இந்த படுகொலைக்கான பாக்தாத்தில் இருந்து தெற்கே 92 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு இடத்திலேயே இடம்பெற்றுள்ளது. இதற்கான உத்தரவை அப்பிரதேச ஆளுனர் ஹில்லா வழங்கியுள்ளார். முன்னதாக தீவிரவாதிகள் மேற்கொண்ட கைதிகளை விடுவிக்கும் வாகன தொடரணி ஒன்றின் மீதான தாக்குதலின்போது கைதிகள் 10 பேரும் ஒரு காவல்துறையினரும் கொல்லப்பட்டமையை தொடர்ந்தே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மறு புறத்தே ஈராக்கிய பாதுகாப்பு படைகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. வாகன தொடரணியில் கைதிகள் இறந்தமை மற்றும் 69 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் கருத்து கூறிய அதிகாரி ஒருவர் அத்தகைய தாக்குதல்கள் ஏதும் இடம்பெறவில்லை என்று முற்றாக மறுத்துள்ளார்.
ஆயினும் பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் இது பற்றி தெரிவிக்கையில் குறித்த இரண்டு சம்பவங்களும் உண்மையே என்று உறுதிப்படுத்தினார். இந்த 69 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் என்பது பகுபாவில் 52 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்று ஒரு வார காலப்பகுதியில் நடைபெற்றுள்ளது. கைதிகளின் இறப்பு ஒரு திட்டமிட்ட செயல் அல்ல தவறுதலாகவே இடம்பெற்றது என்று அடித்துகூறுகின்றது ஈராக் அரசு. மாறாக எதிர்தரப்பு குழுவும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் இது திட்டமிட்டு சிறையில் இடம்பெற்ற கொலை என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் ஒரு அதிகாரி இந்த செயல் பற்றி கூறுகையில் நாங்களே இந்த சிறைக்கைதிகளை கொன்றுவிட்டு தீரிவராதிகளின் தாக்குதலின்போது கைதிகள் இறந்ததாக அறிக்கை எழுதி சமர்ப்பித்துவிடுவோம் என்று ஒரு அதிர்ச்சி தகவல் தெரிவித்தார். பிறிதொரு அதிகாரி கூறுகையில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட அல்-குவைதா தீவிரவாதிகளை வேறொரு சிறைக்க மாற்றும்போது துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் தான் இறந்தார்கள் என்று கூறினார்.
இவற்றையெல்லாம் நியாப்படுத்துமாறு மொசூலில் உள்ள 1000 கைதிகள் விடுவிக்பட்டமையும் ஒரு வருடத்தின் முன்னர் இரு சிறை உடைப்ப சம்பவங்களையும் கூறுகின்றது ஈராக் அரசு கடந்த 4 ஆம் திகதி கைதிகளில் 6பேர் ஊடகங்களின் முன்னால் கொண்டுவரப்பட்டு கார்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு மன்னிப்பு கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten