தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 juni 2014

போர்க் குற்ற விவகாரம் - மீண்டும் செயலில் இறங்கவுள்ள கனடா



பாடசாலை மாணவர்களை வீதியில் இறக்கியது அமைச்சர் தொண்டமானா?
[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 11:56.02 AM GMT ]
நுவரெலியா - ஹட்டன் வீதியை மறித்து இன்று காலை 8 மணி முதல் ஒரு மணி வரை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது.
தலவாக்கலை - லிந்துலை நகர சபையினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 30 வர்த்தக நிலையங்கள் நிர்மாணிக்கப்படுவதை எதிர்த்து தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலவாக்கலை - லிந்துலை நகர சபை தனக்குரிய காணி எனக் கூறி மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு எதிரில் நகர சபை எல்லைக்குள் இந்த வர்த்தக நிலையங்களை நிர்மாணிக்க உத்தேசித்துள்ளது.
எனினும் இந்த காணி பாடசாலைக்குரியது எனக் கூறியே மாணவர்களும் ஆசிரியர்களும் வீதியை மறித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எவ்வாறாயினும், அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஈடுபட்டதாக நகர சபையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு இன்று பகல் ஒரு மணிக்கு சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் ஆகியோர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமனை மீறி எவருக்கும் எதனையும் செய்ய முடியாது எனவும் இந்த வர்த்தக நிலையங்களை நிர்மாணிக்க இடமளிக்க போவதில்லை எனவும் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் கலைந்து சென்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZeu6.html

போர்க் குற்ற விவகாரம் - மீண்டும் செயலில் இறங்கவுள்ள கனடா
[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 11:11.09 AM GMT ]
இலங்கைப் மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் தொடர்வதாக இலங்கை விவகாரங்களிற்கான கனடாவின் சகல கட்சிப் பிரதிநிதிகளும் உறுதியளித்தனர்.
கனடியப் பாராளுமன்றத்தில் இலங்கையில் நீதி தொடர்பாக கனடிய மனிதவுரிமை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்துப் பரிமாற்றத்தில் கலந்து கொண்ட மேற்படி பிரதிநிதிகள் இந்த உறுதி மொழியை வழங்கினர்.
கனடாவின் சார்பில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட டீபக் ஒபராய், மற்றும் கனடிய அரசு சார்பாக இலங்கைக்கு 2013 ஆரம்பத்தில் விஜயம் செய்த அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர், றிக் டிக்ஸ்ரா உள்ளிட்ட 16க்கு மேற்பட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
கனடிய மனிதவுரிமை மையத்துடன் அனைத்துலக சர்வதேச மன்னிப்புக் சபையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இச் சந்திப்பில் தாங்கள் இலங்கையின் நீதி மற்றும் மனிதவுரிமை நிலமை தொடர்பாக தாங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கையை இன்னமும் சில நாட்களில் எடுப்பதாக மேற்படி பாராளுமன்றப் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZeu4.html

Geen opmerkingen:

Een reactie posten