தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 juni 2014

வரும் 10ம் திகதி இலங்கை குறித்த விசாரணைக்குழுவினை நவனீதம்பிள்ளை அறிவிப்பார்!

தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் பொலிஸ் அதிகாரங்கள் வழங்க அரசு ஆராய்வு!
[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 12:05.32 AM GMT ]
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத, மாகாண சபைகளின் நிர்வாக முகாமைத்துவதற்கு தேவையான பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் சிந்திப்பதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்குவதில்லை என்பதை அரசாங்கம் கொள்கையளவில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனினும் பெற்றுள்ள சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள தேவைக்கேற்ப மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
13வது திருத்தச் சட்டம்  வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடனேயே கொண்டுவரப்பட்டது. எனினும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மட்டும்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
எனினும் பொலிஸ் அதிகாரத்தில் நிர்வாகத்துக்கு முகாமைத்துவத்துக்குத் தேவையான குறிப்பாகப் போக்குவரத்து பொலிஸ் பிரிவு உள்ளிட்டவற்றை வழங்குவதற்குரிய விடயங்கள் குறித்து அரசு சிந்தித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு வரையில் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான தேவை இருக்கவில்லை. யுத்தத்தின் பின் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் பெற்ற சுதந்திரத்தின் பின்னர் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரம் ஓரளவு கொடுக்க முடியுமா என்பது பற்றி ஆராயப்படுகிறது.
பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்படமாட்டாது. எனினும் சிலவற்றை வழங்குவது தொடர்பாக அரசு சிந்தித்து வருகின்றது என்றும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZer2.html
வரும் 10ம் திகதி இலங்கை குறித்த விசாரணைக்குழுவினை நவனீதம்பிள்ளை அறிவிப்பார்!
[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 01:21.21 AM GMT ]
எதிர்வரும் 10ம் திகதி இலங்கை குறித்த விசாரணைக் குழுவினை ஐக்கிய நாடு;கள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பெயரிட உள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி மனித உரிமைப் பேரவையின் சாதாரண அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. அதற்கு முன்னதாக விசாரணைக் குழு நியமிக்கப்பட உள்ளது.
இந்த விசாரணைக்குழு ஜெனீவாவில் இருந்து விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கிற்கு சென்று விசாரணை நடாத்த இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்காது என தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளில் சாட்சியமளிக்க 21 பேர் ஆயத்தமாகி உள்ளதாகவும், இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ததில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்றினை நவனீதம்பிள்ளை நியமிப்பார் என குறித்த சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அண்மையில் 13 பேர் அடங்கிய விசாரணைக் குழுவொன்றினை நியமிக்க உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZer7.html

Geen opmerkingen:

Een reactie posten