தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

சந்தித்த முஸ்லீம் அமைப்புக்களின் வாயை அடைத்த கோத்தா

ஞானசார தேரரை கைது செய்தால் கலவரம் வெடிக்குமாம்! மிரட்டுகிறார் இராணுவத் தளபதி

http://www.jvpnews.com/srilanka/74824.html

மகிந்த ஷிராந்தி தம்பதிகள் சீஷெல்ஸ் தீவில் மறைந்துள்ள மர்மம்

1லட்சத்திற்கும் குறைவான மக்கள் வாழும் சீஷெல்ஸ்சிற்கு 2ஆவது தடவையாக சிராந்தியுடன் மகிந்த மாலைதீவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி சீஷெல்சிற்கு விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் சீஷெல்சிற்கான விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளார். சீஷெல்சின் ஜனாதிபதி ஜேம்ஸ் மிச்செல் (James Michel) உடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
சீஷெல்சின் தலைநகர் விக்டோரியாவில் இலங்கைக்கான தூதரகமொன்று அமைக்கப்பட உள்ளது.இரு நாடுகளுக்கும் இடையில் சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிகக் குறைவான மக்கள் தொகையை கொண்ட சீஷெல்சில் தூதரகம் அமைப்பதற்கும் குறுகிய காலத்தில் 2 தடவைகள் பயணம் செய்வதற்கும் என்ன அவசியம் ஏற்பட்டது என அறிய முற்பட்ட போது பல விடயங்களை தொகுக்க முடிந்தது. ஆந்த வகையில் மகிந்த சிராந்தி தம்பதியினரின் சீஷெல் பயணத்தின் பின்னணியையும் துலங்கும் மர்மங்களையும் பார்ப்போம்.
சீஷெல்ஸ் நாட்டில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாத 100க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு நபர்களுக்கு நிறுவனங்களுக்கும் வழங்க அந்நாடு தீர்மானித்திருந்தது. அவற்றில் ஒன்றையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொள்வனவு செய்ததாக அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தன. 2012 ஆம் ஆண்டளவிலேயே இந்தத் தீவு கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவுகள், ஆப்பிரிக்க கண்டத்திற்குரிய நாடாகும்.
 2012 ஆம் ஆண்டுப் பயணத்தின் போது..
செல்வந்த நாடான சீஷெல்ஸ் தீவுகளில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இலங்கை சேர்ந்த பலர் அங்கு தொழில் புரிந்து வருகின்றனர். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களிலும் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தில் புலிகளிடம் இருந்து அபகரிக்கப்பட்ட கணக்கற்ற பெருந்தொகை சொத்துக்கள் மற்றும் பணத்தையும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதன் நிலை அதிகாரிகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்திருந்தன.
இதன் காரணமாகவே இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக சீஷெல்ஸ் நாட்டின் ஜனாதிபதி கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சீஷெல்ஸ் நாட்டுக்கு பயணம் செய்திருந்தார்.
இந்த பயணத்தின் போது பிரசாலின் என்ற தீவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, உலகில் மிகவும் அரிய வகை பறவை இனமான கறுப்பு கிளிகளை எடுத்து சென்று, அலரி மாளிகையில் வளர்த்து வருகிறார்;. அவற்றில் ஒன்றே 2013ன் ஆரம்பத்தில் பறந்து சென்றதால், அதனை தேடிக் கண்டுப்பிடிக்க பெரும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டன.Seychelles-AelinSeychelles-Aelin-01
சீஷெல் நாடும் அதன் தீவுகளும் வரலாற்றுப் பின்னணியும்
1700 ஆண்டு காலப்பகுதியில் ஐரோப்பியர் சீஷெல்ஸ் தீவுகளை கைப்பற்றும் வரை அந்த தீவு அரேபிய மற்றும் ஆசியா இடையில் பயணிக்கும் கப்பல்களை கொள்ளையிடும் கொள்ளையர்களின் புகலிடமாக இருந்து வந்தது.
சீஷெல்ஸ் என்பது 116 சிறுசிறு தீவுகள் கொண்ட தீவுக்கூட்டம். 130 லட்சம் சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டத்தில் 30 தீவுகள் மட்டுமே மக்கள் வசிக்கும் பகுதிகளாக இருக்கின்றன். இதில் மிகப்பெரிய தீவு மாஹே என்பதாகும். இது 27 கி.மீ நீளமும் 11 கி.மீ அகலமும் உடையது. சீஷெல்ஸின் தலைநகரான விக்டோரியா இதில்தான் உள்ளது. துறைமுகமும், விமான நிலையமும் தலைநகரில்தான் உள்ளன. சீஷெல்ஸின் மொத்த நிலப்பரப்பே 455 சதுர கி.மீ தான். இதில் 49 சதவீதம் பாதுகாக்கப்பட்ட அல்லது தேசீய பூங்கா. கணக்கில் அடங்கா தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. மொத்த மக்கள் தொகை 85 ஆயிரம்.
இதில் 72 ஆயிரம் பேர் மாஹே தீவில் வசிக்கின்றனர். இதில் இந்தியர் 8000 பேர். அதில் தமிழர்கள் சரிபாதி. இவர்களில் 800பேர் மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து சென்றிருப்பவர்கள். முதன் முதலில் அங்கு வேலைக்காகவோ, வியாபாரம் செய்யவோ சென்றவர்கள் பின்னர் தங்கள் உறவினர்கள் வேண்டியவர்கள் என்று அழைத்துச் சென்று பெருகி விட்டவர்கள்.
இதேவேளை இந்தியப்பெருங்கடலுக்குள் மூழ்கியிருக்கும் மொரீஷியா கண்டத்தின் ஒரு சிறுபகுதி இன்னமும் கடலுக்கு வெளியில் தெரியலாம் என்று கருதும் இவர், இந்தியப்பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சீஷெல்ஸ் தீவு அப்படியானதொரு நிலமாக இருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்.
சீஷெல்ஸ் தீவுகள் ஒருகாலத்தில் மடகாஸ்கர் தீவுகளுக்கு வடக்கே இருந்ததை சுட்டிக்காட்டும் நிலவியலாளர்கள், இந்த தீவின் நிலப்பகுதி இதுவரை நினைத்ததைவிட மிகப்பெரியதாக இருக்கலாம் என்றும், இந்திய பெருங்கடலில் விரவிக்கிடக்கும் வேறு நில தீவுப்பகுதிகளையும் ஆராயவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.
இப்படியாக கடலுக்குள் காணாமல் போன உலகின் ஆதிகண்டமான மொரீஷியாவின் மிச்ச சொச்சங்களை கண்டறிவதற்கான மேலதிக ஆய்வுகள் செய்யப்படுவது அவசியம் என்கிறார் பேராசிரியர் டோர்ஸ்விக்.
சுற்றுலாத்துறைக்கு பெயர்போன சீஷெல்ஸ்
குடும்பத்தினரோடு சென்று விடுமுறையை சிறப்பாக கழிக்க விரும்புபவர்களுக்கு சீஷெல்ஸ் நாடானது சிறந்ததாகும். அவர்களின் கலாசாரம் உபசரிப்பு பண்பு காலநிலை என்பது எமது நாட்டை ஒத்ததாக அமைந்துள்ளமை ஒரு விஷேட அம்சமாகும்.
இந்து சமுத்திரத்தில் கிழக்கு ஆபிரிக்காவுக்கு அருகாமையில் 116 வரையிலான தீவுகளை கொண்ட சிஷெல்ஸ் நாடானது உலகின் அனைத்து பாகங்களிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் பல சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய நாடாகவும் திகழ்கின்றது.
பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷாரின் ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்டிருந்த வரலாற்றைக் கொண்ட இந்நாடு 94000 வரையான சனத்தொகையை கொண்ட சிறிய நாடாகும். பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவற்றின் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் பெற்றுக்கொண்ட ஆளுமைகளின் எதிரொலியாக இந்நாட்டில் க்ரேயோல் எனப்படும் பிரெஞ்சு மொழி சார்ந்த மொழியே பிரதானமாக பேசப்படும் அரசு மொழியாக காணப்படுகின்றது.
அத்தோடு இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்லின மொழி பேசும் மக்கள் தமது வாழ்விடமாக சீஷெல்ஸ் விளங்குகின்றமையினால் பல மொழி பேசும் சுற்றுலாப் பயணிகளுக்கு தமது தேவைகளை தமது மொழிகளிலேயே நிறைவு செய்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அத்துடன் பல தேசத்தவர்களின் கலாசாரமும் ஒருக்கிணைந்த நாடாக இது திகழ்கின்றது.
இதற்கு சிறந்த உதாரணமாக அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களையும் அவர்களால் சீஷெல்சில் தலைநகரான மானே விக்டோரியா நகரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் விநாயகர் ஆலயத்தினை குறிப்பிடலாம்.
இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் விசேட அம்சமாக கடற்கரைகள் விளங்கிய போதிலும் மேற்குலக நாடுகளின் ஆளுமை இத்தீவில் பல்வேறு பாரம்பரிய கட்டடக் கலையிலும் தேசிய புராதனச் சின்னங்களிலும் தாக்கத்தினை எற்படுத்தியுள்ளமையை இத்தீவில் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்சியகங்கள் பறைசாற்றுகின்றமை புராதன கலை அம்சங்களை ரசிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தளமாகும்.
115 தீவு கூட்டங்களை உள்ளடக்கிய இந்நாட்டில் சுமார் 75 தீவுகளில் மாத்திரமே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த தீவுகளுக்கு பயணத்தை மேற்கொள்ள அம்மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக தீவுகளுக்கு இடையிலான சொகுசு படகு சேவை சுற்றுலாப் பயணிகளுக்கு புதுவித அனுபவத்தினை தருகின்றது. ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவுக்கு சென்றதும் ஒரு நாட்டில் இருந்து வேறொரு நாட்டிற்கு வருகை தந்ததை போன்ற உணர்வினை எமக்களிக்கின்றது.
காரணம் அங்குள்ள ஒவ்வொரு தீவுகளிலும் தனித்தனியான துறைமுகங்கள் உள்ளன, விமான சேவையில் ஈடுபடும் விமானங்களுக்கான விமான நிலையங்கள் என ஒரு நாட்டிற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தன்னகத்தே கொண்டமைந்துள்ளன.
சீஷெல்ஸ் தீவில் இயற்கையின் கொடையால் அமையப் பெற்றுள்ள வெண்மணல் கடற்பரப்புகளும் நீலப்பச்சை நிற கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும தளங்களாக விளங்குகின்றமை இந்நாட்டிற்கு உரித்தான சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அது மாத்திரமன்றி இத்தீவிலுள்ள பிரத்தியேக கடற்கரைகளும் தனிமையான மலைக்குகைகளும் ஏனைய கடல் சார் இடங்களும் புதிய அனுபவத்தினை எமக்களிக்கின்றது.
அரிய வகை கடல் இனங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளினைக் கண்டு களிப்பதற்கும் மீன்பிடி பொழுது போக்கு அம்சங்களையும் சீஷெல்ஸ் கொண்டிருப்பதுடன் நீர் விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் தெளிந்த நீரில் நீந்தும் ஆர்வம் கொண்டவர்களுக்கும் அழகிய கடல் மீன்களுடன் இணைந்து நீந்தும் அனுபவம் என்பனவற்றை அனுபவிக்கவும் முடியும். இந்த அனுபவங்கள் அனைத்தையும் குறுகிய நேரத்தில் அனுபவிக்க முடிகின்றமை மற்றுமொரு விசேட அம்சமாகும் காரணம் சிறிய தீவு நாடான சீஷெல்ஸின் குறுகிய நேரப்பயணத்துடன் இவை அனைத்தையும் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.
கடல் சார் உணவு வகைகளை ருசிப்பதற்கும் அங்குள்ள பல்வேறு வகையான உணவு வகைகளை ருசிப்பதற்கான சந்தர்ப்பம் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கின்றது.
இங்குள்ள கடற்கரைகளில் உள்ள கற்பாறைகள் வித்தியாசமான தோற்றத்தில் அமையப் பெற்றுள்ளமை மற்றுமொரு விஷேடம்சமாகும். சிற்பங்கள் பாதுகாக்கப்பட்டது போன்ற உருவ அமைப்பை கொண்டுள்ள இக் கற்பாறைகள் எமது கண்களுக்கு வித்தியாசமான காட்சியினை பிரதிபலிக்கின்றது.
சுற்றுலாத்துறையை பிரதானமானதாக கொண்டுள்ள இந்நாடு பொருளாதார ரீதியிலும் உயர் நிலையை வகிக்கின்றது. சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான ஹோட்டல் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தாராளமாக கொண்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் தமது விடுமுறையை சிறப்பாக கழிக்க முடியும்.Seychelles-Aelin-03Seychelles-Aelin-04Seychelles-Aelin-05Seychelles-Aelin-06

 http://www.jvpnews.com/srilanka/74837.html

சந்தித்த முஸ்லீம் அமைப்புக்களின் வாயை அடைத்த கோத்தா

இறுதி முடிவொன்று எட்டப்படும் வரை சந்திப்பு தொடர்பாக எதனையும் தெரிவிக்ககூடாதென கோட்டபாய ராஜபக்ச முஸ்லீம் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு கண்டிப்பான உத்தரவோன்றை பிறப்பித்துள்ளார். பொது பல சேனாவின் செயற்பாடுகள்,கோட்டாவின் ஆதரவுடனேயே இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்ட வேளை அதனை மறுத்துள்ள அவர், முஸ்லீம் சமூகம் தொடர்பாக பௌத்த மதகுருமார் தம்மிடம் பல கரிசனைகளை வெளியிட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74847.html

Geen opmerkingen:

Een reactie posten