தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juni 2014

அமைச்சர் அதாவுல்லா பதவி விலக வேண்டும்! மாத்தளை நகரசபையில் தீர்மானம நிறைவேற்றம்!

களுத்துறையில் ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 12:41.50 AM GMT ]
களுத்துறையில் ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களும்,  புலனாய்வுப் பணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சாதாரண பொலிஸ் கடமைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
களுத்துறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.இந்திரன் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
களுத்துறை பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் உள்ளிட்ட ஐந்து உத்தியோகத்தர்கள் இவ்வாறு புலனாய்வுப் பிரிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அளுத்கம, மத்துகம, மிகத்தென, தினியாவல மற்றும் தெபுவன ஆகிய பொலிஸ் நிலையங்களின் புலனாய்வுப் பிரிவுகளுக்காக புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblp0.html
ஜனாதிபதியை பதவி கவிழ்க்க நோர்வே முயற்சி!
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 01:45.36 AM GMT ]
ஜனாதிபதியை பதவி கவிழ்க்க நோர்வே முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசாட்சிப் பொறுப்பிலிருந்து ஜனாதிபதியை பதவி விலக்குவதே நோர்வேயின் நோக்கமாக அமைந்துள்ளது. எனினும், இந்த நோக்கத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள்.
நாட்டில் பல்வேறு மத மற்றும் இனத் தரப்புக்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் முயற்சியில் நோர்வே ஈடுபட்டுள்ளது.
2005ம் ஆண்டு முதல் மக்கள் ஜனாதிபதியுடன் இருக்கின்றார்கள்.  நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 161 பேர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கின்றனர்.
ஜனாதிபதி கிராமங்களை அபிவிருத்தி செய்யும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
நாட்டின் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையை ஜனாதிபதியே ஏற்படுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblp2.html
அமைச்சர் அதாவுல்லா பதவி விலக வேண்டும்! மாத்தளை நகரசபையில் தீர்மானம நிறைவேற்றம்
[ திங்கட்கிழமை, 30 யூன் 2014, 01:49.48 AM GMT ]
உள்ளுராட்சி மன்ற அலுவல்கள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா பதவி விலக வேண்டுமென மாத்தளை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 27ம் திகதி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளின் கொடுப்பனவு உயர்த்தப்பட வேண்டியதில்லை எனவும், பிரதிநிதிகள் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிப்பதாகவும் அமைச்சர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்து கண்டிக்கப்பட வேண்டியது எனத் தெரிவித்து மாத்தளை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பதில் நகரசபைத் தலைவர் பாலித ஜயசேகர தலைமையில் இந்த தீhமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டில் 350 உள்ளுராட்சி மன்றங்களில் 4500 உறுப்பினர்கள் கடயைமாற்றி வருகின்றனர் என ஆளும் கட்சி உறுப்பினர் ரொசான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதில் 2100க்கும் மேற்பட்டவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள்.
இந்தக் காரணிகளை கவனத்திற் கொள்ளாது அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து கண்டிக்கப்பட வேண்டியது.
செய்யும் தொழில்களை விட்டு அரசியலுக்கு வந்த தமக்கு கூலித் தொழிலாளி ஒருவருக்கு வழங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பகுதியே வழங்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சு தொடர்பில் அனுபவமற்ற காரணத்தினால் அதாவுல்லா இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நகரசபை உறுப்பினர் டல்ஜித் அலுவிகாரே தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblp3.html

Geen opmerkingen:

Een reactie posten