அமெரிக்கா இலங்கையிடையில் மூன்டது பனிப்போர் அலறுகிறார் அமைச்சர் யாப்பா
கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர்,
2011ம் ஆண்டு ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்த பின்னர், அந்த தடையை மீறி மூன்றாவது தரப்பின் மூலம் ஈரானிய எண்ணெயை ஒரு முறை கூட, வாங்கவில்லை. அமெரிக்காவின் ஒப்புதலுடன், மூன்றாவது தரப்பின் மூலம், ஈரானிய எண்ணெயை கொள்வனவு செய்வதாக, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எதற்காக கூறினார் என்று தெரியவில்லை.
ஆனால் பெற்றோலியத்துறை அமைச்சர் என்ற வகையில், அவ்வாறு மூன்றாவது தரப்பின் மூலம் ஈரானிய எண்ணெய் வாங்கப்படவில்லை என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். அமெரிக்காவின் தடையால், இலங்கை நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஏனென்றால், நாட்டின் ஒரே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான சபுகஸ்கந்தையில் ஈரானிய எண்ணெயை மட்டுமே சுத்திகரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கொழும்புத் துறைமுகத்தில் இருந்து, 10 கி.மீ தொலைவில் நிறுத்தப்படும் கப்பல்களில் இருந்து மசகு எண்ணெயைக் கொண்டு வரும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பைத் திருத்தும் பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளதால சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/74739.html
குரோதத்தை தூண்டிய ஞானசார தேரரை காப்பாற்றிய பொலிசார்…
பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் கலபொடத்தே ஞானசார தேரர் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கலபொடத்தே ஞானசார தேரர் வன்முறைகளைத் தூண்டும் வகையில் உரையாற்றியமைக்கான எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களின் அடிப்டையில் நபர்களை கைது செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், கலபொடத்தே ஞானசார தேரர் கடந்த 15ம் திகதி அலுத்கம பிரதேசத்தில் ஆற்றிய கடுமையான உரை யூடியுப்பில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் அவரது உரையை பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/74742.html
Geen opmerkingen:
Een reactie posten