தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

இலங்கை தொடர்பில் வருண் காந்தியின் ஈடுபாடு..

கடந்த பத்தாண்டில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தியா தனக்கெதிரான வெளிச்சக்திகளின் தலையீடுகளுடன் போட்டியிடுவதற்காக இராணுவ உறவுகளைக் கட்டியெழுப்புவதுடன், முக்கிய துறைமுகங்களுடன் தொடர்புகளைப் பலப்படுத்தி வருகிறது. இந்திய மாக்கடலை மையப்படுத்திய முத்துமாலை என்கின்ற மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியா செயற்படுகிறது.

இராமர் பாலத்தைக் கட்டியெழுப்பி பொதுவான மின்வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு இந்தியாவானது சிறிலங்காவுடன் சக்தி மற்றும் கட்டுமானத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும்.
இவ்வாறு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் வருண்காந்தி* இந்தியாவின் HindustanTimes ஆங்கில ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
1971லிருந்து முத்துமாலை என்கின்ற இந்த மூலோபாயத்தை இந்தியா கைக்கொள்கிறது. இது தற்போது வலுப்பெற்றுள்ளது. இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி உண்மையான அரசியலை மையப்படுத்திய வெளியுறவுக் கோட்பாட்டை முதன்மைப்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளார். இதற்கான நல்லெண்ண சமிக்கைகளை இவர் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தென்னாசியாவில் அமைதியை மீளக்கட்டியெழுப்புவதற்கான தருணம் இதுவாகும்.
முன்னர் ஒரு காலத்தில் இந்தியாவின் தத்துவாசிரியராகக் கடமையாற்றிய shadgunya என்பவரின் Kautilya கோட்பாடானது வெளியுறவுக் கோட்பாட்டில் ஆறு பண்புகள் காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒரு நாடானது பலமான பிறிதொரு நாடொன்றுடன் சமாதானத்தைப் பேணவேண்டும். பிறிதொரு நாடு குறித்த நாட்டுக்குச் சமானமாக உள்ள போது அந்த நாட்டுடன் அமைதி பேணவேண்டும். தனது ஆட்சி வலுக்குன்றும் போது தன்னை விட வலிமை மிக்க நாட்டில் புகலிடம் கோர வேண்டும் என்பதை இக்கோட்பாடு வலியுறுத்துகிறது. இதன்மூலம் குறித்த நாடானது தனது அயல்நாடுகளுடன் நட்பு, அன்பளிப்பு, பிரிவு, தண்டனை போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
இந்தியாவின் அயல்நாடான பூட்டான் தற்போது பலம்குன்றிய நாடாகக் காணப்படுகிறது. டொக்லம் பீடபூமி தொடர்பில் பூட்டானுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகிறது. இது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலான ஒன்றாகும். சீனா தொடர்ந்தும் பூட்டானுக்குச் சொந்தமான பிரதேசத்தில் வீதிகளையும் கட்டுமாணப் பணிகளையும் மேற்கொள்கிறது. இதன்மூலம் சீனாவானது தனது நோக்கை அடைந்துகொள்ள முயல்கிறது. பூட்டானில் சீனாவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மின்னாலைத் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பூட்டானின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதனால் பூட்டானுக்கு கட்டுமானத் திட்டங்களை நிறைவுபடுத்துவதற்கு உதவி வழங்கப்பட வேண்டும். இந்நிலையில் இந்தியா தனது அயல்நாடான பூட்டானில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான தற்போதைய வாய்ப்பை இழந்துவிடக் கூடாது.
இந்தியா, பங்களாதேசுடன் சிறந்த உறவைப் பேணவேண்டும். பங்களாதேசில் இடம்பெறும் சட்டரீதியற்ற குடியகல்வு, அரச மட்டத்தில் இடம்பெறும் குறுகிய நோக்குகள், நீர்ப்பிரச்சினை போன்றன இதன் வடகிழக்கில் கிளர்ச்சிகள் மற்றும் வறுமை ஏற்பட முக்கிய காரணங்களாகும். 1974ல் உருவாக்கப்பட்ட ‘முஜிப் – இந்திரா’ உடன்படிக்கையின் பிரகாரம் பங்களாதேஸ் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இவற்றுக்கிடையில் பிராந்திய ஒருமைப்பாடு கட்டியெழுப்பப்படுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இந்நிலையில் அரசியல் யாப்பில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் அதேவேளையில், எல்லைப் பிரச்சினை தீர்க்கப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர நலன்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். சமமான நீர் வழங்கலை மேற்கொள்வதன் மூலம் நீர்வழங்கலில் ஏற்படும் முரண்பாடுகளைக் களையமுடியும். இந்தியாவின் வடகிழக்கில் காணப்படும் றிபுரா என்கின்ற மாநிலத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதற்கு சிறப்பு இடைத்தங்கல் வசதி ஒன்றை பங்களாதேஸ் அரசாங்கம் மேற்கொள்வதானது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். இந்தியாவும் பங்களாதேசும் பொருளாதார ரீதியில் நட்புறவைப் பேணும் போது சட்ட ரீதியற்ற குடியகல்வுகளைத் தடுக்க முடியும். தென்கிழக்காசியாவின் முக்கிய பொருளாதார மையமாக கொல்கத்தா தெரிவுசெய்யப்பட்டால் பங்களாதேசுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார உறவு மேலும் பலம்பெறும்.
சிறிலங்காவானது தனது நாட்டில் 13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் தயக்கம் காண்பிக்கிறது. அதாவது தனது நாட்டில் வாழும் சிறுபான்மைத் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை 13வது திருத்தச் சட்டம் வலியுறுத்துகிறது. இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவேண்டும். எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவுடனான இந்தியாவின் வர்த்தகத் தொடர்பாடல் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட முழுமையான பொருளாதாரக் கூட்டு உடன்படிக்கையின் பிரகாரம் இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திரமான வர்த்தக, சேவை மற்றும் முதலீடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். இராமர் பாலத்தைக் கட்டியெழுப்பி பொதுவான மின்வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு இந்தியாவானது சிறிலங்காவுடன் சக்தி மற்றும் கட்டுமானத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும். இது இந்தியாவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் உதவும்.
மாலைதீவானது சீனாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட நாடாகும். மாலைதீவின் தலைநகருக்கு வடமேற்காக உள்ள Uthuru Thila Falhu என்கின்ற புதிய துறைமுகமானது சீனக் கப்பல்களைத் தரித்து வைப்பதற்கும் கடற்படையினருக்கு இடைத்தங்கல் வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இந்தியாவின் பிராந்திய நலன்கள் மற்றும் கூட்டுக் கடற்பாதுகாப்பும் மாலைதீவின் இத்துறைமுகத் திட்டத்தில் பிரதான பங்கெடுப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளப் பயன்படுத்தப்பட வேண்டும். மாலைதீவில் இஸ்லாமியத் தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது. இந்தியாவின் முத்துமாலை மூலோபாயம் விரிவுபடுத்தப்பட வேண்டுமாயின் மாலைதீவில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் இந்திய மாக்கடலில் இந்தியா தனது செல்வாக்கை முழுமைப்படுத்த முடியும்.
மேற்குலகமானது தற்போது ஈரானை ஏற்றுக்கொள்கிறது. இதனால் இந்தியா இதிலிருந்து விலகாது ஈரானுடன் நட்பைப் பேணவேண்டும். ஈரானின் கேந்திர முக்கியத்துவம் மிக்க Chabbar துறைமுகமானது பேசியன் வளைகுடாவிற்கு அருகில் உள்ளது. தற்போது இத்துறைமுகமானது பெற்றோலிய வளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. சிறப்புப் பொருளாதார வலயத்தின் மூலம் இந்தியாவானது ஈரானியத் துறைமுகத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் இந்தியாவானது குஜராத் மாநிலத்திலுள்ள Kandla துறைமுகத்திற்கான நேரடி கப்பல் வழிப் போக்குவரத்தைக் கட்டியெழுப்புவதுடன் இயற்கை எரிவாயு இறக்குமதியையும் அதிகரிக்க முடியும். ஐ.நாவில் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா எதிர்த்து வாக்களித்ததால் ஈரானுடனான இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவானது ஈரானுடனான வர்த்தக உறவை விரிவுபடுத்தி மத்திய ஆசியாவிற்கான வர்த்தக மையம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
ஆப்கானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்தியா தனது வீரர்களை அனுப்பியுள்ளது. சொத்துக்களை முதலிட்டுள்ளது. எதுஎவ்வாறிருப்பினும், ஆப்கானின் தலிபான்களின் மீள்புனர்வாழ்வானது தர்க்கரீதியானது. ஆப்கானின் ஹகானியின் வலையமைப்பானது இந்தியத் தூதரகங்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்கிறது. தலிபான்கள் மீண்டும் ஆப்கானின் ஆட்சியில் நிலைப்படுத்தியதன் மூலம் இங்கு ஜனநாயக ஆட்சி மீளவும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அமெரிக்கா இங்கு நிலைகொண்டுள்ள தனது படையினரை பின்வாங்கவுள்ள நிலையில், ஆப்கானை வலுப்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உதவவேண்டும். இதற்கான நிதி உதவிகள், கட்டுமானத் திட்டங்களுக்கான முதலீடுகள் போன்றன மேற்கொள்ளப்படுவதுடன், ஈரானையும் மத்திய ஆசியாவையும் இணைத்து பாதுகாப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இதற்கான பெரும் பங்களிப்பை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் தொடர்ந்தும் இந்தியாவின் எதிரி நாடாகவே விளங்கிவருகிறது. கராச்சியிலுள்ள கடற்படைத் தளம் மற்றும் விமான நிலையங்கள் மீதான அண்மைய தாக்குதல்கள் பாகிஸ்தானில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. பாகிஸ்தானின் Siachen, Sir Creek போன்ற எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தியா தனது ஒத்துழைப்பை வழங்குவதுடன் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும். பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி வலுப்பெற்று வரும் நிலையில் இந்தியா, நவாஸ் செரிப்புடன் பேச்சுக்களை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தானுடன் இந்தியா வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடர்பாடல்களை அதிகரிப்பதன் மூலம் எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எதுஎவ்வாறிருப்பினும், கஸ்மீர் பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு மேலும் ஒரு தலைமுறை கடக்க வேண்டியிருக்கும்.
தென்னாசிய சுதந்திர வர்த்தக வலயம் (safta) மற்றும் தென்னாசியப் பல்கலைக்கழகம் போன்றவற்றுக்கு உத்வேகம் அளிக்கப்பட்டு அவற்றின் உதவியுடன் சார்க் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும். சுதந்திர போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் மூலம் இந்திய கலாசாரம் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். தேசிய நலனைக் கருத்திற் கொண்டு உண்மையான அரசியல் உணர்வானது Kautilyaகோட்பாடுகளின் கூட்டாக அயல்நாடுகளுடனான உறவுகள் பேணப்பட வேண்டும்.
இந்தியா மீண்டுமொரு முறை மிகப் பலமான அரசாங்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. மக்கள் இதற்கான ஆணையை வழங்கியுள்ளனர். இந்த அரிய வாய்ப்பைக் கைநழுவ விடக்கூடாது. இந்தியாவின் இராஜதந்திரம் குறைவடைந்து இதன் கடும்போக்கு அதிகாரம் பரவியுள்ளது. இதனால் இந்தியாவின் புதிய அரசாங்கமானது புதிய கோட்பாட்டு அணுகுமுறையைக் கைக்கொள்வதன் மூலம் அயல்நாடுகளுடன் மிகநெருங்கிய உறவைப் பேண முன்வரவேண்டும்.
மொழியாக்கம் நித்தியபாரதி.
http://www.jvpnews.com/srilanka/74900.html

Geen opmerkingen:

Een reactie posten