[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 09:07.04 AM GMT ]
இங்கு தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வாழும் மேற்படி பிரதேசத்தில், இத்திணைக்களத்தின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இத்திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்படும் அனைத்து கடிதங்களும் தனிச்சிங்களத்தினால் அமைவதால் பொதுமக்கள் மொழி விளங்காத நிலையில் அவஸ்தைப்படுகின்றனர்.
மேலும் அங்கு போடப்பட்டுள்ள அறிவித்தல் பலகைகள் கூட தனிச் சிங்களத்தில் காணப்படுவதால் பொதுமக்களுக்கு இதனை விளங்கி தமது கருமங்களை ஆற்ற முடியாதுள்ளது.
பொதுமக்களுக்கான அலுவலக நாட்களாக திங்கள், புதன் ஆகிய இரண்டு நாட்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு தனிச் சிங்களத்தில் அமைந்துள்ளதால் இதனை வாசிக்க முடியாத பொதுமக்கள் தூரத்தில் இருந்து வருபவர்கள், கடமை நாள் தெரியாது வந்தும் தமது கடமைகளை முடிக்க முடியாமல் மீண்டும் திரும்பிப் போக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படுகின்றது.
மேலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பெயர்கள், பதவி நிலை அனைத்தும் சிங்களத்தில் காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட திணைக்களம் இது விடயத்தில் கவனமெடுத்து தமிழ் மொழிப் பயன் பாட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மும்மொழிக் கொள்கை பயன்பாடு நாடுபூராகவும் அமுல்படுத்தப்படல் வேண்டும் என அரச மொழித் திணைக்கள சுற்றறிக்கை இருந்தும் இந்த அதிகாரிகளின் அசமந்தப் போக்கே இந்த நிலைக்கு காரணமாக
உள்ளது.
உள்ளது.
காட்டில் விறகு பெறல், கிரவல் மண் அள்ளுதல் மற்றும் கல் உடைத்தல் ஆகியவற்றிற்கு இந்த திணைக்களமே பொறுப்பாக உள்ளது இவற்றினை பெறுவதற்கு இத்தினைக்களமே அனுமதி வழங்குதல் வேண்டும்.
பொதுமக்களால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான அனுமதியும் உரிய காலத்திற்குள் வழங்காமல் நீண்ட காலத்திற்குப் பின்னரே அனுமதியும் கிடைக்கப் பெறுகிறது. எனவே மேற்படி நிர்வாக குறைபாடுகள் விரைவாகக் கலையப்பட்டு மக்களுக்கான சேவைகள் இலகுவாக நடைபெறல் வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZet7.html
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ஜனாதிபதி பொறுப்புக் கூறவேண்டும்: விரிவுரையாளர்கள்
[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 09:03.37 AM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கிரிக்கெட் வன்முறையாளர் ஒருவரும் தென் மாகாண சபை உறுப்பினர்கள் வந்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அரசாங்கம் ஒருவருக்கு ஒருவர் மோதி கொள்ளும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.
மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் போது ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக அந்த இடத்திற்கு வரும் பொலிஸார், இம்முறை மோதல் ஏற்பட்ட போது அங்கு வரவில்லை.
பல்கலைக்கழங்களில் தீர்மானங்களை எடுக்கும் போது கூட்டாக இணைந்து தீர்மானங்கள் எடுக்கப்படும். ஆனால் ருகுணு பல்கலைக்கழகத்தில் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை நடத்துவது தொடர்பான தீர்மானம் அப்படி எடுக்கப்படவில்லை.
நிர்வாகம் இதன் போது நேரடியான தீர்மானத்தை எடுத்தது எனவும் சந்திரகுப்த தேநுவர குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய, பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளான ருகுணு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி உபுல் அபேரத்ன தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZet6.html
கொன்சலிட்டாவின் மர்ம மரணம் - மாவட்ட பதில் சட்டவைத்திய அதிகாரியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 09:24.09 AM GMT ]
அத்துடன் அடுத்த மாதம் பத்தாம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த யுவதியின் உயிரிழப்பு தொடர்பில் சந்தேகங்கள் இருப்பதாக கூறி உறவினர்கள் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைகள் இன்றையதினம் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது யுவதி இறப்பதற்கு முன்னரான, மூன்று மாதங்களின் தொலைபேசி விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குடும்பத்தினர் ஊடகவியலாளர்களை சந்திக்க வேண்டாம் என கடந்த முறை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, சட்டத்தரணிகள் சிலரினால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும், குறித்த யுவதியின் தாய் தனது மகளுக்கு பாதிரியார் தொலைபேசி மூலம் அனுப்பிய புகைப்படங்களை ஊடகவியலாளர்களுக்கு காண்பித்தார்.
மேலும் தன் மகள் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரியதுடன், தன் மகள் தொடர்பில் சட்டத்தரணிகளும். சில பாதிரியார்களும் கதை புனைந்து வருவதாக கூறியதுடன், தாம் ஏழைகள் என்பதற்காகவே இவ்வாறு
நடத்தப்படுகின்றோம் எனவும் கூறியுள்ளார்.
நடத்தப்படுகின்றோம் எனவும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZeuy.html
Geen opmerkingen:
Een reactie posten