[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 12:57.02 PM GMT ]
சிறுதொழில் துறை அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா. இவர், 1986 ஆம் ஆண்டு சூளைமேடு பகுதியில் தங்கியிருந்தார். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதற்கு டக்ளஸ் தேவானந்தாவும், அவரது இயக்கத்தை சேர்ந்த போராளிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் இருதரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் மீது டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், திருநாவுக்கரசு என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அப்போது அமைந்தகரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, டக்ளஸ் தேவானந்தா உட்பட பலரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 1993 ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக கூடுதல் நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பித்தது. இந்த பிடிவாரண்டை ரத்து செய்யவேண்டும் என்றும், தன்னை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், டக்ளஸ் தேவானந்தா மனுதாக்கல் செய்தார். இதற்கு காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, டக்ளஸ் தேவானந்தா மனுவை, நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவை காலதாமதமாக தாக்கல் செய்ததற்கு அனுமதி கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி சூளைமேடு பொலிஸ் அதிகாரிக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafv4.html
பொதுபல சேனா கண்டியில் நாளை மனவுறுதி பூஜை: பொலிஸார் எதிர்ப்பு! கோத்தபாய ஆதரவு
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 01:12.23 PM GMT ]
இந்த கூட்டமானது அளுத்கம கூட்டத்தை போன்று கண்டி முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்த மக்களை தூண்டி விடும் கூட்டம் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் காரணமாக கண்டியில் உள்ள முஸ்லிம்கள் பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
கண்டி மீரா மக்கம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்த போவதாக பொதுபல சேனா அமைப்பு அச்சுறுத்தல் விடுத்திருந்தாக முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் நடைபெறும் மனவுறுதி பூஜைக்கு இலங்கை நான்கு திசைகளிலும் இருந்து வரும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொதுபல சேனா பொலிஸாரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.
கண்டியில் நடைபெறும் மனவுறுதி பூஜைக்கு இலங்கை நான்கு திசைகளிலும் இருந்து வரும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொதுபல சேனா பொலிஸாரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது.
இனவாத தாக்குதலுக்கு நான்கு திசைகளில் இருந்து திட்டமிட்டு வன்முறையாளர்களை பயங்கரவாதிகளே அழைத்து வருபவர்கள்.
எவ்வாறாயினும் பொதுபல சேனாவின் கூட்டத்திற்கு நீதிமன்ற தடையுத்தரவை பெற பொலிஸ் அதிகாரிகள் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த நிலையில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க அவர்களை திருப்பி அழைத்துள்ளார்.
பொதுபல சேனாவின் பூஜைக்கு பின்னர், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மத ரீதியான பகையுணர்வை தூண்டும் சகல கூட்டங்களுக்கும் தடைவிதிப்பது என பொலிஸ் மா அதிபர் நேற்று தீர்மானித்துள்ளதால், தடையுத்தரவை பெற நீதிமன்றத்திற்கு சென்று திரும்பிய அதிகாரிகளை பொலிஸ் மா அதிபர் மீண்டும் நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்.
மத ரீதியான பகையுணர்வை தூண்டும் சகல கூட்டங்களுக்கும் தடைவிதிப்பது என பொலிஸ் மா அதிபர் நேற்று தீர்மானித்துள்ளதால், தடையுத்தரவை பெற நீதிமன்றத்திற்கு சென்று திரும்பிய அதிகாரிகளை பொலிஸ் மா அதிபர் மீண்டும் நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்.
கண்டி நீதவானை அவரது உத்தியோகபூர்வ அறையில் சென்று சந்திக்குமாறு பொலிஸ் மா அதிபர் குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafv5.html
கார்ப் பந்தயத்தை நிறுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 01:59.23 PM GMT ]
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் தவுல்தெனிய ஞானிஸ்ஸ தேரர், ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்கர் நாபான பேமசிறி தேரர், மல்வத்துபீடத்தின் மகாநாயக்கர் வேயங்கொட விஜித்தஸ்ரீ தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பினால் தேசிய மரபுரிமையாக பெயரிடப்பட்டுள்ள கண்டி நகரில், தலதா மாளிகை உள்ளிட்ட புனித தலங்கள் இருப்பதனால், அங்கு இவ்வாறான களியாட்ட நிகழ்வொன்றை நடத்துவது பொருத்தமற்றது என அவர்கள் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafv7.html
போரில் துவண்டுபோன எம் இளைஞர் சமுதாயம் விளையாட்டுக்களில் தான் விசேட திறனைக் காட்டமுடியும்: விக்னேஸ்வரன்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 02:41.18 PM GMT ]
வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் த.குருகுலராஜாவின் ஒழுங்கமைப்பில் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் ஆற்றிய பிரதம விருந்தினர் உரை இங்கே முழுமையாக தரப்படுகின்றது.
பல விதமான தடங்கல்கள் மத்தியிலும் இன்று இந்த விழாவில் கொழும்பில் இருந்து பறந்து வந்து பங்கு பற்றுகின்றேன் என்றால் பொதுவாக விளையாட்டுக்கு எங்கள் மாகாணசபையானது எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றதென்பதை உங்கள் எல்லோர் மனதிலும் நிலை நிறுத்துவதற்காகவே என்று கூறலாம்.
கல்வியும் விளையாட்டும்தான் எங்கள் பாடசாலைகளின், கல்லூரிகளின் மாணவ மாணவியரின் இரு கண்களாக இருக்க வேண்டும். சிலருக்கு விளையாட்டுக்கள் மீது நாட்டமில்லாமல் இருக்கலாம். அத்தகையவர்கள் சங்கீதம், நடனம், ஓவியம், சிற்பம் என்று ஏதாவதொரு கலையில் தமது திறனை வெளிக்கொண்டு வர வேண்டும்.
ஏன் கனணியிலுங் கூடத் தமது திறனை வெளிக்காட்டலாம். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். மனித வாழ்க்கையில் மேம்பாடு அடைய வேண்டும் என்றால் வெறும் கல்வி மட்டும் போதாது.
கல்வி என்பது எமது அறிவுக்கு விருந்து. ஆனால் அந்த அறிவைத் தாங்கும் எமது உடலுக்கு வலு கொடுக்க வேண்டும் என்றால் பலம் பெறச் செய்ய வேண்டும்.
என்றால் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்பார்கள். சுவர் எமது உடல். சித்திரம் நாம் எமது கல்வியிலோ, கலைகளிலோ பெறும் முன்னேற்றம். இந்த உடலை நன்நிலையில் வைத்திருப்பதற்கே விளையாட்டுக்கள் தேவைப்படுகின்றன. ஆகவே கலைகளில் ஈடுபடுபவர்களும் ஏதோ ஒரு வழியில் உடலைப் பராமரித்து வர வேண்டும்.
ஒலிம்பிக்கில் ஒரு வாசகம் பிரபல்யம் பெற்றது. “ஒலிம்பிக்கில் பங்கு பற்றுவதே முக்கியம், வெல்வது அன்று” என்பதே அது. விளையாட்டுக்கள் வெறுமனே உடலுக்கு நன்மை பயப்பன என்று எண்ணுவது மடமை. அவை பலவற்றை எமக்குப் போதிக்கின்றன.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதை விளையாட்டுக்கள் எங்களுக்குப் போதிக்கின்றன. என்னால் முடியும் என்று முயற்சியில் ஈடுபடுபவனுக்கு ஈற்றில் வெற்றி கிடைக்கின்றது.
எந்த ஒரு இலக்கையும் முன்வைத்து அதனையே குறிக்கோளாக நாடி அதன் பால் செல்பவனுக்கு வெற்றியே கிடைக்கும். உங்கள் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்த்தேன். பெருமிதம் அடைந்தேன். அகில இலங்கைப் போட்டிகளில் மாகாணங்களுக்கிடையிலான போட்டியில் 2010லும் 2011லும் ஏழாவது இடத்தைப் பெற்ற எம்மாணவச் செல்வங்கள் 2012லும் 2013லும் அகில இலங்கை ரீதியாக ஆறாம் இடத்தைப் பெற்றுள்ளார்கள்.
2012ல் 178 புள்ளிகளைப் பெற்றவர்கள் 2013ம் ஆண்டில் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள். ஆகவே ஆறாவதாக இருவருடங்களிலும் வந்திருந்தாலும் தமது புள்ளிகளை எமது மாணவ மாணவியர் கூட்டியுள்ளார்கள். அதாவது அவர்களின் முன்னேற்றமும் முயற்சியும் இதிலிருந்து புலப்படுகின்றது. இவ்வாறான முன்னேற்றம் எமக்குத் தேவைப்படுகிறது.
எமது மாணவ மாணவியர், வருங்காலத்தில் மாகாண ரீதியாக முதலிடத்தைப் பெறுவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆசிய விளையாட்டுக்களிலும் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் எமது தமிழ் மகன் ஒருவர் இலங்கை சார்பில் பங்கு பற்றி இதுவரையில் பிரபல்யம் பெற்றுள்ளார். அவர்தான் திரு. நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள். அவர் எங்கள் கல்வி அமைச்சருக்கு உறுதுணையாக நின்று மகத்தான பணிசெய்து வருவது எமக்குப் பலத்த வலுவாக இருக்கின்றது.
இன்றைய கால கட்டத்தில் எமது தமிழ் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்பும் ஒருங்கிணைந்த ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தேவைப்படுகிறது. அந்த விதத்தில் திரு.நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் பாராட்டுக்கு உரியவர்.
சுகமாக எங்கோ அமெரிக்காவில் ஒரு கோடியில் இருக்க வேண்டியவர் இங்கு வந்து எம்முடனே எம் நலன் கருதி வாழ்கின்றார். அவரை முன் மாதிரியாக வைத்து நம்மவர் பலரும் எம் புலம் நோக்கி வரவேண்டும் என்று எதிர் பார்க்கின்றேன்.
எமது அமைச்சர் குருகுலராசா அவர்களும் அவரைச் சுற்றியுள்ள அலுவலர்கள் அனைவரும் மாணவ சமுதாயத்தை முறையான வழியில் கொண்டு செல்லப் பாடுபடுகின்றர்கள். அரசியலுக்கு முதல் இடம் கொடுக்காது திறனுக்குந் தகமைக்கும் முதல் இடம் கொடுக்க முனைந்துள்ளார்கள். அத்துடன் குறிப்பிட்ட சில இடங்களுக்கோ பேர்வழிகளுக்கோ கூடிய முக்கியத்துவம் கொடுக்காது, சகலரையும் ஒன்றிணைத்து ஒருமித்து வழி நடத்த முன்வந்துள்ளார்கள்.
இவ்வருடம் 5 கட்டங்களாகப் போட்டிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கட்டம் 1ல் 5.4.2014ந் திகதியன்று புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து சிலாவத்தை வரையான 21கிலோ மீற்றர் தூரத்திற்கான அரை மரதன் போட்டி நடந்தது.
கட்டம் 2ல் 20.05.2014 தொடக்கம் 28.05.2014 வரை பெருவிளையாட்டுப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்தன.
கட்டம் 3ல் 30.05.2014 தொடக்கம் 7.06.2014 வரையில் பெருவிளையாட்டுப் போட்டிகள் வவுனியா மாவட்டத்தில் நடந்தன.
கட்டம் 4ல் 10.06.2014 தொடக்கம் 18.06.2014 வரை பெருவிளையாட்டுப் போட்டிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்றன.
மேலும் மெய்வல்லுநர் போட்டிகள் 23.06.2014 தொடக்கம் 27.06.2014 வரை யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கில் நடத்தப்படப் போகின்றன.
எனவே வட மாகாணத்தைப் பொதுவாக அணைத்த ரீதியிலேயே போட்டிகள் நடைபெற்றுள்ளன. அடுத்த வருடத்தில் இவை மன்னார், கிளிநொச்சி போன்ற இடங்களிலும், மேலும் முடியுமெனில் எமது தீவகப் பகுதிகளிலும் நடை பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.
சகல பிரதேசங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வீர வீராங்கனைகளை உருவாக்குவது எமது தலையாய கடமையாகும். ஆனாலும் அதே நேரத்தில் எமது பிரதேசங்கள் அதாவது வடகிழக்கு மாகாணங்கள் வேறுபட்ட பிரதேசங்கள் என்பதையும் எமது பிரச்சினைகள்வேறுபட்ட தன்மையன என்பதனையும் நாங்கள் அரசியல் ரீதியாக எடுத்தியம்பி வருகின்றோம்.
இங்கு எமது மொழிவேறு, மதங்கள் வேறு, நிலம் வேறு, மக்கள் வாழ்க்கை முறை வேறு என்றெல்லாம் கூறி அண்மையில் எமக்கு நேர்ந்த அனர்த்தங்கள் மற்றைய மாகாணங்களைப் பாதிக்கவில்லை என்பதால் எமது பிரச்சினைகளும் வேறு அவற்றிற்கான பரிகாரங்களும் வேறு என்று அரசியலில் அடையாளம் காட்டி வருகின்றோம்.
வெகு விரைவில் எமது தகைமைகளும் திறன்களும் வேறு என்பதை நாங்கள் அகில இலங்கை ரீதியாகக் காட்டுவதென்றால் அது விளையாட்டுகளின் மூலமே காட்ட முடியும். எமது மாணவ சிரோமணிகள் விளையாட்டு மைதானத்தில் மற்றவர்கள் யாவரையும் விஞ்சியவர்கள் என்பதை எடுத்துக்காட்ட முன்வரவேண்டும்.
தண்ணீரினுள் ஒரு பிளாஸ்டிக் பந்தை அமுக்கி வைத்திருக்க முடியாது. அது எப்படியாவது மேல் நீர் மட்டத்திற்கு வந்தே ஆகும். போரில் துவண்டு போன எம் சமுதாயத்தின் இளைஞர் கூட்டம் மீண்டும் வலுப்பெற்று வீறு பெற்றுத் தமது விசேட திறன்களை வெளிக்காட்டுவதென்றால் அது விளையாட்டுக்களில்தான் முடியும்.
போட்டிகள் மனதில் வீரத்தையும் வெற்றிக்கான விரைவையும் வைராக்கியத்தையும் உண்டு பண்ணுகின்றன. எமது வீர வீராங்கனைகளுக்கு எனது பாராட்டுக்களையும் பண்பான நன்றியறிதல்களையும் வெளியிட்டு, வருங்காலம் எமது மாணவ சமுதாயத்திற்குப் பொற்காலமாகத் திகழ இறைவன் ஆசி வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்து விடை பெறுகின்றேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafwz.html
Geen opmerkingen:
Een reactie posten