தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

மத முரண்பாடுகளை தூண்டும் பௌத்த பிக்குகள் தண்டிக்கப்பட வேண்டும்!

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு சிங்கள பௌத்தர்களினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும்!- பசீர் சேகுதாவுத்
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 12:01.00 AM GMT ]
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு சிங்கள பௌத்தர்களனால் மட்டுமே உரிய தீர்வினை வழங்க முடியும் என அமைச்சர் பசீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார்.
கண்டி மடவல கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் மக்களை நிதானமான ஓர் தலைமை வழிநடத்த வேண்டும்.  ஆவேச உணர்வுடன் முஸ்லிம் சமூகத்தை வழிநடத்துவது பிழையானதாகும்.
கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது சிங்கள பௌத்தர்களே முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்றியிருந்தனர்.
அரசாங்கத்தின் ஊடாகவே முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும்.
பௌத்த மக்களின் ஒத்துழைப்பின்றி தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை வென்றெடுக்க தமிழ்த் தலைமைகள் முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
ஒல்லாந்தர்கள் முஸ்லிம்களை தாக்கிய போது சிங்கள பௌத்தர்களே முஸ்லிம்களை காப்பாற்றியிருந்தனர்.
புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டிய போதும் சிங்கள பௌத்தர்களே அடைக்கலம் வழங்கியிருந்தனர்.
பொதுபல சேனா, ராவணா பலய போன்ற சிறிய பௌத்த அமைப்புக்களினால் முஸ்லிம் சமூகத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தப்படுகின்றது.
எனினும், இதனை தீர்க்க சிங்கள பௌத்தர்களின் ஒத்துழைப்பு அவசியமானது.
பௌத்த மதம் வன்முறைகளை போதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLaex3.html

அச்சுறுத்தல்களின் மத்தியில் மட்டக்களப்பில் ஜே.வி.பி. அலுவலகம் திறந்து வைப்பு!
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 12:07.11 AM GMT ]
பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அப்பால் மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலமுனை பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பாலமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தினை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நேற்று புதன்கிழமை மாலை திறந்து வைத்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.ஜே.எம்.ரவூப் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் உட்பட அதன் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீரவின் உருவப்படமும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் திறக்கப்படவிருந்த நிலையில் அதனை சிலர் தீமூட்ட மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLaex4.html
மத முரண்பாடுகளை தூண்டும் பௌத்த பிக்குகள் தண்டிக்கப்பட வேண்டும்!
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 12:44.57 AM GMT ]
மத முரண்பாடுகளை தூண்டும் பௌத்த பிக்குகள் தண்டிக்கப்பட வேண்டுமென சிரேஸ்ட அமைசச்ர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இன மத முரண்பாடுகளை தூண்டும் வகையில் செயற்படும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக அந்தந்த பீடங்களைச் சேர்ந்த மாநாயக்கத் தேரர்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறான பௌத்த பிக்குகளுக்கு எதிராக சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இது தொடர்பில் இடதுசாரி கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீளவும் இருண்ட யுகத்திற்குள் அழைத்துச் செல்ல எவரும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என திஸ்ஸ விதாரண சிங்கள பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLaex6.html

Geen opmerkingen:

Een reactie posten