல்ல இன்றும் சில சம்பவங்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் பாதுகாப்பு செயலாளரின் கட்டளையுடன் இடம்பெற்றுள்ளது. என்னைக் கைது செய்தாலும் இல்லாவிட்டாலும் இந்த அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பிலான இன்னும் பல உண்மைகளை வெளியிடுவேன். இந்த நாட்டில் அப்பாவி மக்களை கொடுமைப்படுத்தும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இனிமேலும் இடமளிக்கக்கூடாது.
கேள்வி : பாதுகாப்பு செயலாளர் மீது வெளிப்படையாகவே குற்றம் சுமத்துவது ஏன்?
பதில்: நாட்டில் இராணுவ ஆதிக்கம் அதிகரிப்பதற்கும் தீவிரவாத அமைப்புகள் பலப்படுவதற்கும் பாதுகாப்பு செயலாளர் காரணம் என நான் கடந்த இரு வருடங்களுக்கு முன்னரே தெரிவித்து விட்டேன். இப்போது குறிப்பிடுவது புதிய விடயமல்ல. இன்று பொதுபலசேனா என்ற பௌத்த அமைப்பு தலைதூக்கவும் அவர்கள் சிறுபான்மை இனத்திற்கு அடக்கு முறைகளை பயன்படுத்தவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே காரணம். அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் பொதுபலசேனா அமைப்பு செயற்பட்டது என்பதே உண்மை. இவ் அமைப்பிற்கான உதவிகளையும் பாதுகாப்பினையும் பாதுகாப்பு செயலாளரே செய்துள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பொதுபலசேனா அமைப்பினை இவர் சந்தித்துள்ளார். இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோகும் செயலையும் பொதுபலசேனாவுக்கு உதவிகளையும் பாதுகாப்பினையும் வழங்குவது பாதுகாப்பு செயலாளரே. அவர்களுக்கிடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவர்களுக்கான நிதி உதவிகளையும் இவரே செய்து கொண்டுள்ளார்.
இலங்கையில் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த இனிமேல் இடமளிக்கக்கூடாது. சர்வதேச சக்திகள் அரசாங்கத்திற்கு எதிராக பலமடைந்து விட்டன. இனிமேல் இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அடக்கு முறைகளை கையாள்வது எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். இது சிங்கள மக்களையே பாதிக்கும் என்பதை இந்த அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnu5.html
ஜெனிவா 26வது அமர்வு இன்றுடன் நிறைவு! செப்டெம்பரில் இலங்கை குறித்து வாய்மூல அறிக்கை!
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:20.13 AM GMT ]
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 26 வது கூட்டத் தொடர் இம்மாதம் 10ம் திகதி ஆரம்பமானது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் மனித உரிமைப் பேரவையின் இம்முறைக் கூட்டத் தொடரில் 48 பிரேரணைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் பொதுவான மனித உரிமை விவகாரங்கள் குறித்தே இந்த பிரேரணைகள் உறுப்பு நாடுகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையை பொறுத்தவரை இம்முறை கூட்டத் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜெனிவா மனித உரிமைப் பேரவைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான அதிகாரிகள் மட்ட குழுவினர் கலந்துகொண்டனர். அத்துடன் ரவிநாத ஆரியசிங்க கூட்டத்தில் உரையாற்றியிருந்தார்.
அதேவேளை இம்முறை கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான பரந்துபட்ட விசாரணையை மேற்கொள்வதற்கான நிபுணர்கள் மற்றும் விசேட அறிக்கையாளர்கள் உள்ளடங்கிய விசாரணைக் குழுவை நியமித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இம்முறைக் கூட்டத் தொடரே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆணையாளராக கலந்துகொள்ளும் இறுதிக் கூட்டத் தொடராகும். அவர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வுபெறுகின்றார்.
அவருக்கு பதிலாக ஜோர்தான் நாட்டுக்கான ஐ.நா வின் நிரந்தரத் தூதர் செயித் அல் ஹுசைன் புதிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சயித் அல்-ஹுசைன், ஜான்ஸ் ஷாப்கன்ஸ் பல்க லைக்கழகத்தில் பயின்றவர். கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
இதேவேளை நேற்று முன்தினம் இலங்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான விசாரணைக் குழுவின் விசேட நிபுணர்கள் குழுவை மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அறிவித்தார். அந்தவகையில் பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அத்திசாரி, நியூசிலாந்தின் உயர் நீதிமன்ற நீதிவான் சில்வியா கட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹான்கீர் ஆகியோர் இந்த விசாரணைக் குழுவின் நிபுணத்துவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இம்முறைக் கூட்டத் தொடரின்போது ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் சலோகா பெயானியும் தனது அறிக்கையை வெளியிட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அவர் இலங்கையின் மீள்குடியேற்றம் குறித்த விசேட அறிக்கை ஒன்றை இம்முறை மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடருக்கு கையளித்திருந்தார். அத்துடன் கடந்த 12 ஆம் திகதி அமர்வின்போதும் அவர் உரையாற்றியிருந்தார்.
அதில் இலங்கையில் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நிலையில் இருக்கின்ற மக்களின் நிலை குறித்தும் வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் வாழ்கின்ற மக்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 27வது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளதுடன் அதில் இலங்கை குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு தனது வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnu6.html
பணம் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பௌத்த பிக்குவை கொலை செய்தோம்: சந்தேக நபர்கள் சாட்சியம்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 04:37.40 AM GMT ]
அலஹர பகமுன ஹிரடிய புன்யாராமயவின் விஹாராதிபதி அலகொலமடல தம்மரதன தேரர் கடந்த 22ம் திகதி கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
பௌத்த பிக்குவின் கொலை தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவரை கைது செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
18, 20 மற்றும் 28 வயதான இளைஞர்களே சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிடும் நோக்கில் பௌத்த பிக்குவை கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததாகவும், எனினும் விஹாரையில் வெறும் 2100 ரூபா பணமே காணப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பௌத்த பிக்குவுடன் மிக நெருக்கமான தொடர்பை பேணியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்கள் ஹிங்குராக்கொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இதேவேளை, இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புக்கள் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பௌத்த பிக்கு ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அளுத்கம பேருவளை வன்முறைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbnv0.html
Geen opmerkingen:
Een reactie posten